உதவி : ஜீவராசா டிலக்ஷனா இலங்கையில் ஒரு பொதுவான நிர்வாக முறையையும், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியையும், தாராண்மை ஜனநாயக அரசாங்க முறையையும் நிலைநிறுத்துவதற்காக கோல்புறூக்கமரன் குழுவினர் 1829 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி இலங்கை வந்தனர். இவர்களில் கோல்புறூக் குழுவினர் அரசியல் சீர்திருத்தத்தையும், கமரன் குழுவினர் நீதிச் சீர்திருத்தத்தையும் சிபாரிசு செய்தனர். 1831 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி கோல்புறூக் குழுவினர் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தனர். தமது […]
இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியலின் வெளிநாட்டு உறவில் இந்தியா தலையான இடத்தினை வகித்துள்ளது. இலங்கையில் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் குடியேறியிருந்த இந்தியரின் அந்தஸ்து மற்றும் உரிமைகள் தொடர்பான உரையாடல்கள் அதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்தன. இலங்கையின் பெருந்தோட்டங்களிலும் அரச மற்றும் தனியார் துறைகளிலும் 19 ஆம் நூற்றாண்டு முதல் தொழில்புரிந்து வந்த இந்தியரின் சனத்தொகைப் பெருக்கமும் அரசியல் பங்குபற்றலும் சுதேசிய ஆட்சியாளர்களிடையே அதிருப்திகளைத் தோற்றுவித்தன. அதனால் அவ்வாறு குடியேறியவர்களை அந்நியராக அடையாளப்படுத்திய அவர்கள், […]
பிள்ளைப்பிறப்பு தொடர்பாக பல்வேறு சமூகங்களிடையே பலவிதமான வழக்காறுகள் காணப்படுகின்றன. புராதன எகிப்து தொடக்கம் இச்சம்பிரதாயங்கள் காணப்பட்டுள்ளன. பிள்ளை தரிப்பதும், பிள்ளை பெறுவதும் ஒரு பெண்ணிற்கான சமூக அத்தஸ்தை உயர்த்துவதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. தமது குலத்தையும் இனத்தையும் விருத்திசெய்யும் பெண்கள், அதிக பிள்ளைபெறும் பெண்கள் நன்கு மதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிள்ளைகளைச் செல்வங்களில் ஒன்றாகக் கருதி வந்துள்ளனர். பிள்ளைப்பேறு தொடர்பான தனித்துவமான வழக்காறுகள் கிழக்கிலங்கை முஸ்லிம்களிடமும் காணப்படுகின்றன: நேர்ச்சை யாத்திரைகள்: பிள்ளைப்பேறு இல்லாதவர்களும், […]
ஆங்கிலமூலம்: கேட் குரோனின் – ஃபர்மான் சுருக்கம் அடக்குமுறை அரசுகள் எதற்காக மனித உரிமை நிறுவனங்களை உருவாக்குகின்றன? தங்களுடைய பணத்தையும் மூலதனத்தையும் செலவழித்து, சர்வதேச விமர்சனங்களை அமைதிப்படுத்தத் தவறுகின்ற அமைப்புகளை ஏன் உருவாக்குகின்றன? ஐயத்துக்குரியவகையில் மனித உரிமை நடத்தையில் ஈடுபடும் இப்படியான அரசுகள் தாராளவாத மேற்கத்திய அரசுகளையும் சர்வதேச ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்த அல்லது ஏமாற்றுவதற்காக இப்படிச் செய்கின்றன என ஆய்வுகள் கருதுகின்றன. மேற்கத்திய நாடுகளில் மனித உரிமைகளை முன்னெடுத்து ஆதரிப்பவர்களை […]
இப்பகுதி ‘தமிழர்களும் தேசமும்’ எனும் மாதுரிகா இராசரத்தினம் அவர்களின் ஒப்பீட்டு ஆய்வுநூலின் நான்காவதும், ஐந்தாவதுமான அத்தியாயங்கள்மீது பார்வையைச் செலுத்துகின்றது. அவை முறையே ‘பின்-சுதந்திர இந்தியாவில் தேசத்திற்குள் தமிழர்கள்’, ‘தேசத்திற்கு அப்பால்: பின்-சுதந்திர இலங்கையில் சிங்களவரும் தமிழரும்’ எனும் தலைப்புகளைக் கொண்டுள்ளன. நான்காவது அத்தியாயம் பின்-கொலனித்துவ யுகத்தில் தமிழக அரசியல் இயக்கங்களின் பரிணாமங்களுக்கும், இந்தியத் தேசிய அடையாளத்திற்குமிடையிலான தொடர்பு குறித்துப் பேசுகிறது. முதலில், இந்திய அரசியலமைப்பில் உள்ளீடாகவுள்ள இந்தியத் தேசிய அடையாளம் […]
