Articles Archive - Page 6 of 7 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

July 2023 பதிவுகள்

17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் வடஇலங்கையின் தமிழர் பொருளாதாரம் – பகுதி 3

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : சின்னப்பா அரசரத்தினம் தானிய வரி நிலத்திலிருந்து அறுவடைசெய்த தானியத்திற்கு வரியாக, விளைவின் பத்தில் ஒரு பங்கு அறவிடப்பட்டது. விவசாயிகள் தானியவரி பற்றி அடிக்கடி முறைப்பாடு செய்து வந்தனர். நிலத்திற்கு அறவிடப்பட்ட வரிக்கும் மேலாக, அறுவடை செய்த தானியத்திற்கு எனவும் வரி அறவிடப்பட்டது. இது விவசாயிகளின் வரிச் சுமையை அதிகரித்தது. இந்த வரியைக் கழித்துவிடும்படி விவசாயிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. அறுவடைக் காலத்தில் டச்சுக்காரர் […]

மேலும் பார்க்க

17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் வடஇலங்கையின் தமிழர் பொருளாதாரம் – பகுதி 2

18 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : சின்னப்பா அரசரத்தினம் ஏற்றுமதி வர்த்தகம் 17 ஆம் 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வேறு பல பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டன. இவை ஒவ்வொன்றும் சிறிய அளவு உடையனவாயினும் யாவற்றையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது கணிசமான அளவுடையனவாக அவை இருந்தன. யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்திற்கு இவற்றின் பங்களிப்பும் கணிசமான அளவினதாக இருந்தது. இப்பொருட்களில் பனை மரமும், பனை உற்பத்திகளும் முக்கியமான ஏற்றுமதிகளாக இருந்தன. மலையாளம், கருநாடகம், மதுரை ஆகிய […]

மேலும் பார்க்க

17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் வடஇலங்கையின் தமிழர் பொருளாதாரம் – பகுதி 1

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : சின்னப்பா அரசரத்தினம் பேராசிரியர் சின்னப்பா அரசரத்தினம் வட இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு வரலாறு பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். இந்தக் கட்டுரைகள் யாவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. இவை தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருப்பது பெரும் குறையே. 1982 ஆம் ஆண்டில் அவரின் ‘The Historical Foundation of the Economy of Tamils of  North Sri Lanka‘ எனும் சிறுநூல் வெளியாயிற்று. […]

மேலும் பார்க்க

இலங்கைத் தமிழ்த்தேசியவாதம்

10 நிமிட வாசிப்பு

பேரா. ஏ. ஜே. வில்சனின் நூல் பற்றிய அறிமுகம் “Sri Lankan Tamil Nationalism” என்னும் தலைப்பில் ஏ. ஜே. வில்சன் அவர்கள் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்நூலின் முன்னுரையில் இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சியுற்ற வரலாற்றை எடுத்துக் கூறியுள்ளார். அவரது எடுத்துரைப்பு வெறும் தரவுகளின் தொகுப்பாகவும் விபரிப்பாகவும் அமையாமல்,  கோட்பாட்டு ஆய்வாக விளங்குகின்றது. பல எண்ணக்கருக்களை அறிமுகம் செய்யும் அவர் தமிழ்த் தேசியவாதம் […]

மேலும் பார்க்க

பேர்சிவல் ஆக்லண்ட் டைக் “வடக்கின் ராஜா”

27 நிமிட வாசிப்பு

ஆங்கிலத்தில் : பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை இலங்கையின் வட மாகாணத்தில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியாவின் அயலிடப் பிரதிநிதி  (PROCONSUL) என்ற பதவியில் (பின்னர் அரசாங்க அதிபர் பதவி) பேர்சிவல் ஆக்லண்ட் டைக் பணியாற்றினார். இவரே வடக்கின் ராஜா என்ற புகழ் பெற்ற மனிதர் (RAJA OF THE NORTH) யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வடபகுதியிலும் தமிழர்களிடையே டைக்  மரபுக் கதை நாயகன் போன்று வாய்மொழி […]

மேலும் பார்க்க

பண்டைத் தமிழர்களின் நகர அமைப்பும் சாதியின் பாதிப்பும் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு

பண்டைய நூல்களும் கட்டடக்கலையும் வேதகாலத்திலேயே இந்துக்களின் கட்டடக்கலைத்துறை வளர்ச்சியுற்றிருந்தது.  கட்டடக்கலை பற்றிய அறிவியற்துறை வாஸ்து வித்யா (Vastu-Vidaya) என அழைக்கப்பட்டது. இதனை விளக்கும் நூல்கள் வாஸ்து சாஸ்திர நூல்கள் (Vastu Shastras) என அழைக்கப்பட்டன. மச்யபுராண (Matsya Purana), விஷ்ணு தர்மோத்தர புராண (Vishnudharmottara Purana) போன்ற புராண நூல்களும், ஹயாசேர்சா பஞ்சார்த்திர ஆகம (Hayasirsha pancharatra Agama), வைகாநாச ஆகம் (Vaikhanasa Agama) போன்ற ஆகம நூல்களும் ஆலய […]

