பல்லவர் தொடர்பு ஏழாம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில் ஸிலாமேக வண்ண மன்னன் (619 – 628) அநுராதபுரத்தில் ஆட்சி நடத்தியபோது ஸிரிநாக என்பான் தமிழர் படை ஒன்றின் உதவியுடன் அநுராதபுரத்து மன்னனைத் தாக்கி அரசைக் கைப்பற்ற முயன்றான். அவனுடைய படை உத்தரதேஸத்திலிருந்தே தெற்கு நோக்கி அநுராதபுரத்துக்கு முன்னேறியது. ஆட்சியைக் கைப்பற்ற எண்ணிய தலைவன் ஒருவன் வட பகுதியிலிருந்து படை கொண்டு சென்றமை கவனிக்கத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும். இதன்பின் அடிக்கடி இப்படியான […]
சமய அபிவிருத்திகள் தேரவாத பௌத்தம் தமிழ்நாட்டில் தேரவாத பௌத்தம் எழுச்சி பெற்றதன் விளைவாக அங்கு பாளி இலக்கியம் சிறப்புற்று வளர்ந்தது. இந்த வரலாறு இன்று மறக்கப்பட்ட ஒரு வரலாறாகி விட்டது. நான்காம் நூற்றாண்டு தொடக்கம் ஆறாம் நூற்றாண்டின் இறுதிவரை, தமிழ்நாட்டில் இருந்த தேரவாத பௌத்த மையங்களில், சிறப்பாகக் காஞ்சி, மதுரை, காவிரிப்பட்டினம் மற்றும் உறையூர் ஆகிய நகரங்களில் அமைந்திருந்த பௌத்தப் பெரும் பள்ளிகளில் தலைசிறந்த பௌத்த அறிஞர்கள் பாளி மொழியில் […]
ஆதி வரலாற்றுக் காலத்துக்குப் பின் அடுத்து வந்த நூற்றாண்டுகளில் தொடர்ந்து இரு பிரதான இனக் குழுக்களின் ஆக்கம் நடைபெற்றது. பொ.ஆ. 300க்கும், 900க்கும் இடையில் மிகவும் தெளிவாகத் தனித்துவப் பண்புகளுடன் இவை பரிணாம வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தன எனலாம். முதல் தடவையாக இக் காலத்துக் கல்வெட்டுகளில் சிங்கள மொழியின் பழைய வடிவமாகிய ஹௌ (எளு) மொழியில் சிங்கள இனக் குழுவுக்கு ஹௌ என்ற பெயரும் தமிழ் இனக் குழுவுக்கு […]
கிறிஸ்துவுக்கு முற்பட்ட முதலாம் நூற்றாண்டின் மூன்றாம் காலின் ஆரம்பத்திலிருந்து கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட ஐந்தாம் நூற்றாண்டின் இரண்டாம் கால் வரையுள்ள ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டு காலமாக இலங்கையிலே தமிழ் மன்னன் எவரும் ஆட்சி புரியவில்லை. எனினும் இக் காலப்பகுதியிலே தமிழ் மக்கள் முன்போலத் தொடர்புகளை ஏற்படுத்தி இந்நாட்டுக்கு வந்திருக்க வேண்டும். மன்னரைப் பற்றியும் பௌத்த சங்கத்தைப் பற்றியும் எழுதி வைத்த பழைய வரலாற்றாசிரியர்களுக்கு மக்கள் வரலாற்றிலே அக்கறை இருக்கவில்லை. இதனால் தமிழ் […]
வரலாறு மலையகம் என்பதன் பொதுவான அர்த்தம் பரந்துபட்டது. மலையகத் தமிழ் சனத்தொகையின் அளவு இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் 5.6 வீதமாக அமைந்துள்ளது. இவர்கள் இலங்கையின் சில மாவட்டங்களில் செறிவாகவும் பல மாவட்டங்களில் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர். மலையக அதிகார சபைச் சட்டமானது (2018, இல. 32), பெருந்தோட்டப் பிராந்தியம் எனப்படும் பகுதியை, இலங்கையின் மத்திய – ஊவா – சப்ரகமுவ – மேல் – தென் – வடமேல் ஆகிய […]
