நவீன விவசாயத்தில் வெற்றி பெற்ற உலக நாடுகள்
Arts
20 நிமிட வாசிப்பு

நவீன விவசாயத்தில் வெற்றி பெற்ற உலக நாடுகள்

May 10, 2023 | Ezhuna

நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும்  ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக – பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட்பங்களால் உண்டாகக்கூடிய விளைவுகள், இலங்கையில் பசுமைப்புரட்சிக்காக முன்வைக்கப்படவேண்டிய விவசாயக் கொள்கைகள் என்பன பற்றி விரிவாகவும், ஆய்வுத்தளத்திலும் இந்தக்கட்டுரைத்தொடர் விபரிக்கின்றது.

அறிமுகம்

விவசாயம் என்பது வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான வருமானம் ஈட்டும் தொழிலாகும் . இது வேலை, வருமானம் மற்றும் உணவு ஆகியவற்றின் முதன்மை ஆதாரமாகவும்  மனிதனின்  அடிப்படைத் தேவைகளை உலகம் முழுவதும் பூர்த்தி செய்கின்ற இயற்கையின் கொடையாகவும் திகழ்கின்றது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) படி, விவசாய மக்கள்தொகையின் பங்கு மொத்த மக்கள்தொகையில் 67% ஆகும். இது மொத்த உணவு  உற்பத்தியில் 39.4% மற்றும் அனைத்து ஏற்றுமதிகளில் 43% விவசாயப் பொருட்களை உள்ளடக்கியது. அதிகரித்துவரும் மனித நடவடிக்கைகள் மற்றும் மனிதக் குடித்தொகைப் பெருக்கமானது உணவு உற்பத்தியிலும் மற்றும் காலநிலை மாற்றத்திலும் பாரிய செல்வாக்குச் செலுத்திவருகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் மற்றும் மண்ணின் விளைதிறன் குன்றியதன் காரணமாகவும் பல வளர்ந்து வரும் நாடுகள் பாரம்பரிய விவசாய முறைகள் மூலம் உள்ளூர் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக, உலகப் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பருவநிலையின் கணிக்க முடியாத தன்மை மற்றும் ஒரு ஆண்டு முழுவதும் பயிர்களைத் தன்னிச்சையாக அழிக்கக்கூடிய பூச்சிகள், தண்ணீர், உட்கட்டமைப்பு மற்றும் சேமிப்பு வசதிகள் இல்லாததால் பல நாடுகள் உணவு உற்பத்தியை மேம்படுத்தப் போராடுகின்றன. விவசாயத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் காரணமாக, அதிக பயிர் விளைச்சலையும்  மற்றும் இயந்திர அறுவடையின் போது உற்பத்தி செய்யப்பட்ட தானியங்கள் மற்றும் பழங்களின் அறுவடை இழப்புக் குறைவு மற்றும் செலவு குறைவு காரணமாக விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வளர்ந்த நாடுகள் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளதோடு ஏற்றுமதி மூலம் அதிக லாபத்தையும் ஈட்டி தமது பொருளாதாரத்தை நிலையான வெற்றியின் பாதையில் நடைபோட வைத்துள்ளன. நவீன விவசாயத் தொழில்நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியில் வெற்றிநடை போடும் நாடுகளையும் அவற்றின் தொழில்நுட்ப முறைகளும் பற்றி  விரிவாக இந்த அத்தியாயம் ஆராய்கிறது.

நவீன விவசாயத்தில் வெற்றி பெற்ற நாடுகள்   

உயர் தொழில்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்தும் போது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள இயற்கை வளங்கள் வீணாவதைத் தடுத்து, தேவையற்ற  செயற்கை விவசாய இயற்கை உள்ளீடுகளின் பாவனையைக்  குறைத்து, சூழல் மாசடைதலை நிறுத்தி, உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தி, குறைந்த காலத்தில் மிகையான உணவு உற்பத்தியைப் பெறலாம். இச்செயற்பாடுகளை மிகவும் துல்லியமான முறையில் செய்யும் நாடுகளாவன;

அமெரிக்கா (United States)

