தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று மரபு கொண்ட ஒரு நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் பரவியபோது கூடவே அம் மத வரலாற்றைப் பேணும் மரபும் அறிமுகமாகியது. இவ்வரலாற்று மரபை அடிப்படையாகக் கொண்டு தீபவம்ஸ (கி.பி 4 ஆம் நூற்றாண்டு), (மகாவம்ஸ கி.பி 6 ஆம் நூற்றாண்டு), சூளவம்ஸ முதலான பாளி நூல்கள் எழுந்தன. இவை பௌத்த விகாரைகளில் வைத்து எழுதப்பட்டதினால் அம் […]
அறிமுகம் இலங்கைத் தமிழரின் பாரம்பரியத் தாயகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஆதிக்குடிகள், அவர்களின் மொழி, பண்பாடு என்பன பொறுத்து வரலாற்று ஆசிரியர்களிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இற்றைக்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் இங்கு தொன்மையான தமிழர் நாகரிகமும், சுதந்திர தமிழரசும் ஆதியில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உறுதியான தொல்லியல் ஆதாரங்கள் அற்ற நிலையில் இலக்கியச் சான்றுகளை மட்டும் வைத்து இக்கருத்து கூறப்பட்டதினால் பிற்கால […]
அண்மைக்காலத்தில் வடஇலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள முக்கிய தொல்லியல் மையங்களில் தீவகத்தில் உள்ள சாட்டியும் ஒன்றாகும். இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஆறு மைல் தொலைவில் வேலணைப் பிரதேசத்தில் உள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இலங்கையின் வரலாற்றுப் பழைமை வாய்ந்த துறைமுகங்களைக் கொண்ட கிராமம் என்ற வகையில் சாட்டிக்குத் தனித்துவமான வரலாற்றுச் சிறப்புண்டு. இதன் அமைவிடம் புவிச் சரிதவியல் அடிப்படையில் தமிழகத்திற்கு மிகக் கிட்டிய தூரத்தில் அமைந்திருப்பதால் இவ்விடம் பண்டுதொட்டு தென்னிந்தியாவுடனும், […]
இலங்கைத் தமிழரிடையே அரச மரபு தோன்றி வளர்ந்த வரலாற்றை ஆராய முற்படும் ஒருவர் அதன் தொடக்கப் புள்ளியாக தலைநகர் கதிரமலையைக் குறிப்பிடுவார். இதற்கு, 17 – 18 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை முதலான தமிழ் இலக்கியங்களில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில் உக்கிரசிங்க மன்னன் சோழ இளவரசியான மாருதப்புரவல்லியை பட்டத்தரசியாகக் கொண்டு கதிரமலையில் இருந்து ஆட்சி செய்த வரலாறு கூறப்பட்டிருப்பது முக்கிய காரணமாகும். இக் […]
சமகாலத்தில் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ள வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம் பொதுவாக வன்னி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வன்னி உள்ளிட்ட வடஇலங்கை பாளி மொழியில் நாகதீபம், உத்தரதேசம் எனவும், தமிழில் நாகநாடு எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி. 13 ஆம் நாற்றாண்டின் நடுப்பகுதியில் பொலநறுவை அரசு வீழ்ச்சியடைந்து சிங்கள இராசதானி தெற்கு நோக்கி தம்பதெனியாவிற்கு நகர்ந்த […]
அறிமுகம் தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. இதற்கு, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கைக்கு அறிமுகமாகிய போது அம்மதத்தையும் அம்மதம் சார்ந்த அரசியல், பொருளாதாரம், பண்பாடு என்பவற்றின் வரலாற்றையும் வாய்மொழிக் கதையாகப் பேணும் மரபும் தோற்றம் பெற்றதே காரணமாகும். அவ்வாறு பேணப்பட்ட வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டே தீபவம்சம், மகாவம்சம, சூளவம்சம் முதலான பாளி வரலாற்று இலக்கியங்கள் […]
கட்டுக்கரையைத் தொடர்ந்து வடஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு முக்கிய பெருங்கற்கால பண்பாட்டு மையமாக நாகபடுவான் என்ற இடம் காணப்படுகின்றது. இவ்விடம் பூநகரிப் பிராந்தியத்தில் முழங்காவிலுக்கு அண்மையில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் இலங்கையில் நாக வழிபாட்டு மரபு தோன்றி வளர்ந்த வரலாறு பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்குப் புதிய செய்திகளைக் கூறுவதாக இருக்கின்றன. எமது அறிவுக்கு எட்டியவரை இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சில வகையான சான்றுகள் தென்னாசியாவின் […]