ஈழத்தின் வாயிலாக அமைந்த மணிபல்லவத்தில் புத்தர் முதன்முதலாக வந்தார் எனப் பௌத்த நூல்கள் கூறுகின்றன. புத்தர் வந்தார் என்பது மகிந்தர் முதலான தேரர்களின் வருகையைக் குறிப்பதாகும். தமிழ் நாகர்களின் அரசில் மணிபல்லவம் முதல்நிலை பௌத்த புனிதத் தலமாயிற்று. நாக அரசைக் கடந்து அநுராதபுரம் சென்ற மகிந்தன் அங்கு சமயப் பரப்புரை செய்ய எடுப்பித்த விகாரை பிற்காலத்தில் மகிந்தலை (மகிந்தனின் தலைமையிடம்) என அழைக்கப்படுவதாயிற்று. தமிழ் பௌத்தருக்கு மணிபல்லவம் தலை இடம் […]
தமிழகத்தில் வழங்கும் சமயங்களினைப் புறத்தே இருந்து வந்த சமயங்கள், அகத்தே நிலவிய சமயங்கள் எனும் இரு பிரிவுகளில் அடக்கலாம். சமணம், பௌத்தம் முதலானவை சங்ககால தமிழ்ச் சமூகவியலில் புறத்தேயிருந்து வந்த பெருஞ் சமயங்களாகும். ஆசிவகம் தமிழகத்திலிருந்தே நாவலத்தீவு முழுதிற்கும் பரவிற்று என்று ஒரு சாரரும், வடகோடியிலிருந்தே தமிழகம் போந்ததென்று ஒருசாரரும் குறிப்பிடுவர். புறச்சமயங்கள் தமிழ்த் தாயகங்களுக்கு எவ்வகையில், எவ்விடத்தின் வழிநுழைந்தன என்பனவற்றினைக் குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளுவதற்கு, அச் சமயங்களின் […]
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக அழைத்து வரப்பட்ட மக்கள் கூட்டத்தினரோடு மலையகச் சமூகம் தோற்றம் பெறலாயிற்று என்பது யாவரும் அறிந்த உண்மை. அவர்களால் உருவாக்கப்பட்ட சமூக, பண்பாட்டுத் தளத்திற்கு 200 ஆண்டுகால வரலாறு உண்டு. வலியுடன் காலூன்றி வாழும் எம் மக்களிடம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பின்னர், இலக்கிய முயற்சிக்கான அடித்தளம் மெது மெதுவாகத் துளிர் விடத் தொடங்கியது. ஆரம்ப காலங்களில் மலையக இலக்கியத்தில் ஆண் படைப்பாளர்களே தங்களின் […]
கி.மு.3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்னர் இங்கு நிலவிய பெருங்கற்காலப் பண்பாட்டுடன் பொதுவானதொரு பண்பாடு இலங்கை முழுவதிலும் காணப்பட்டது. இப்பண்பாட்டின் பரவல், செறிவு, வளர்ச்சி, அவற்றின் வளங்கள் என்பன இடத்திற்கு இடம் வேறுபட்டு காணப்பட்டமைக்கு அவ்வவ்விடங்களில் காணப்பட்ட பௌதீக வளங்கள் காரணமாக இருப்பினும் அவை பெருங்கற்காலப் பண்பாட்டுடன் ஏற்பட்ட அபிவிருத்திகளாகும். இப்பண்பாடு அறிமுகமாவதற்கு முன்னர் இலங்கையில் மலைநாடு தொட்டு தாழ்நிலம் வரை ஏறத்தாழ 75 இற்கு […]
யாழ்ப்பாணத்தில் வல்லிபுரத்திலிருக்கும் விஷ்ணு கோயிலுக்குச் சமீபமாக இருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகளைப் பற்றி அப்பகுதி மக்கள் பல தலைமுறைகளாக அறிந்திருந்தார்கள். 1916 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த லூயிஸ், வல்லிபுரத்தைப் பார்வையிடச் சென்ற சமயம் விஷ்ணு கோயிலின் பூசகர் அப்பகுதியிலிருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகளை அரசாங்க அதிபரைக் கூட்டிச் சென்று காண்பித்தார். இதைத் தொடர்ந்து வல்லிபுரத்திலிருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகள் இருந்த இடத்தில் 1936 இல் அகழ்வுகள் […]