மூலிகைகள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை | உள்ளூர் உற்பத்திகள் | வைத்தியர். யோ. மதீஸன், பொது முகாமையாளர், சித்த மருந்துகள் உற்பத்தி நிலையம்
5499 பார்வைகள்
சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் 1992இல் ஆரம்பிக்கப்பட்டது. மூலிகைத் தாவரங்கள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் வளங்களை சரிவர பயன்படுத்த முடியாதுள்ளது. காரைநகரிலுள்ள கடுக்காய் பற்றி அந்தப் பிரதேச மக்கள் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. தற்போது நாங்கள் அது தொடர்பில் விழிப்பூட்டி அங்கிருந்து மருந்துக்கு தேவையான கடுக்காயைப் பெற்றுவருகின்றோம். நிதிப் பிரச்சினையால் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமமாகவுள்ளது. மூலிகை மருந்து உற்பத்திகளை அதிகரிப்பதன் ஊடாக பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் […]
மேலும் பார்க்க
கருத்தியல் ரீதியான பிளவுகள் சிவில் சமூக செயற்பாடுகளுக்கு தடையாக உள்ளன | சிவில் சமூக அமைப்புகள்: சவால்கள் | அருட்பணி ராஜன் றோகான், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம்
6461 பார்வைகள்
மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் அல்லது அரச ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளில் உத்வேகத்தோடு மக்களை இணைத்துக்கொண்டு போராடுவதில் பல சவால்கள் உள்ளன. ஆண்களின் மேலாதிக்க அரசியல், பொருளாதார சிந்தனை சரியான, முழுமையான சிவில் சமூக செயற்பாட்டிற்கு பொருத்தமானதாக இல்லை. மட்டக்களப்பில் இருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் இரு கருத்தியல்கள் உள்ளன.
மேலும் பார்க்க
முடிவுப்பொருளாக மாற்றுவதற்குரிய பொறித்தொகுதி இல்லை | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | செல்லத்துரை றெஜி, முகாமையாளர், பண்டத்தரிப்பு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம்
2587 பார்வைகள்
எங்களுடைய உற்பத்திகள் எல்லாம் பருவகால உற்பத்திகள். பனங்காயை அன்றைய தினமே பயன்படுத்த வேண்டும். ஆனால் எம்மிடமுள்ள வளங்களைக் கொண்டு குறித்தளவு பனங்களியே எடுக்க முடியும். எமது உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பு தாராளமாக உள்ளது. சந்தைக்கு பொருள்களை வழங்குவது தான் சிக்கல். மூலப்பொருள்களை முடிவுப்பொருளாக மாற்றுவதற்குரிய பொறித்தொகுதி இல்லை. பொருத்தமான பொறித்தொகுதியை அடையாளம் காண்பது சவாலாக உள்ளது.
மேலும் பார்க்க
அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகளை ஒருபொருட்டாக கருதுவதில்லை | சிவில் அமைப்புகள் | நா. இன்பநாயகம்
2847 பார்வைகள்
சிவில் சமூக செயற்பாடுகள் பலவீனமடைந்து செல்லும் நிலையையே காணமுடிகின்றது. அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புகளை ஒருபொருட்டாக கருதுவதில்லை. கட்சிகளுக்குள்ளும் கூட்டு முடிவு இல்லை. இந்த ஆண்டு இரு கதவடைப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த போராட்டங்களால் அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்களின் நலன்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளன. மாறாக அரசியல் விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. குறிப்பிட்ட சில சிவில் சமூக அமைப்புகள் மட்டும் தான் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கின்றன, உரையாடுகின்றன, […]
மேலும் பார்க்க
கொரோனா நெருக்கடியிலும் கர்ப்பவதிகளுக்கான சத்துமாவை தடையில்லாது விநியோகித்தோம் | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | உதயகுமார் சுதாஜினி, சரஸ்வதி உற்பத்திகள், உரும்பிராய்
2977 பார்வைகள்