தென்னாசியாவில் பண்டு தொட்டு பெரிதும் புழக்கத்தில் இருந்து வந்த ஒரு பெயராக வடமொழியில் ‘நாஹ’ என்ற பெயரும், தமிழில் ‘நாகம், நாகன், நாகர்’ என்ற பெயர்களும் காணப்படுகின்றன. மத வழிபாட்டில் நாகத்தை குலமரபுத் தெய்வமாகக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. வட இந்தியாவில் அரசமைத்த குப்தரும், தக்கணத்தில் ஆட்சி புரிந்த சாதவாகனரும் தம்மை நாக குலத்தவர் என அழைத்துக் கொண்டனர். தமிழகத்தின் பண்டைய தலைநகரான நாகபட்டினம் நாகரின் தலைநகர் […]
ஆனைக்கோட்டை முத்திரை தொடர்பாகச் சமீபத்தில் வெளிவந்த ஆய்வுகள் சிலவற்றில் முத்திரையில் பொறிக்கப்பட்டிருந்த சில எழுத்துக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்குப் புதிய வாசிப்பும், புதிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வந்திருப்பதைக் காணமுடிகின்றது. முத்திரையில் காணப்படும் எழுத்துக்களுக்கு அறிஞர்கள் வேறுபட்ட வாசிப்புக்களும், விளக்கங்களும் கொடுத்து வருவது அவர்களுக்குரிய சுதந்திரமாகவே நோக்கப்படும். ஆனால் அவற்றின் எழுத்துக்களை மாற்றிவிட்டு அதற்கு புதிய வாசிப்புகளும் விளக்கங்களும் கொடுப்பது திட்டமிட்ட வரலாற்றுத் திரிபாகவே பார்க்கப்படும். இத் தவறுகளை ஊடகங்கள் மூலம் […]
இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட முதலாவது அரசாக நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண அரசு காணப்படுகின்றது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஆட்சியில் இருந்த இவ்வரசின் ஆதிக்கத்துக்குள் வடஇலங்கையும் கிழக்கிலங்கையின் சில பாகங்களும், சில சந்தர்ப்பங்களில் தென்னிலங்கையும் உள்ளடங்கியிருந்தது. இவ்வாறு ஏறத்தாழ 350 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இவ்வரசின் வரலாற்றை அறிய உதவும் நம்பகரமான ஆதாரங்களில் ஒன்றாக அவ்வரசு காலத்தில் […]
சிலப்பதிகார காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கண்ணகி வழிபாடானது தமிழுலகெங்கும் பரவி இருந்ததெனலாம். இதனை “ஒருமா முலை இழந்த திருமா உண்ணி” என்னும் நற்றிணைப் பாடலடிக் குறிப்பின் வழியும் உணரலாம். சிலப்பதிகாரத்தின் பல பகுதிகளில் இளங்கோவடிகள் கண்ணகி வழிபாடு பல்லாண்டுகளாக இருந்து வருகின்றமைக்கான சான்றுகளைக் குறிப்பாக வழங்கிச் சென்றுள்ளமையினைக் காணலாம். கண்ணகி வழிபாடானது உலகம் முழுமையும் பரவிய நிலையினை, அருஞ்சிறை நீங்கிய வாரிய மன்னரும்பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னருங்குடகக் கொங்கரு […]
பண்டைத் தமிழர் பல வகைப்பட்ட வழிபாட்டு மரபுகளை உடையவர்களாக விளங்கினர். இவ்வழிபாட்டு முறைகள் திணைசார்ந்த நிலையிலும் தொழில், சமூக வாழ்வியல் சார்ந்த நிலைகளிலும் அமைந்திருந்தன. அவ்வகையான வழிபாட்டு முறைமைகளிற் சில இன்று வழக்கருகிவிட்டன. சான்றுகளாக பல தேவன் வழிபாட்டினையும் வருணன் வழிபாட்டினையும் குறிப்பிடலாம். சங்க காலத்தில் பெருவழக்காக விளங்கிய இவ்வழிபாட்டு முறைகள் படிப்படியாகக் குறைந்து இன்று வழக்கற்றுப் போய்விட்டமை காணக்கூடியதாகின்றது. அவ்வாறில்லாமல் சங்ககாலம் தொட்டு இன்றளவும் தொடர்ந்து வரக்கூடிய வழிபாட்டு […]
இலங்கையில் விஜயனின் வருகைக்கு முன்பும், பௌத்த சமயத்தின் வருகைக்கு முன்பும், ஆசீவகச் சமயம் செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கான பல சான்றுகளை மகாவம்சம் முதலான பாளி மொழி நூல்களின் வழியாகவும், தமிழர் – சிங்களர் முதலானோரின் வாழ்வியல் தொன்மங்கள் வழியாகவும் அறியலாம். கி.பி.6 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கை அரசர்களின் மரபுகளைக் கூறக்கூடிய மகாவம்சம் என்ற நூலில், ஆசீவகம் குறித்ததான பல செய்திகள் காணப்படுகின்றன. ‘விஜயன் இலங்கை வந்து முப்பத்து […]