அதிகப்படியான உயர் வேளாண் தொழில்நுட்பங்களுடன் இயங்கும் பண்ணைகளைக் கொண்ட நாடு. கிட்டத்தட்ட  3,475 உயர் தொழில்நுட்ப விவசாய  உள்ளீடுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அமெரிக்கா முழுவதும் காணப்படுகின்றன. Apeel, Plenty, Indigo, GrubMarket and Ginkgo மற்றும் Bioworks போன்ற முன்னணி நிறுவனங்கள் தொழில்நுட்ப விவசாயத்திற்கு துணை நிற்கும் விவசாயத் தொழில்நுட்பங்களை அதிகளவில் உற்பத்திசெய்து வழங்குகின்றன.  அமெரிக்க விவசாயத் துறையில் துல்லிய வேளாண்மை மற்றும் உட்புற செங்குத்து விவசாயம், தானியங்கிப் பண்ணை நடுகை, அறுவடை, உரம் மற்றும் பீடை நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் (automatically guides farm machines), விதைகள் மற்றும் பீடை நாசினிகள், உரம் போன்றவற்றைத் தேவைக்கு ஏற்ப இடும் தொழில்நுட்பம் ( “VRT,” variable rate technology), ஒளி உணரிகள் மூலம் இலைக்கு தேவையான   நைட்ரஜனின் அளவை கணக்கிட்டு தெளித்தல்  தொழில்நுட்பம் போன்றன பரவலாகப் பயன்படுத்தப்படுவதால் உள்ளூர்ச் சூழல்கள் மற்றும் நீர்வழிகளை மாசுபடுத்தக்கூடிய நைட்ரஜனின் அதிகப்படியான பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்படுகிறது. drone கள் (UAS) மூலம் பயிர் நிலத்தில் பீடை மற்றும் நோய்த் தாக்கத்திற்கு உள்ளான தாவரங்களை மட்டும் கண்டறிந்து  பீடை நாசினி தெளிக்கும் தொழில்நுட்பம் போன்றன பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

பிரித்தானியா (United Kingdom)

கடந்த 200 ஆண்டுகளில் தீவிர விவசாய உற்பத்தியின் காரணமாக பிரித்தானியாவின்  பரந்த நிலப்பரப்பு மெதுவாகச் சீரழிந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டில், பிரித்தானியாவின் அப்போதைய சுற்றுச்சூழல் செயலாளரான மைக்கேல் கோவ், நாட்டின் பல பகுதிகளில் மண் வளத்தை அடிப்படையாக ஒழிப்பதில் இருந்து இங்கிலாந்து 30 முதல் 40 ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று எச்சரித்தார். இந்த நெருக்கடி UK ஐ அக்ரிடெக் தீர்வுகளில் அதிக அளவில் முதலீடு செய்ய வழிவகுத்தது, இது 2018 இல் $17 பில்லியன் மதிப்புடைய ஸ்மார்ட்-வேளாண்மைத் துறையின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. 2021 ஆம் ஆண்டில், வாராந்த பிசினஸ் சஞ்சிகையின் அறிக்கையின்படி, துணிகர மூலதனம் மற்றும் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் மூலம் தொழில்துறை அதன் மதிப்பில் மேலும் $1.6 பில்லியனைச் சேர்த்தது. பிரித்தானியாவின் சில குறிப்பிடத்தக்க அக்ரிடெக் ஸ்டார்ட்அப்களில் ஃபார்ம் டிராப், ஈடர் செங்குத்து விவசாயம் மற்றும் அறிவார்ந்த வளர்ச்சி தீர்வுகள் ஆகியவை அடங்கும். இங்கிலாந்து முழுவதும் கிட்டத்தட்ட  689 உயர் தொழில்நுட்ப விவசாய  உள்ளீடுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும்  Dick என்று அழைக்கப்படும் களை பிடுங்கும் இயந்திர மனிதன் (weeding robot); Crover எனப்படும் தானியச் சேமிப்பு கண்காணிப்புத் தொழில்நுட்பம் (Grain Storage Monitoring);  உட்புற செங்குத்து விவசாயத் தொழில்நுட்பத் (Indoor vertical farming technology); செயற்கைக் கோள் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பம் (Advanced satellite imaging and analysis); Agri எனப்படும் மண் ஈரப்பதன் கண்காணிப்பு (Soil Moisture Monitoring); Hover Bird எனப்படும் பீடைகளை கண்காணித்து அழிக்கும் Falco Drone Technologies போன்றன அற்புதமாக விவசாயத்தில் பயன்படுத்தப் படுகின்றன.