1/2 கிலோ சத்துமாவுடன் தொடங்கினேன். தற்போது மாதம் 300கிலோ சத்துமாவுக்கும் அதிகமாக விநியோகிக்கின்றேன். எமது கிராமத்தையும் கடந்து வெளி மாவட்டங்களுக்கும் சத்துமாவை விநியோகிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். வெளியிலிருந்து வரும் உற்பத்திகளோடு போட்டி போடும் போது எமக்கு சவால்கள் அதிகமாயுள்ளன
மேலும் பார்க்க
ஜனநாயக ரீதியில் போராடுவதற்கும் புலனாய்வாளர்கள் தடையாக இருக்கிறார்கள் | சிவில் சமூக அமைப்புகள்: சவால்கள் | அன்னலிங்கம் அன்னராசா, கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
3393 பார்வைகள்
ஒற்றுமையாக இருந்த வடக்கு கடற்றொழில் சமூகத்தை கடற்றொழில் அமைச்சர் பிளவுபடுத்தி வைத்துள்ளார். சீனாவிலிருந்து மீன் இறக்குமதி செய்வதால் வடமராட்சி கிழக்கில் சூடையின் விலை 30ரூபா, கும்பிளாவின் விலை 150 ரூபா. 250 ரூபாவுக்கு மண்ணெண்ணெய் தந்துவிட்டு 150 ரூபாவுக்கு மீனை எடுத்தால் எப்படி கடற்றொழில் சமூகம் உழைத்து வாழ்வது? கடலட்டை பண்ணை சாதகமானதா பாதகமானதா என்பது தொடர்பில் ஆய்வுசெய்து தருமாறு யாழ்.பல்கலைக்கழக கடற்றொழில் பீடத்திடம் நாம் ஒரு சிவில் சமூகமாக […]
மேலும் பார்க்க
பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நோக்கம் | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | வே.செல்வகாந்தன், முகாமையாளர், சுன்னாகம் பல.நோ.கூ.ச
2171 பார்வைகள்
ஜசுபி உற்பத்திகள் இயற்கையில் கிடைக்கும் பழங்களைக்கொண்டு செய்யப்படுகின்றன. எமது உற்பத்திக்கான பழங்களை அயலிலுள்ள 150க்கும் மேற்பட்ட விவசாயிகளிலிருந்து பெற்றுக்கொள்கின்றோம். தென்பகுதி மக்கள் இங்கு வரும்போது நெல்லிரசங்களை எம்மிடம் அதிகம் பெற்றுக்கொள்கின்றார்கள்
மேலும் பார்க்க
விரக்திகளின் எல்லைகளுக்கு அப்பாலும் தொடர்ந்து இயங்கக்கூடிய மனத்திடம் தேவை | சிவில் சமூக அமைப்புகள்: சவால்கள் | அருட்தந்தை ரவிச்சந்திரன் இமானுவேல், தமிழ் சிவில் சமூக அமையம்
2457 பார்வைகள்
சிவில் சமூக அமைப்புக்களை, அரசியல் விழிப்புணர்வுடன் செயற்படுவோரை அச்சுறுத்தலாக பார்க்கும் பார்வை தமிழ்த்தேசிய கட்சிகளிடம் காணப்பட்டது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் எதிர்வினையாற்றுகின்றோமே தவிர எமக்கான ஒரு தெளிவான திசையையும் பயணத்தையும் கொண்டிருக்கவில்லை. நாங்கள் விரும்புகின்ற திசையிலே எமது இலக்கை தெளிவாக வரையறுத்துக்கொண்டு அதனை நோக்கி நகரும் போதே இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்.
மேலும் பார்க்க
10 வயதில் பொழுதுபோக்காக பழகிய தொழில் இன்று வாழ்க்கையாக மாறியுள்ளது | ரவிக்குமார் ரத்னவள்ளி
2314 பார்வைகள்
இது எங்களுடைய பரம்பரைத் தொழில். நான்காவது தலைமுறையாக நான் செய்கின்றேன். நானும் எனது கணவரும் இணைந்து இதனை ஆரம்பித்தோம் தற்போது ஐந்து பேர் இதில் முழுநேரமாக பணிபுரிகின்றனர். களிமண் கொண்டுவருவதில் இருக்கும் சிக்கல்களால் இந்தத் தொழிலை பலர் கைவிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க
சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பின்வாங்குபவர்களாக இருக்கக்கூடாது | ரஜனி ராஜேஸ்வரி, வல்லமை
2405 பார்வைகள்
சிவில் சமூக செற்பாட்டில் ஈடுபடுவதற்கு நேரம் போதாமை என்பதற்கு அப்பால் சலிப்புத் தன்மையை நான் அவதானித்துள்ளேன். ஊடகங்கள் அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றாக பழகியவர்களுக்குமே முன்னுரிமை அளிக்கின்றன. ஊடகங்கள் அரசியல்வாதிகளால் சிவில் சமூக அமைப்புகளின் போராட்டங்கள் திசைதிருப்பப்படுகின்றன. சிவில் சமூக வலைமைப்புகள் இன்றும் ஆண்களை மையப்படுத்தியனவாகவே உள்ளன. அரசியலில் ஈடுபடும் பெண்கள் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும்போது அரசிய கட்சிகளின் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.
மேலும் பார்க்க