கனவும் நிமித்தமும் கனவும் நிமித்தங்களும் நிகழவிருக்கும் நிகழ்வினை முன்னுரைக்கும் தன்மையுடையன. கனவிற்கும் நிமித்தங்களுக்குமான பலன்களைத் தமிழ்க்கணியன்கள் ஆய்ந்துரைப்பர். கி.பி. பத்தாம் நூற்றாண்டிலேயே கனவும் கனவின் தன்மையும் கனவிற் தோன்றும் காட்சிகளும் எவ்வகையில் பலிதமாகக்கூடியன. பகலிற் காணும் கனவு பலிக்காது என்ற நம்பிக்கை. கனவு காணும் காலம் : இதனை இரவின் முன் யாமத்தில் கண்ட கனவு, நடு யாமத்தில் கண்ட கனவு, பின் யாமத்திற் கண்ட கனவு என மூன்றாகப் […]
தமிழ்க் காப்பிய அமைப்பில் சிலப்பதிகாரம் இன்றளவும் தோன்றிய காப்பியங்கள் யாவற்றிலும் வேறுபட்டு நிற்கின்ற தன்மையினை உடையதாகின்றது. அவ்வேறுபட்ட தன்மையே இன்று அதனது சிறப்புத் தன்மையாகப் போற்றப்படுகின்றது. அச்சிறப்புத் தன்மைக்கான ஏந்துதல்கள் எவ்வகையில் இளங்கோவடிகளுக்குக் கிடைத்திருக்கும் என்பனவான எண்ணங்கள் தோன்றுதல் இயல்பேயாம். அவ் வகையில் சிலப்பதிகாரத்தின் சிறப்பியல்புகளுக்கான காரணங்கள் இளங்கோவடிகள் காப்பியமியற்றிய காலச் சூழலில் இருந்தே கிடைத்தனவாகக் கொள்ளுதலே பொருத்தமாகவிருக்கும். அவர் காலச் சூழலில் நிலவிய சமயங்களின் தாக்கம் பல வகையிலும் […]
பௌத்தமும் சமணமும் தென்னகம் வருதலுக்கு முன்பே பண்டைத் தமிழகத்திலும் ஈழத்திலும் தழைத் தோங்கிய மெய்யியற் சமய மரபாக விளங்கியது ஆசீவகம் ஆகும். தேவனாம்பிரிய திசையன் என்னும் மன்னனுக்கு முன்பு இலங்கையை ஆண்ட மன்னர்களில் பலர் ஆசீவக சமய மரபினைப் பின்பற்றியவர்களே என்பதற்கான சான்றுகள் மகாவம்சத்தில் காணப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் ஆசீவகக் கருத்தியலை உடையனவாக உள்ளன. சிலப்பதிகாரத்தில் முதல் முறையாக ‘அண்ணலாம் பெருந்தவத்து ஆசீவகர்கள்’ என ஆசீவகர்களின் பெயர் […]
தெற்காசிய மரபிற் தோன்றிய மெய்யியல் மரபுகளையும், பிறபகுதிகளிற் தோன்றி இந்தியத்துணைக் கண்டத்திற் பரவிய மெய்யியல் மரபுகளையும், தன்னகத்தே உருவான மெய்யியல் மரபுகளையும் ஆவணமாக்கி வைத்துள்ள ஒரே தெற்காசிய மொழி தமிழ் என்பதில் யாதொரு ஐயப்பாடும் எழுதலுக்கு வாய்ப்பில்லை. தமிழ்மொழி, நீண்ட வலாற்றுத் தொடர்பையும் சமயநிலைப் பயன்பாடு மற்றும் அறிவுப்புலத் தொடர்பையும் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டே பெற்றுவந்துள்ளமையால் அதுவொரு மெய்யியல்தளமாக அமைந்துள்ளது எனலாம். அவ்வாறான மெய்யியற் கருத்துக்களின் தாக்கம் இன்றளவும் தமிழ் […]
இலங்கையும் தெற்காசியாவும் ஒருங்கிணைத்த பண்பாட்டு மண்டலமாகப் பெருங் கற்காலத்திற்கு முன்பிருந்தே விளங்கிவரும் நிலப்பரப்பாகும். இந்நிலப்பரப்பு மொழியாலும் நாகரிகத்தாலும் சமயங்களாலும் மெய்யியற் சிந்தனைகளாலும் ஒன்றனுக்கொன்று தொடர்பும் இணைப்பும் ஒத்தத்தன்மையும் கொண்டனவாக அமைகின்றன. மொழிநிலையில் தொல்காப்பியத்திற்கு முற்பட்டும் பிற்பட்டும் அதன் விதிகளுக்கு உட்பட்டனவாகவே ஈழமும் தமிழகமும் அமைகின்றன. சிங்கள மொழியின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் தமிழின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது. அதனையொத்த தன்மையினையே சமயப்பண்பாட்டு நிலையிலும் காணவியலும். மெய்யியல் கோட்பாடுகளின் தோற்றமும் பரவலும் […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடலும் மேலெழுந்திருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு – கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்ற கருத்தை தனது முதலாவது கொள்கை விளக்க உரையில் கூறியிருக்கின்றார். தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவேண்டுமென்றால் அரசியல் ஸ்திரநிலையைக் கொண்டுவரவேண்டும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் அரசியல் ஸ்திர நிலையையும் உருவாக்க முடியாது. பிராந்திய வல்லரசான இந்தியா 13 ஆவது திருத்தத்தையே […]