கனடா (Canada)

கனடாவில் கிட்டத்தட்ட 632 உயர் தொழில்நுட்ப விவசாய  உள்ளீடுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. விவசாய தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளில் இதுவும் ஒன்று. கனடாவில் துல்லியமான விவசாயத்தின் சந்தைப் பங்கு 2021 இல் $0.9 பில்லியனை எட்டியுள்ளது, இது ஆண்டுக்கு 11.5% அதிகரிப்பைக் காட்டுகிறது. Semios, Goodleaf Farms and 80 Acre Farms ஆகியவை ஸ்மார்ட் விவசாயத் துறையில் பணிபுரியும் பிரபல்யமான நிறுவனங்களில் சில. கனடாவின் 2021 விவசாய ஏற்றுமதி $82 பில்லியன் ஆகும். கனடாவின் விவசாயத் துறை $113.8 பில்லியனை உருவாக்குகிறது மற்றும் எட்டு கனடியர்களில் ஒருவரைப் பணியமர்த்துகிறது (2.3 மில்லியன் வேலைகள்). இதன் ஏற்றுமதி ஆண்டுக்கு $56 பில்லியன் ஆகும். இருப்பினும், விவசாயத் துறையில் புதுமை என்று வரும்போது, பல விஷயங்களில் கனடா இன்னும் முன்னேற வேண்டி இருக்கிறது. மேலும் நீடித்து நிலைத்திருக்கவும், தொழிலாளர் பற்றாக்குறைக்கு பதிலளிக்கவும், பாதுகாப்பான, அதிக வெளிப்படையான உணவு விநியோகத்தை உருவாக்கவும் agtech ஐப் பயன்படுத்த கனடாவுக்கு வாய்ப்பு உள்ளது (படம் 1). கனேடிய விவசாய உணவு ஏற்றுமதிகள் 2025 ஆம் ஆண்டளவில் ஆண்டுக்கு 75 பில்லியன்  டொலர்களை எட்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. GPS-guided tractors; செயற்கை நுண்ணறிவு மூலம் களைகளைக் கண்டறிந்து அழிக்கும் drone (swarm drones with artificial intelligence), உயர் தொழில்நுட்ப மீன் வளர்ப்பு, உணவுப் பொதிசெய்தல் மற்றும் பதப்படுத்தல் தொழிநுட்பங்களை அதிகம் பயன்படுத்துகின்றன.

அவுஸ்திரேலியா (Australia)

விவசாய தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் மொத்தம் 526 உயர் தொழிநுட்ப விவசாய  உள்ளீடுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்களைக் கொண்டிருக்கின்றன. துல்லியமான விவசாயம், நீர் பாதுகாப்பிற்கான ஸ்மார்ட் பாசனம் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை, Farmbot, Goanna AG மற்றும் Stacked Farm போன்ற நிறுவனங்கள் மூலம் நாடு செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமன்றி, கால்நடைப் பண்ணைகளைக் கண்காணிக்க இயந்திரி நாய்கள், Eyes in the sky – satellite and imaging technology, டிரான்ஸ், சென்சார்கள் மற்றும் இன்டர்நெட்  ஒஃப் திங்ஸ் (IOTs) சாதனங்கள் மூலம் இணைக்கப்பட்ட பண்ணைப் பராமரிப்புச்  சாதனங்கள் கழிவுநீரைச் சுத்திகரித்து பயிருக்கு இறைக்கும் துளி மற்றும் சொட்டு நீர்ப்பாசனமுறைகள் போன்றன முக்கியமான தொழில்நுட்பங்களாகும். 