1.1. அறிமுகம் இலங்கை என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இதன் பரப்பளவு 65,526 சதுர கிலோமீட்டர்கள் (25,300 சதுர மைல்கள்). இது, அட்சரேகை 5° 55’ முதல் 9° 50’ வரையும், தீர்க்கரேகை 80° முதல் 82° வரையுமான இடத்தில் அமைந்துள்ளது. நிர்வாக நோக்கங்களுக்காக, நாடு ஒன்பது மாகாண சபைகள் மற்றும் 25 மாவட்ட நிர்வாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2005 இல் மக்கள்தொகை 19,544,988 ஆக இருந்தது (அடர்த்தி: […]
ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன சர்வசன வாக்குரிமையும் கராவ சாதியினரின் வீழ்ச்சியும் 1920களில் சட்டசபை உறுப்பினர்கள், இலங்கையின் அப்போதைய சனத்தொகையின் 4 வீதத்தினரான எண்ணிக்கையுடைய வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களோடு நியமன உறுப்பினர்களும் சட்ட சபையில் அங்கம் வகித்தனர். 1920கள் உண்மையில் கராவ சாதியினரின் பொற்காலம் ஆகும். 1925 இல் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகமானதும், சட்டசபையில் அவர்களின் விகிதாசாரம் குறைந்தது. 1930களில் சர்வசன வாக்குரிமை அறிமுகமானதும் கராவ சாதியினரின் சட்டசபை […]
பீலிவளை புதல்வன் தொண்டைமான் இளந்திரையன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் நாகநாட்டை ஆண்ட அரசர்கள் பௌத்தமதத்தைத் தழுவியிருந்தார்கள். இம்மன்னர்களின் மாண்புகளை மணிமேகலை எடுத்துரைக்கிறது. நாகநாட்டை ஆட்சிபுரியும் மன்னன் ‘வளைவாணன்’ (வளை எறிவதில் வல்லவன்) என்ற பெயரைக் கொண்டவன். அவனது மனைவியான அரசியின் பெயர், வாசமயிலை. அவர்களுக்குப் பிறந்த பெண், பீலிவளை. “நாக நாடு நடுக்கின் றாள்பவன் வாகை வேலோன் வளைவணன் தேவி வாச மயிலை வயிற்றுட் தோன்றிய பீலிவளை என்போள் பிறந்த […]
அறிமுகம் மனிதகுல வரலாற்றில் புதிய கற்காலத்திலேயே (ஏறத்தாழ கி.மு 9000 – 6000) விவசாய உற்பத்தி, ஆயர்வாழ்வு என்பன தோன்றிவிட்டன (Allchin, F.R. 1963, Neolithic Cattle Keepers of South India, Cambridge). தமிழ்ச்சமூகத்திலும் காடுசார் வாழ்வுடைய திணைக்குடிகளான முல்லைநில மக்கள், ஆரம்பத்தில் மேய்ச்சல் நிலத்துக்கான புலம்பெயர்வாளர்களாக இருந்தபோதிலும் நிலையான குடியிருப்புகள் உடையவர்களாகவும் காணப்பட்டுள்ளனர். தரிசாக இருந்த கொல்லை நிலத்தில் (அகம்:89:17) பயிரிடல் மேற்கொள்ளப்பட்டது. காடழித்துக் களனியாக்கப்பட்டது (அகம், […]
அறிமுகம் உலகம் எங்கணும் பரந்துவாழும் தமிழ்ச்சமூகத்தை, தமிழ்ச்சமூகமாக இணைக்கின்ற இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன: ஒன்று, அவர்கள் பேசும் தமிழ்மொழி; மற்றது, அவர்களால் கட்டமைக்கப்பட்ட தமிழ்ப்பண்பாடு. இந்த இரண்டிற்கும் ஒரு வரலாற்றுப்பின்னணியும், வளர்ச்சிப்பின்னணியும் உள்ளது. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே வளர்ச்சிபெற்ற தமிழ்மொழி காலத்திற்கேற்ப மாறிவந்துள்ளது. அதுபோலவே, 3000 வருடங்களுக்கு முன்னரே உருவான தமிழ்ப்பண்பாடும் காலந்தோறும் மாறிவந்துள்ளது. இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டால்தான் தமிழ்ச்சமூகத்தின் அடிக்கட்டுமானத்தையும் கருத்தியலையும் நம்மால் உணரமுடியும். தமிழ் இனத்தின் […]