தொடக்கக் குறிப்புகள் போருக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் வடபுலத்தில் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான சூழலியல் போராட்டமானது சுன்னாகத்தின் நிலத்தடி நீர் பற்றியதாகும். இலங்கையின் வடபுலத்தில் நிகழ்ந்த ஏனைய போராட்டங்கள் போலன்றி எதுவித வேறுபாடுகளுமின்றி அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த போராட்டம் என்ற வகையில் இது முக்கியமானது. அதேவேளை வடமாகாண சபை தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் இயங்கிக் கொண்டிருந்தபோது நடைபெற்ற போராட்டம் என்பதும் இங்கு கவனிப்புக்குரியது. இந்தப் போராட்டம் மூன்று விடயங்களைப் […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கையில் மக்களுக்கும் சூழலுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. ஆனால் அவற்றில் வெற்றியடைந்த போராட்டங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. குறிப்பாக 1978 இல் நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் தோற்றமும் ஜனநாயக விழுமியங்களின் நலிவும் கருத்துரிமைக்குச் சவால் விடுத்தன. 1989-90 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி அடக்கப்பட்ட விதம் இலங்கையெங்கும் கருத்துரிமைகள் குறித்த பாரிய அச்சத்தை விதைத்தது. உள்நாட்டுப் போரின் […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் கடந்த கால்நூற்றாண்டு கால அபிவிருத்தி அரசியலின் வரலாற்றில் மக்களின் பாரிய எதிர்ப்பைச் சம்பாதித்த அபிவிருத்தித் திட்டங்களில் மேல்கொத்மலைத் திட்டம் முதன்மையானது. மக்களின் எதிர்ப்பையும் மீறி அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இலங்கையின் சூழலியல் போராட்டங்களின் வரலாற்றில் முக்கிய இடம் இத் திட்டத்திற் கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு உண்டு. தேச நலனின் பெயரால் மலையகத் தமிழர்கள் தங்கள் வாழிடங்களில் இருந்து இடம் பெயர்க்கப்பட்டார்கள். இயற்கை அழிக்கப்பட்டது. நீர் மின்சாரமும் அதற்காக […]
தொடக்கக் குறிப்புகள் வரலாறு முழுவதும், அனைத்து நாகரிகங்களின் பொருளாதார நடவடிக்கைகளிலும் கடல் எப்போதும் உணவு வளம், போக்குவரத்து மற்றும் வணிக வர்த்தகத்திற்கான வழிமுறையாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், நீலப் பொருளாதாரம் என்பது கடல்சார் வளங்கள் மற்றும் பெருங்கடல்களில் வளர்ந்த பொருளாதாரங்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு கருத்தாக மாறியுள்ளது. கடலோரப் பகுதிகளோடு சமரசம் செய்யாத பொருளாதார வளர்ச்சியையே நீலப் பொருளாதாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலைத்தன்மையில் கவனம் செலுத்துவதை இழக்காமல் முன்னேற்றம், பொருளாதார, […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கையர்களுக்கு மின்சாரத்தை உறுதி செய்ததில் நீர் மின்சாரத்தின் பங்கு பெரிது. சுதந்திரத்துக்குப் பிந்தைய மூன்று தசாப்தகாலத்தில் இலங்கையர்களில் பெரும்பான்மையோருக்கு மின்சாரத்தை தங்கள் வீடுகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அமைந்தது. 