சீனா  (China)

உலகில் விவசாயப் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனாவும் ஒன்று. 2021 இல்   விவசாயத் தொழில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான( 7%) பங்களித்தது. அதிகரித்து வரும் விவசாயக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு நாடு ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவளிக்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக விவசாய தொழில்நுட்பங்களில் கணிசமான முதலீடு செய்ய வழிவகுத்தது. உணவுப் பாதுகாப்பில் தன்னிறைவு பெறுவதற்காக  அதன் ஸ்மார்ட் – விவசாயம் சந்தையை  2015 இல் $14 பில்லியனில் இருந்து 2020 இல் $27 பில்லியனாக வேகமாக வளர்த்துள்ளது. விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், கிடைப்பதை உறுதி செய்வதற்கும், சீனா தனது முக்கிய உணவுப் பொருட்களாக கோதுமை, சோயாபீன் மற்றும் சோளத் துறைகளில் தொழில்நுட்பங்களுக்கான ஆதரவை அதிகரித்தது. இதன் காரணமாக இன்று 368 உயர் தொழில்நுட்ப விவசாயப் உள்ளீடுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. சீன மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் AI, பெரிய தரவு, ட்ரோன்கள் மற்றும் தன்னாட்சி விவசாய உபகரணங்கள் சம்பந்தப்பட்ட கூடுதல் சோதனைகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. சீன அரசாங்கத்தின் கூற்றுப்படி, அவர்கள் செப்ரெம்பர் 2021 இல் 12 மாகாணங்களில் 14 வகையான பயிர்களுக்கு 18 UAV பைலட் விவசாய மண்டலங்களைப் பயன்படுத்தியுள்ளனர், இது தொழிலாளர் செலவில் 50% மற்றும் பூச்சிக்கொல்லிகளில் 30% வரை சேமிக்கிறது.

நெதர்லாந்து (Netherland)

modern-agriculture-2

நெதர்லாந்து வடமேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ பொருளாதாரத்தைக் கொண்ட பணக்கார நாடு. இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாகும். நெதர்லாந்தில் 320 க்கு மேற்பட்ட உயர் தொழிநுட்ப விவசாயப் உள்ளீடுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம்  பெரும்பாலான விவசாய மற்றும் கால்நடைப் பண்ணைகளில் உயர் பசுமைத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்த உதவி புரிகின்றன. வாஷிங்டன் போஸ்ட் மற்றும் உலகப் பொருளாதார மன்றம் Washington Post  and World Economic Forum), போன்றவை நெதர்லாந்தின் விவசாயத்தை தொழில்நுட்பம் சார்ந்த நிலையான விவசாயத்தைப் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியான நாடாக பாராட்டியிருக்கிறது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, வளங்களைப் பயன்படுத்துவதை விட இரண்டு மடங்கு உணவை உற்பத்தி செய்வேன் எனக் கூறி அதனையும் உலகிற்கு செய்து காட்டியது. நீரைக் குறைப்பதற்காக  புவிவெப்ப ஆற்றல் (Geothermal) மற்றும் குறைந்த தண்ணீரை நம்பியிருக்கும் ஹைட்ரோபோனிக் (Hydroponic) அமைப்புகளைப் பயன்படுத்தி வருகின்றது. இந்தத் தொழில்நுட்பங்களை  பசுமை இல்லங்களில் பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள பல விவசாயிகள் முக்கியமான பயிர்களுக்கு தண்ணீரை நம்பியிருப்பதை 90% வரை குறைத்ததோடு,    பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டையும்  அதிகளவில்  குறைத்துள்ளது. புதிய விவசாயத் தொழில்நுட்பங்களைக் கண்டறிவதற்காக புரோட்டிக்ஸ், டிஎன்ஏ மரபியல் மற்றும் பிளாண்ட்லேப் (Plant Lab) போன்றவற்றிற்கான அதி தொழிநுட்ப ஆராய்ச்சிக் கூடங்களையும் நிறுவியுள்ளது.

