February 2025 - Page 2 of 3 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
previous arrow
next arrow

February 2025 தொடர்கள்

சிலப்பதிகாரமும் ஈழத்துக் கண்ணகி வழக்குரையும்

26 நிமிட வாசிப்பு | 6656 பார்வைகள்

ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களால் போற்றப்பட்டு வழங்கும் கண்ணகி வழிபாட்டு மரபினை வலுப்படுத்தும் வகையில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தினைப் படைத்தார். சிலப்பதிகாரத்தின் அடிப்படைக் கட்டமைப்பானது அக்காலத்தில் வழக்கிலிருந்த ஆசீவக மெய்யியலை பெரிதும் அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. சிலப்பதிகார காலத்திற்குப்பின் தமிழ்ச் சமுதாயம் பல்வகைச் சமய நுழைவுகளுக்கும் இடங்கொடுக்க வேண்டியதாயிற்று; சிலப்பதிகாரக் கால மெய்யியல் மரபுகளின் வீழ்ச்சியினையும் கடக்க வேண்டியதாயிற்று. இவ்வாறான பல்வேறுபட்ட சூழலிலும் ஈழத்தில் கண்ணகி வழிபாடென்பது மரபறாத் தொடர்ச்சியினையுடையதாக இன்றளவும் நடைமுறையில் […]

மேலும் பார்க்க

இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் : தோட்டத் தொழிலாளர் விடுதலைக்கான வழிகாட்டி

13 நிமிட வாசிப்பு | 3692 பார்வைகள்

தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்குப் பெருந்தோட்டக் கட்டமைப்பு, அரசியற்கொள்கை, தொழிலாளர் சட்ட ஏற்பாடுகள், ஊதியமுறை முதலானவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ள கோ. நடேசய்யர், அம்மேம்பாட்டுக்குத் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வையும் சமூக சீர்திருத்தத்தையும் ஏற்படுத்துதலும் இன்றியமையாதன என்பதைத் தன் கள அனுபவங்களூடே கண்டறிந்து, அவற்றை நிறைவு செய்யும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். அதனொரு வெளிப்பாடாகவே ‘இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ என்ற சிறுநூல் அமைந்துள்ளது. ‘தொழிலாளர்கட்கு இன்னல் புரிகின்ற முதலாளி ஆட்சி […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொதுவசதிகள் துறையும் வீடமைப்பும்

14 நிமிட வாசிப்பு | 5005 பார்வைகள்

பொருளாதார வகைப்பாட்டின் கீழ் உள்ளடங்கும் துறைசார் பகுதிகளில் முக்கியமானதான பொதுவசதிகள் துறையானது மின்சாரம், சக்திவளம், எரிபொருள், தொலைத்தொடர்பு, வீடமைப்பு வசதிகள், குடிநீர் வழங்கல் ஆகிய முக்கிய செயற்பாடுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய துறையாகவே பொதுவசதிகள் துறை காணப்படுகின்றது. இந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படும் வீடமைப்புத் துறையின் நிலையைப் பரிசீலிக்கும் போது, பிரதான பொதுவசதிகளில் முதன்மையானதாக வீட்டுவசதியே காணப்படுகிறது. அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உறைவிடம் […]

மேலும் பார்க்க

அரிட்ட பர்வத மலை எனும் ரிட்டிகல மலையில் காணப்படும் நாகர் பற்றிய கல்வெட்டுகள்

10 நிமிட வாசிப்பு | 51922 பார்வைகள்

ஹபரண சந்தியிலிருந்து வடமேற்கு நோக்கி மரதன் கடவல ஊடாக அனுராதபுரத்திற்குச் செல்லும் வீதியில், 11 கி.மீ. தூரத்தில், பாதையின் வலது பக்கத்தில் ரிட்டிகல மலை அமைந்துள்ளது. வடஇலங்கைப் பகுதியில் அமைந்துள்ள மிக உயரமான மலை எனக் கருதப்படும் ரிட்டிகல மலை தரை மட்டத்தில் இருந்து 600 மீற்றர் உயரமுடையதாகும்.  இம் மலை வடக்கு தெற்காக 6.5 கி.மீ நீளமும், கிழக்கு மேற்காக 4 கி.மீ அகலமும் கொண்ட நீண்ட, பெரிய […]

மேலும் பார்க்க

இலங்கையில் பாராளுமன்றத்தின் தோற்றமும் அதன் சுருக்கமான வரலாறும் – பகுதி 1

18 நிமிட வாசிப்பு | 6266 பார்வைகள்

ஆங்கில மூலம் : பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல ‘Parliament: Law, History and Practice’ என்னும் பெயரிலான நூல் ஒன்றை மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனம் (CPA) 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. இலங்கையின் சட்ட ஆக்கத்துறையான (Legislature) பாராளுமன்றத்தின் தோற்றத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் கூறுவதாக மேற்படி நூலின் இரண்டாவது அத்தியாயம் அமைந்துள்ளது. ‘Parliament in its Historical and Constitutional Context’ என்னும் தலைப்புடைய […]