1990 களின் நடுப்பகுதியில் இலங்கையின் மின் உற்பத்தியில் 96% நீர்மின்சாரத்தில் இருந்து பெறப்பட்டது. இலங்கை மின்சார உற்பத்தியில் தன்னிறைவை அடைந்திருந்தது. இதன்மூலம் சூழலுக்கு மாசற்ற முறையில் பெரும்பான்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்த நாடுகளில் இலங்கை முதன்மையானதாக இருந்தது. இவ்வாறான […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் வரலாற்றில் மிகப்பாரிய அபிவிருத்தித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது மகாவலி அபிவிருத்தித் திட்டடமாகும். இன்றுவரை இலங்கையின் முதன்மையான பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமாக இது விளங்குகிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் முதன்மையான இடம் இத்திட்டத்திற்கு உண்டு. ஆனால் இலங்கையின் வரலாற்றாளர்களின் பார்வையில் இது ஒரு அபிவிருத்தித் திட்டம் மட்டுமே. அதேவேளை அபிவிருத்தி தொடர்பான ஆய்வாளர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பார்வையில் இதுவொரு வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டமாகும். கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரையில் […]
தொடக்கக் குறிப்புகள் சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் இன முரண்பாட்டின் கதையாடலில் சில முக்கியமான வரலாற்றுப் புள்ளிகள் உண்டு. அவை ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறுபட்ட விளைவுகளையும் உரையாடல்களையும் ஏற்படுத்தின. அவ்வாறான ஒரு வரலாற்றுப் புள்ளியே சுதந்திரத்துக்கு பிந்தைய இலங்கையில் தேசத்தின் பிதா என்று அழைக்கப்படும் டி.எஸ். சேனநாயக்கவினால் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங்கள். இவை அபிவிருத்தியின் பெயரால் முன்னெடுக்கப்பட்டன. நெற்பயிர்ச் செய்கையை அதிகரிப்பது, நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துவது, நிலமற்ற மக்களுக்கு நிலத்தை […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் கடந்த அரைநூற்றாண்டு கவனங்கொள்ளத் தவறிய முக்கியமான துறைகளில் ஒன்று சூழலியல். இன முரண்பாடும் பொருளாதாரச் சிக்கல்களும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் சமூகப் பொருளாதார அரசியலரங்குகளை ஆக்கிரமித்து நின்றன. இப்பின்புலத்தில் நமது இயற்கையும் வளங்களும் அபிவிருத்தியின் பெயரால் கொள்ளையடிக்கப்பட்டன. விவசாய மையப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டிருந்த நாடு சேவை மையப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தது. வளமான மண்ணும் கடலும் தந்திருக்கக் கூடிய பயன்களை வினைத்திறனுடனும் பேண்தகைமையுடனும் தக்கவைக்க […]
தொடக்கக் குறிப்புகள் காலநிலை மாற்றம் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் நாம் வாழும் சூழல் குறித்து நாம் கவனங்கொள்ள வைத்துள்ளது. நகரமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், தூய்மையான வாழிடம் குறித்து எல்லோரும் அக்கறை செலுத்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. இப்பின்புலத்தில் பசுமை என்ற எண்ணக்கரு தவிர்க்கவியலாத ஒன்றாக முன்னிலையடைந்துள்ளது. பசுமைக்கு மாறுதல் (Going Green) என்பது இன்று அநேகமான அனைவரதும் தாரக மந்திரமாகவுள்ளது. வேலைத்தலங்களில், பாடசாலைகளில், […]
கி.பி. 8 ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதியில் இந்துப் பெருங்கடற் பகுதியில் முஸ்லிம்களான அராபிய வணிகர்களின் செல்வாக்கு இருந்துள்ளது. இக்காலப் பகுதியில் தென்னிந்தியக் கரையோரங்களை அண்டி இவ்வணிகர்களின் குடியிருப்புக்களும், வணிக நிலைகளும் உருவாகின. அக்காலத்தில் யாழ்ப்பாணத்துத் துறைமுகங்களுடனும் அவர்களுக்கு வணிகத் தொடர்புகள் இருந்திருக்கும் என ஊகிக்கலாம். காலப்போக்கில் யாழ்ப்பாணத்திலும் துறைமுகங்களை அண்டி அவர்களுடைய குடியிருப்புக்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். எனினும், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் இருப்புக் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் […]