modern-agriculture-2-1

 நெதர்லாந்தின் பூக்கள், பாற்கட்டி, தக்காளி, மரக்கறிகள், மற்றும் பீர் போன்றன உலகப் புகழ் பெற்றவை. பூக்கள் மற்றும் மரக்கறிகள் மிகத் தொலைவில்  உள்ள நாடுகளுக்கும் அறுவடை செய்த நாளிலேயே கிடைக்கக் கூடியவாறான வகையில் சந்தைப்படுத்தல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகின்ற ஒரு நாடு. அதுமட்டுமன்றி உணவுப் பாதுகாப்பில் மிக முக்கியம் செலுத்தும் முன்னணி நாடு. இதற்காக டச்சு உணவுத்துறை ஸ்மார்ட் ஸ்டோரேஜ் மற்றும் பேக்கேஜிங் (smart storage and packaging) தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது, இது உணவை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்கும். நெதர்லாந்து உணவு உற்பத்தியில் அதன் நிபுணத்துவத்தை வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது, இந்த நாட்டுடன்  விவசாய தொழில்நுட்பம் சார்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை போன்ற நாடுகள் இணைவது மிக முக்கியம்.

ஜேர்மனி (German)

ஐரோப்பாவில் ஜேர்மனி பிரான்ஸுக்கு அடுத்தபடியாக அதிக விவசாய உற்பத்தியைக் கொண்டுள்ளது, ஆனால் பிரான்சை  விட சற்றே அதிக எண்ணிக்கையிலான நவீன விவசாயப் பண்ணைகளைக்  கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஜேர்மனியில் 297 உயர் தொழில்நுட்ப விவசாயப் உள்ளீடுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. 2022 ஆம் ஆண்டில் நாட்டில் அக்ரிடெக் தொழில்துறையின் மதிப்பு கிட்டத்தட்ட $0.684 பில்லியனாக உள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வயல்களிலும் மற்றும் கால்நடைப் பண்ணைகளிலும் காணப்படுகின்றன: சுய-ஓட்டுநர் உயர் தொழில்நுட்ப டிராக்டர்கள், பால் கறக்கும் ரோபோக்கள் மற்றும் உணவு இயந்திரங்கள் ஏற்கனவே பல விவசாயிகளுக்கு நிலையான உபகரணங்களாக உள்ளன. Stable 4.0 எனப்படும் பால் கறக்கும் ரோபோக்கள் மற்றும் உணவளிக்கும் இயந்திரங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு பெரும்பாலும் தானாகவே செய்யப்படுகிறது. பால் கறக்கும் அமைப்புகள் மாடுகளின் நடத்தையைக் கண்காணித்து, விவசாயிகளின் ஸ்மார்ட்போன்களுக்கு தானாகவே செய்திகளை அனுப்புகின்றன. இதன் மூலம் விவசாயிகள்  தங்கள் விலங்குகளின் ஆரோக்கியம் குறித்த தகவல்களை 24 மணிநேரமும் பெறுகிறார்கள். Digital காதுப் படிகள் பண்ணை விலங்குகளை வருடம் முழுவதும் பராமரிக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, மோஷன் சென்சார்கள் மாடு எவ்வளவு நேரம் புற்களை மெல்லுகிறது என்பதைப் பதிவு செய்கிறது, இது விவசாயிகளுக்கு செரிமானப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய அனுமதிக்கிறது. பசுவின் அசைவு விவரங்கள் விலங்குகளின் நல்வாழ்வைப் பற்றி நிறைய வெளிப்படுத்தலாம்: ஒரு மாடு வழக்கத்தை விட அதிகமாக நகர்ந்தால், அது வேட்கை காலத்தில் இருக்கலாம்; அது வழக்கத்திற்கு மாறாக சோம்பலாக இருந்தால், கால்நடை மருத்துவர் அதனைப் பரிசோதிக்க வேண்டும் என எல்லாமே உயர் தொழிநுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் விவசாயம் என்பது விவசாயத்தின் எதிர்காலமாகும், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் திறமையான மற்றும் வளங்களைச் சேமிக்கும் விவசாயத்தை செயல்படுத்துகின்றன. ஜேர்மனியில் உள்ள மொத்த Agri-Tech Startups சிறிய பங்கைக் கொண்டிருந்தாலும், நாட்டில் செய்யப்படும் ஆர் & டி மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நஷனல் சயன்ஸ் ஃபவுண்டேஷனின் (NSF) கூற்றுப்படி, உலகளாவிய அறிவு மற்றும் தொழில்நுட்பத் தீவிர (கேடிஐ) தொழில்துறை உற்பத்தியில் ஜேர்மனியின் பங்கு 6% ஆகும், இது உலகின் மிக உயர்ந்த ஒன்றாகும்.