மேலும் பார்க்க

பண்டைத் தமிழர்களின் நகர அமைப்பும் சாதியின் பாதிப்பும் – பகுதி 1

29 நிமிட வாசிப்பு

பண்டைத் தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள் பண்டைய தமிழர்கள் தரைவழியாகவும் கடல்வழியாகவும் பாரதத்தின் ஏனைய நகரங்களுடன் மட்டுமல்ல கடல்கடந்தும் ஏனைய நாடுகளுடனெல்லாம் வணிகம் செய்து சிறப்புற்று விளங்கியதை வரலாறு கூறும். யவனர்கள், அரேபியர்களெல்லாம் கடல்கடந்து தமிழகம் வந்து வர்த்தகம் செய்ததை வரலாற்றறிஞர்களின் பிரயாணக் குறிப்புகள், பண்டையத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தகவல்கள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களெல்லாம் புலப்படுத்தும். கிழக்கிந்தியத் தீவுகள் கூட்டத்தை உள்ளடக்கிய சாவகம் (இன்றைய இந்தோனேஷியா), […]

மேலும் பார்க்க

தொல்லியல் காட்டும் சங்ககாலப் பெருங்கற் பண்பாடு

30 நிமிட வாசிப்பு

அறிமுகம்     இன்று தமிழகத்தில் உள்ள இலக்கியங்களில் மிகப் பழமையான இலக்கியங்கள் சங்ககால இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்களின் காலத்தை நிர்ணயிப்பதில் அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துகள் காணப்பட்ட போதிலும் மொழியியல் ஆய்வுகள், ஆரம்பகாலக் கல்வெட்டுகள், நாணயங்கள், கிரேக்க-ரோமானியர்களின் பதிவுகள், அகழாய்வுச் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவ்விலக்கியங்களின் காலத்தை கி.மு. மூன்றாம்  நூற்றாண்டிற்கு முன்பாக எடுத்துச்செல்லலாம்.      இச் சங்ககால இலக்கியங்களில் முச்சங்கங்கள் பற்றிய குறிப்பு எதிலுமே காணப்படவில்லை. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட […]

மேலும் பார்க்க

இது இன்னொரு போராட்டத்தின் கதை : பறைமேள இசை பல்கலைக்கழகத்துள் மெல்ல மெல்ல நுழைந்த கதை

10 நிமிட வாசிப்பு

பறை பற்றி பலரும் பேசும் காலம் இது. இதற்கு ஒரு வரலாற்றுப்பின்னணியும் சமூகப் பின்னணியும் உண்டு. தமிழகத்துள் 1950 களில் ஊடுருவிய பெரியார், அம்பேத்கார், மார்க்சிச சிந்தனைகளும் தொடர்ந்து வந்த அயோத்திதாசர், இரட்டைமலை ஶ்ரீநிவாசன் சிந்தனைகளும் பின்னாளில் எழுந்த தமிழ்த் தேசியச் சிந்தனைகளும், தலித்திய சிந்தனைகளும் பறை இசைப்போர் சமூகத்துக்கு ஒரு விசை வேகம் தந்தன. அத்தோடு இச்சிந்தனைகளினால் பறையைத் தம் வாழ்வாதாரமாகக் கொண்ட பறை இசைக்கும் சமூகத்தையும் தாண்டி […]

மேலும் பார்க்க

கதிர்காம முருகன் : சூழலியல் பண்பாட்டுத் தொன்மையும் தொடர்ச்சியும்

10 நிமிட வாசிப்பு

இலங்கையின்  தனித்துவ வழிபாட்டிடமாக கதிர்காம முருகன் ஆலயம் விளங்குகின்றது. வேடர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து மக்களினதும் சங்கமமாகத் திகழும் கதிர்காமத்தின் தோற்ற மூலமானது வரலாற்றுத் தொன்மையுள் அமிழ்ந்துள்ளது. கடவுளரின் வரலாறானது குறித்த சமூக வரலாற்றுடனும் சூழலியல் சார் பண்பாட்டுடனும் இரண்டறக் கலந்துள்ளது என மானிடவியலாளரான Pettezzoni (1956) குறிப்பிடுவார். இந்த வகையில் கதிர்காம முருகன் ஆலயத்தின் சூழலியல் பண்பாட்டுத்தொன்மையும் தொடர்ச்சியும் பற்றிய ஒரு சமூக மானிடவியல் தரிசனமாக […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்