1619 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயர் ஆண்ட 39 ஆண்டுகாலம், முன்னர் வழக்கிலிருந்த பிற மதங்களை ஒடுக்கிக் கத்தோலிக்க மதத்துக்குத் தனியுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் வசமானதும் இந்த நிலை முற்றாக மாறியது. கத்தோலிக்க மதம் தடைசெய்யப்பட்டது, கத்தோலிக்கக் குருமார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இராச்சியத்திலிருந்த எல்லாக் கத்தோலிக்கத் தேவாலயங்களையும் தமதாக்கிய ஒல்லாந்தர் அவற்றைத் தமது சீர்திருத்தக் கிறித்தவ மதத் தேவாலயங்களாக மாற்றினர். 138 ஆண்டுகால […]
போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களும் அழிக்கப்பட்டன. தமது மதமான கத்தோலிக்கம் தவிர்ந்த ஏனைய மதங்களைப் போர்த்துக்கேயர் ஒடுக்கினர். பல இடங்களில் இந்துக் கோயில்கள் இருந்த இடங்களில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் உருவாகின. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் கத்தோலிக்க மதத்தையும் தடை செய்து, தமது சீர்திருத்தக் கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்கு முயன்றனர். இலங்கையிலிருந்த ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி அரசாங்கம் சீர்திருத்தக் கிறித்த மதத்துக்கான தனியுரிமையைக் […]
ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு கோயிற்பற்றுப் பிரிவுகளில் காணப்பட்ட கிறித்தவ தேவாலயங்களுடன் இணைந்ததாகப் பாடசாலைகள் இருந்தன. வலிகாமப் பிரிவில் தெல்லிப்பழை, மல்லாகம், மயிலிட்டி, அச்சுவேலி, உடுவில், வட்டுக்கோட்டை, நல்லூர், பண்டத்தரிப்பு, சங்கானை, மானிப்பாய், வண்ணார்பண்ணை, சுண்டிக்குழி, கோப்பாய், புத்தூர் ஆகிய 14 இடங்களிலும், தென்மராட்சியில் நாவற்குழி, சாவகச்சேரி, கைதடி, வரணி, எழுதுமட்டுவாள் ஆகிய 5 இடங்களிலும், வடமராட்சியில் பருத்தித்துறை, உடுப்பிட்டி, கட்டைவேலி ஆகிய 3 இடங்களிலும், பச்சிலைப்பள்ளிப் பிரிவில் […]
இத்தொடரில் கடந்த கிழமை வெளியான கட்டுரையில் நல்லூரில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலம் தொடர்பான சில தகவல்களையும், அக்காலத்துக்குரிய சில கட்டிடங்களின் எச்சங்கள் பற்றிய விபரங்களையும் பார்த்தோம். இன்றைய கட்டுரை ஒல்லாந்தர் கால நல்லூர் குறித்த மேலும் சில விபரங்களைத் தருகின்றது. நல்லூரில் உள்ள மந்திரிமனை என அழைக்கப்படும் கட்டடம், தமிழரசர் காலத்து மந்திரி ஒருவரின் மாளிகையின் எச்சம் என்ற கருத்து ஒரு காலத்தில் நிலவியபோதும், இது ஒரு ஒல்லாந்தர் காலக் […]
நல்லூர் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கிய காலத்தில், இன்று முத்திரைச் சந்தை என்று அழைக்கப்படும் இடத்தை அண்மித்த பகுதியிலேயே அரச குடும்பத்தினரின் மாளிகைகளும், அவை சார்ந்த பெருமளவு நிலங்களும் இருந்தன. அரச குடும்பத்தினருக்கு நெருக்கமான அதிகாரிகளின் வாழ்விடங்களும்கூட இப்பகுதியிலேயே இருந்தன. போர்த்துக்கேயர் நல்லூரைக் கைப்பற்றிய பின்னர், இந்நிலங்களில் பெரும்பாலானவை போர்த்துக்கேய அரசாங்கத்துக்குச் சொந்தமாகின. 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் ஒல்லாந்தர் வசமான பின்னர் மேற்படி நிலங்கள் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் […]
இந்தத் தொடரில் இதற்கு முன்னர் வெளியான 15 ஆவது கட்டுரையில் யாழ்ப்பாணத்தை நிர்வாகம் செய்த ஒல்லாந்தக் கட்டளை அதிகாரிகள் சிலரைப் பற்றியும் அவர்கள் விட்டுச் சென்ற வழிகாட்டற் குறிப்புக்களைப் பற்றியும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மேலும் இருவர் பற்றியும், அவர்களுடைய வழிகாட்டற் குறிப்புக்கள் பற்றியும் பார்க்கலாம். லிப்ரெக்ட் ஹூர்மன் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியை அண்டி யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரியாகப் பதவி வகித்தார். சரியாக எந்த ஆண்டில் இவர் […]