பிரான்ஸ் (France)

ஐரோப்பாவில் விவசாயப் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு பிரான்ஸ். 2021 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாய உற்பத்தி 1.6% ஆகும். நாட்டில் 2022 நிலவரப்படி 292 உயர் தொழில்நுட்ப விவசாயப் உள்ளீடுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சில Ynsect, Limagrain மற்றும் Agronutris ஆகியவை அடங்கும். செல்லப் பிராணிகளுக்கான ஊட்டச் சத்து ஆதாரங்களாக தானியங்களை மாற்றும் பூச்சி வளர்ப்பில் Ynsect ஈடுபட்டுள்ளது. மறுபுறம், லிமாக்ரேன், GMO மற்றும் GMO அல்லாத விதைகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது, அதே நேரத்தில் Agronutris பூச்சி அடிப்படையிலான கரிம உரங்களை உற்பத்தி செய்கின்றன.

இஸ்ரேல் (Israel)

modern-agriculture

விவசாயத் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளில் இஸ்ரேல் ஒரு முக்கியமான நாடு. நாட்டின் புவியியல் இயற்கையாகவே விவசாயத்திற்கு உகந்ததாக இல்லாவிட்டாலும், இஸ்ரேல் புதிய விளைபொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராகவும், விவசாயத் தொழில்நுட்பங்களில் உலகத் தலைவராகவும் உள்ளது. நிலப்பரப்பில் பாதிக்கும் மேலானது பாலைவனமாகும், மேலும் காலநிலை மற்றும் நீர் ஆதாரங்களின் பற்றாக்குறை விவசாயத்திற்கு சாதகமாக இல்லை. நிலப்பரப்பில் 20% மட்டுமே இயற்கையாக விளைவிக்கக்கூடியது. விவசாயத் தொழிலாளர்கள் 3.7% தொழிலாளர்களை மட்டுமே கொண்டிருந்தாலும், இஸ்ரேல் அதன் சொந்த உணவுத் தேவைகளில் 95% உற்பத்தி செய்கிறது. மற்ற நீர்ப்பாசன முறைகளை விட 20-50% குறைவான நீர் தேவைப்படும் மிகவும் திறமையான நீர்ப்பாசன முறையான சொட்டு நீர் பாசனத்தின் கண்டுபிடிப்பாளரான சிம்சா பிளாஸின் தாயகம் இது. மேலும், ஒரு முக்கியமான இஸ்ரேலிய நீர் நிபுணரான பேராசிரியர் யூரி ஷானி, N-Drip நுண்ணீர்ப் பாசன முறையை உருவாக்கிய பெருமைக்குரியவர், இது விலையுயர்ந்த குழாய்கள் மற்றும் நீர் வடிகட்டிகளுக்கான செலவைக் குறைத்து, 50% நீர்ப் பயன்பாட்டைக் குறைக்கிறது. பூ ஏற்றுமதியில் முன்னோடியாகத் திகழும் இஸ்ரேலில், சுமார் பாதி மலர் வளர்ப்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து பகுதிகளும் மேம்பட்ட, கணினிமயமாக்கப்பட்ட பசுமை இல்லங்கள் மற்றும் சுமார் 12 சதவீதப் பகுதி பாதுகாப்பு வலையின் கீழ் உள்ளன. இஸ்ரேலில் 225 உயர் தொழிநுட்ப விவசாய  உள்ளீடுகளை உற்பத்தி    செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. இஸ்ரேலில் உள்ள சில குறிப்பிடத்தக்க அக்ரிடெக் நிறுவனங்களில் கைமா, ஈக்வினோம் மற்றும் Lindsay Corporation (NYSE:LNN), The Toro Company (NYSE:TTC) and Microsoft Corporation (NASDAQ:MSFT) மற்றும் Microsoft Corporation (NASDAQ:MSFT).  ஆகியவை அடங்கும். இஸ்ரேலிய தொழில்நுட்பங்களான more efficient and sustainable – drip irrigation, water recycling, biopesticides, biofertilizers விவசாயத்தை மிகவும் திறமையானதாகவும் நிலையானதாகவும் ஆக்குகின்றன.