மேலும் பார்க்க

ஈழத்து தமிழ்க் கூத்து உருவாக்கம்: கூத்துகளின் உருவும் கருவும்

19 நிமிட வாசிப்பு | 5941 பார்வைகள்

அறிமுகம் ஈழத்து தமிழ்க் கூத்து ஒன்றல்ல; அது பல வகையின. 1967களில் ஆரம்பித்த தமிழ்க் கூத்து ஆய்வுகள் கடந்த 50 ஆண்டு காலமாக பல தகவல்களையும் சில முடிவுகளையும்  நமக்குத் தந்துள்ளன. அந்த ஆய்வு முடிவுகளின்படி கூத்தின் பல்வேறு பிரிவுகளை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். ஈழத்துத் தமிழ்க் கூத்தின் வகைகள் யாழ்ப்பாணத்தில் வடமோடி, தென்மோடி எனவும்; மன்னாரில் தென்பாங்கு, வடபாங்கு, வாசாப்பு எனவும்; முல்லைத்தீவில் வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்துக் கலந்த முல்லை […]

மேலும் பார்க்க

வடஇலங்கையில் சங்ககால நாணயங்கள் : மீள் பரிசீலனை

13 நிமிட வாசிப்பு | 5525 பார்வைகள்

பண்டுதொட்டு தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இருந்து வருகின்றன. இத்தொடர்புகளே தமிழகத்தில் இருந்து மக்கள் புலப்பெயர்ச்சி, அரசியல் படையெடுப்பு, வர்த்தகம், பண்பாடு என்பன இலங்கையில் ஏற்படக் காரணமாகியது. இதில், வட இலங்கையின் அமைவிடம் இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைவிடத் தமிழகத்திற்கு மிக அண்மையில் அமைந்திருப்பதால் தமிழகத்தின் செல்வாக்கை முதலில் உள்வாங்கிக் கொள்ளும் படிக்கல்லாக இது திகழ்ந்தது. இச்செல்வாக்கு சங்ககாலத்தில் மிகச்சிறப்பாக இருந்ததை கட்டுரை ஆசிரியர் பூநகரி வட்டாரத்தில் கண்டுபிடித்த முதுமக்கள் […]

மேலும் பார்க்க

விதை நிதி (Seed Fund): வடக்கின் தொழில் முயற்சிகளுக்கு ஆரம்ப முதலீடு!

10 நிமிட வாசிப்பு | 4238 பார்வைகள்

தமிழில் : த. சிவதாசன்  மூலம் : marumoli.com, January 22, 2025. 2021 இல் நான் திரு டேவிட் பீரிஸை முதன் முதலாகச் சந்தித்தேன். தொழில் விடயமாக வடக்கிற்கு வந்தபோது யாழ்ப்பாணத்திலுள்ள எனது வீட்டில் நாம் சந்தித்தோம். டேவிட் பீரிஸ் மோட்டர் கொம்பனி (David Pieris Motor Company – DPMC), போர்க்காலமுட்பட, பல தசாப்தங்களாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகிறது. வியாபார முயற்சிகளுக்கும் அப்பால் வடக்கில் தனது நிறுவனம் […]

மேலும் பார்க்க

இலங்கையின் இடுக்கண்

20 நிமிட வாசிப்பு | 5915 பார்வைகள்

ஆங்கில மூலம் : நீல் டி வோட்டா (Neil DeVotta) Source : Sri Lanka’s Agony, Journal of Democracy, Vol.33, No.3, July 2022, pp. 92-99. சர்வாதிகாரம் படைத்த ஓர் குழுவில் இருந்துகொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருப்பவர்கள் இந்தத் தீவை வறுமையிலும் பட்டினியிலும் தள்ளியிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் தவறான ஆட்சிமுறைக்குப் பின்னணியாக ஆழத்தில் அமைந்திருப்பது நீண்டகாலப் பிரச்சினையான பெரும்பான்மையினரின் தடையற்ற ஆட்சிதான். – Journal of […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – வட்டுக்கோட்டை

11 நிமிட வாசிப்பு | 4251 பார்வைகள்

சென்ற கட்டுரையில் மானிப்பாய்க் கோவிற்பற்றைப் பற்றி லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படம் தரும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுத் தொடர்பாக அந்நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பற்றி ஆராயலாம். நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பு வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றில் வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, அராலி ஆகிய மூன்று துணைப்பிரிவுகள் இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், நிலப்படத்தில் இரண்டு துணைப்பிரிவுகளை மட்டுமே குறித்துள்ளனர். வட்டுக்கோட்டை கிழக்குப் பிரிவை […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்