1658 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் இருந்த ஒல்லாந்தரின் ஆட்சி ஆட்சிப் பிரதேசம், கொழும்பு, யாழ்ப்பாணம், காலி எனும் மூன்று பகுதிகளாக நிர்வாகம் செய்யப்பட்டன. மூன்றுக்கும் பொறுப்பான ஆளுனர் கொழும்பில் இருந்தார். யாழ்ப்பாணத்திலும், காலியிலும் கட்டளை அதிகாரிகளின் (commandeurs) கீழ் நிர்வாகம் நடைபெற்றது. யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரியின் கீழ் யாழ்ப்பாணக் குடாநாடு, தீவுப்பகுதிகள் என்பவற்றுடன், வன்னிப் பகுதியும் அடங்கியிருந்தது. கட்டளை அதிகாரிகள் சராசரியாக 3 முதல் 4 ஆண்டுகள் வரை […]
1621 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்றைய கோட்டைக்குக் கிழக்கே போர்த்துக்கேயர் உருவாக்கிய யாழ்ப்பாண நகரத்தை ஒல்லாந்தர் திருத்தி மேம்படுத்தினர். இந்த நகரம் பிரதான வீதி, சப்பல் வீதி, வங்கசாலை வீதி, ஒன்று தொடக்கம் நான்கு வரை எண்ணிடப்பட்ட குறுக்குத் தெருக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறிய நகரம் என்பதையும் இத்தொடரின் இன்னொரு கட்டுரையில் பார்த்தோம். பிரதான வீதியின் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர்ந்த ஏனையவை குடியிருப்புப் பகுதிகளாகவே இருந்துள்ளன. தொடக்க […]
கோட்டைக்குள் ஒல்லாந்தர் கட்டிய கிறித்தவ தேவாலயம் குறித்து ஏற்கெனவே இந்தத் தொடரில் சில தகவல்களைப் பார்த்தோம். இதுபற்றிய சற்று விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம். இந்தத் தேவாலயம், ஒல்லாந்தர் அரசில் தலைமை நிலஅளவையாளராக இருந்த மார்ட்டினஸ் லியூஸ்காம் என்பவரால் வடிவமைத்துக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றது. இது தற்போது அழிபாடுகளின் ஒரு குவியலாகவே காணப்படுகின்றது. இந்தத் தேவாலயம் உள்நாட்டுப் போர்க் காலத்தில் முற்றாக அழிந்துபோகும்வரை இலங்கையில் அக்காலத்தில் எஞ்சியிருந்த ஒல்லாந்தத் தேவாலயங்களுள் மிகப் […]
பனை ஒரு காலத்திலே எங்கள் வாழ்வியலுடன் ஒன்றித்துப் போயிருந்தது. இலங்கை தேசம் பல்லினப் பனை மரங்களின் இருப்பிடமாக, வாழிடமாகத் திகழ்ந்திருந்ததன் சான்றுகளாக காலனித்துவ கால நூல்களே இன்று எம் மத்தியில் எஞ்சியிருக்கின்றன. பல பனை மர இனங்கள் இன்று அழிந்து போய்விட்டன. சில பேராதனைப் பூங்காவில் மாத்திரமே காணப்படுகின்றன. நாம் இன்றும் சாதாரணமாகக் காணும் பனை மரங்கள் ஓரிரு இனங்கள் மாத்திரமே. கடதாசியும் அச்சிடலும் அறிமுகமாக முன்னர், ஓலைச் சுவடிகளே […]
இது நெருக்கடிகள் மிகுந்த காலம்… “என்ன வளம் இல்லை எங்கள் தாய் நிலத்தில்“ என்று பாடிய காலம் மாறி உணவுக்கும் எரிபொருளுக்கும் நெருக்குண்டு தள்ளுண்டு நீண்ட வரிசைகளில் நாம் காத்திருக்கத் தொடங்கியிருக்கும் காலம்… எங்களிடம் நிலைத்திருந்த தன்னிறைவை நாமே தொலைத்து விட்டிருப்பதை உணரத் தொடங்கியிருக்கும் காலம்… உணவுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் உருவாகியிருக்கும் காலம். முன்னைய காலங்களிலே வட பிராந்தியத்திலே பெரும் பொருளாதாரத் தடை அமுலில் இருந்தபோதும் கூட அதை […]
வட பிராந்தியத்தின் சுதேச மரங்களின் பயன்கள் பற்றி அறிதல் என்பது தனியே அச்சுப்பிரதிகளிலிருந்தும் இணையத்திலிருந்தும் நாம் அறிந்துக்கொள்வதோடு மட்டுப்படுத்தப்படாது. ஏனெனில் ஏனைய பிராந்தியங்களோடு ஒப்பிடுகையில், வட பிராந்தியத்து மரங்கள், அவற்றின் பயன்கள் சார்ந்து வெளிவந்த அச்சுப்பிரதிகளும் தகவல்களும் மிகவும் வரையறுக்கப்பட்டவை. அவற்றிலும் நாம் இன்று அணுகக் கூடியதாக இருப்பவை மிகமிகக் குறைவானவையேயாகும். மூன்று தசாப்தங்கள் நீடித்த யுத்தம், எம்மிடமிருந்து பறித்துச் சென்ற செல்வங்களுள் அவையும் சில. மரங்களுக்கும், மக்களுக்கிடையிலான பந்தமெனப்படுவது […]