நியூசிலாந்து (New Zealand)

2019 இல் நியூசிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 5.65% ஆகும். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, நியூசிலாந்தில் ஆரோக்கியமான விவசாயத் துறை உள்ளது, இது நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு $1.5 பில்லியன் பங்களிக்கிறது. நியூசிலாந்தில் 185 உயர் தொழில்நுட்ப விவசாய  உள்ளீடுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. இவற்றுள் BioLumic மற்றும் Opo Bio மிகவும் முக்கியமான நிறுவனங்கள் ஆகும்.. BioLumic பயிர்களின் பூச்சி/நோய் எதிர்ப்பு, மகசூல் மற்றும் கடினத்தன்மையை மேம்படுத்துவதற்காக புற ஊதாக் கருவிகள் மற்றும் சிகிச்சை தீர்வுகளைத் தயாரித்து வழங்குகிறது. Opo Bio, கால்நடை வளர்ப்பின் தாக்கத்தை ஈடுசெய்ய, செல் கலாசாரம் சார்ந்த இறைச்சிப் பொருட்களை உருவாக்குகிறது.

ஜப்பான் (Japan)

modern-agriculture-3

விவசாயத் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் ஜப்பான் மற்றொரு கிழக்கு ஆசிய நாடு. உலக வங்கியின் கூற்றுப்படி 2022 ஆம் ஆண்டில் விவசாயத் துறை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஆக உள்ளது. ஜப்பான் அதன் விவசாய ஏற்றுமதியை 2019 இல் இருந்து இரட்டிப்பாக்க விரும்புகிறது, அப்போது அவை $9 பில்லியன் ஆகும். சந்தைத் தேவையை உணர்ந்து 2025 ஆம் ஆண்டுக்குள் 19 பில்லியன்  டொலர் மதிப்புள்ள விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை நாடு இலக்காகக் கொண்டுள்ளது. ஜப்பானில் அக்ரிடெக் துறையின் மதிப்பு $1.66 பில்லியன் ஆகும். அந்த வரிசையில், தொலைதூர கிழக்கு ஆசிய நாடு தனது விவசாயத் தொழிலை தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றி வருகிறது. ஜப்பானில் 76 உயர் தொழில்நுட்ப விவசாய  உள்ளீடுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன.