சுதேச மரங்கள் மனித வாழ்வியலோடு ஒன்றிப்போனவை. மனித நாகரிகத்தின் சாட்சியாக நிற்பவை என்றெல்லாம் நாம் பார்த்தோம். அவை எதற்கெல்லாம் பயன்படுகின்றன என நாம் சிந்தித்துப் பார்த்திருப்போமா? நாம் அறிந்த பயன்களுக்கப்பால் நாம் அறியாத பயன்களையும் இம்மரங்கள் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது மரங்களை எப்படியெல்லாம் எமது தேவைகளுக்கு நாம் பயன்படுத்தலாம் என்ற சிந்தனை தான் எமக்குள் எழும். ஆயினும் அவற்றையும் தாண்டி இம்மரங்கள் ஆற்றும் தொழிற்பாடுகள் […]
இலங்கையிலேயே அதிகளவு இயற்கைக்காடுகளைக் கொண்ட பிராந்தியங்களுள் வடமாகாணமும் ஒன்று. வடமாகாணத்திலே வன்னிப்பிராந்தியத்தின் கணிசமான நிலப்பரப்பு இயற்கையான காடுகளைக் கொண்டிருக்கிறது. பல தசாப்தங்கள் நிலைத்து ஓய்ந்து போன யுத்தத்தைக் கூட சளைக்காமல் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்ற வானுயர்ந்த சோலைகள் இன்று என்றுமில்லாதவாறு பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கின்றன. பெருகி வரும் சனத்தொகையும் காணிகளுக்கான தேவையும் மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் இலகுவாய் வருமானம் பெறும் நோக்கங்களும் எனப் பலதும் பத்துமாய் மனித மையக் காரணிகள் […]
சிந்தனையின்றிய செயற்பாடுகளால் இழந்து போகும் நன்மைகள் “ மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர் ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப் பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான் ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால் பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு..” என்று ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தி பாடியிருக்கிறார். கிடைத்த வளங்களின் உச்சப்பயனைப் பெறும் ஈழத்து விவசாயியை மிக அழகாக […]
2021 ஆம் ஆண்டு கணிப்பின்படி வடபகுதியில் மீன்பிடியில் ஈடுபடுத்தப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 14,674 ஆகும். இது இலங்கையின் மொத்தப்படகுகளின் எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதமாகும். இப்பிரதேசத்தில் OFRP எனப்படும் வெளி இணைப்பு இயந்திரம் பூட்டப்பட்ட கண்ணாடி நாரிழையிலான படகுகளே கூடுதலாக மீன்பிடியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆழ்கடலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற பலநாட்கலங்களின் எண்ணிக்கை (IMUL) மிக குறைவாகவே உள்ளன, ஆக 150 பலநாட்கலப் படகுகளே பயன்படுத்தப்பட்டு வருவதாக தரவுகள் காட்டுகின்றபோதிலும், அந்தப்படகுகள் […]
2018 ஆண்டு கணிப்பீடுகளின் பிரகாரம் வடமாகாணத்தில் மொத்த மீனவர் குடித்தொகை 7,16 ,040 ஆகும். இது இலங்கையின் மொத்த மீனவர் தொகையில் (26.86%) சதவீதமாகும். மொத்த மீனவ குடும்பங்களின் எண்ணிக்கை 5,03,10 ஆகவும், நேரடியாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் தொகை 5,14,70 ஆகவும் காணப்படுகின்றது. பெரும்பாலும் பெண்கள் நேரடியாக மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதில்லை, மீன்பிடிசார்ந்த உப-தொழில்களான பதனிடல், சில்லறை வர்த்தகம் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இத்துறையில் பதனிடல், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் […]
வடமாகாணம் அதன் அமைவிடம், அதன் அமைப்புக் காரணமாக இயற்கையாகவே கடல்வளம் நிறைந்த ஒரு பகுதியாகவே விளங்குகின்றது. இப்பிரதேசத்தில் கரையோரங்களில் வாழுகின்ற மக்களின் பிரதான பொருளாதார நடவடிக்கைகளில் இக்கடல் வளத்துறையானது நீண்டகாலமாக பிரதான இடத்தினை வகித்துவருகின்றது. வடபகுதி ஐந்து நிர்வாக மாவட்டங்களை கொண்டிருக்கிறது. இவற்றுள் வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களும் (மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைதீவு) கடலோர எல்லைகளை கொண்டிருப்பதினால், அங்கு வாழ்கின்ற மக்கள் ஜீவனோபாயத் தொழிலாக மீன்பிடித் […]