Spread மற்றும் Routerek ஆகியவை தொழில்துறையை மேம்படுத்தும் மிகவும் புதுமையான நிறுவனங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள். முந்தையது ஹைட்ரோபோனிக்கல் முறையில் வளர்க்கப்பட்ட கீரையை உற்பத்தி செய்கிறது, பிந்தையது சொட்டு நீர்ப்பாசனத்திற்கான சென்சார் அடிப்படையிலான அமைப்புகளை உருவாக்கியுள்ளது. Routerek இன் வணிக மாதிரியானது Lindsay Corporation (NYSE:LNN), The Toro Company (NYSE:TTC) and Microsoft Corporation (NASDAQ:MSFT) ஆகியவற்றைப் போலவே நீர்ப்பாசனத் திறனைப் பொறுத்த அளவில் உள்ளது. ஜப்பானில் டிஜிட்டல் மயமாக்கல் நன்கு நிறுவப்பட்டுள்ளது. ஜப்பான் அதன் சிறிய உழைக்கும் மக்கள்தொகை மற்றும் பழைய சமுதாயத்தின் காரணமாக அதன் திறன் இடைவெளியைத் தீர்க்க தொழில்நுட்பத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதை தொழில்துறை விவசாய நிர்வாகத்துடன் இணைக்கும் ஸ்மார்ட் ஃபார்மிங்கைப் பின்பற்றுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட தொடர்ச்சியான விநியோகத்தின் நோக்கத்தை அக்ரிபிசினஸ் பெற முடியும். ஜப்பானில் உள்ள விவசாயிகள், அறுவடையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு அம்சங்களைக் கண்காணிக்கவும், தகவல்களை ஆய்வு செய்யவும் மற்றும் முடிவுகளை எடுக்கவும் மேம்பட்ட விவசாயத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) என்பது ஜப்பானில் விவசாயத் தொழில் நுட்பங்களில் ஒன்றாகும், இது வேளாண் வணிகக் கண்காணிப்புத் தோட்டங்களுக்கு உதவுகிறது. வேளாண் வணிகமும் விவசாயிகளும் ஜப்பானில் எதிர்பாராத வானிலையைக் கண்காணிக்க பயிர் அல்லது பச்சை இல்லங்களைச் சுற்றியுள்ள இடத்தில் பல சென்சார்களைப் பயன்படுத்துகின்றனர்.

தென்கொரியா (South Korea]

2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, 1.8 டிரில்லியன்  டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், கிழக்கு ஆசியாவில் உள்ள தென் கொரியா பணக்கார மற்றும் அறிவியல் ரீதியாக முன்னேறிய நாடுகளில் ஒன்றாகும். நாட்டின் முக்கியமான பயிர் நெல். நாட்டில் ஸ்மார்ட்-வேளாண் சுற்றுச்சூழல் அமைப்பு வேரூன்றி உள்ளது. 2014 ஆம் ஆண்டில், 405 ஹெக்டேயர் நிலம் மற்றும் 23 குடும்பங்கள் முறையே ஸ்மார்ட் பண்ணைகள் மற்றும் ஸ்மார்ட் கால்நடைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டில், இந்த புள்ளிவிவரங்கள் முறையே 6,485 ஹெக்டேயர் நிலமாகவும், 4,743 கால்நடை குடும்பங்களாகவும் உயர்ந்துள்ளன. தென் கொரியாவில் 72 உயர் தொழில்நுட்ப விவசாய  உள்ளீடுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. அவை தொழில்துறையை மேம்படுத்தும்  மற்றும் விவசாய நிலைத்தன்மை தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க முயற்சிக்கின்றன. முக்கியமான நிறுவனங்களில் Green Labs, G+ Flas Life Sciences மற்றும் EGG Tube ஆகியவை அடங்கும்.

உசாத்துணை

  1. www.avirtech.co/countries-with-the-best-agricultural-technology
  2. www.insidermonkey.com
  3. finance.yahoo.com/news
  4. www.usda.gov/media/blog

ஒலிவடிவில் கேட்க

30381 பார்வைகள்

About the Author

கந்தையா பகீரதன்

கந்தையா பகீரதன் அவர்கள் 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் விவசாய விஞ்ஞான இளமாணிப் பட்டத்தைப் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டுமுதல் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். இவர் 2012ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பிற்கான விவசாய நிறுவகத்தில் தாவர பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தனது முதுமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். பின்னர் இவரின் ஆராய்ச்சித் திறமைகளுக்காக 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பட்டப்பின் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில் மற்றும் அவுஸ்திரேலியன் முதுகலை விருதையும் (IPRS&APA) பெற்று அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்றியல் தாவர பாதுகாப்புப் பிரிவில் கலாநிதிப் பட்டத்தை 2017 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் மற்றும் விவசாய உயிரியல் துறையின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். இவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை 30இற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகளில் முன்னிலைப்படுத்தியதோடு மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற சஞ்சிகைகளிலும் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரசுரித்துள்ளார். இவர் எழுதிய ‘அந்நியக்களை பாதீனியம்: அடங்க மறுப்பது ஏன்? அறியாததும் புரியாததும்’ என்ற நூல் வெளிவரவுள்ளது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)