மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குக் கோறளைப்பற்றுப் பிரதேச செயலக (வாகரை) எல்லைக்குள் உள்ள புச்சாக்கேணி கிராம அலுவலர் பிரிவின் மூன்றாம் கட்டை, நான்காம் கட்டை மற்றும் கல்லரிப்பு ஆகிய பகுதிகளில் 25.02.2025 அன்று சேனைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு எதிராக நடந்த எரிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள், வன வளப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு கிடைத்த பெரும் அவமானமாகும். இந்தச் செயற்பாட்டில் 13 குடிசைகள், குடும்பங்களின் உடைமைகள், உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், நெல், பயறு […]
பெண் தெய்வ வழிபாட்டு மரபு பெண்தெய்வ வழிபாட்டு மரபு புதிய கற்காலம் தொட்டே உலகளாவிய ரீதியல் நிலைபெற்றிருந்தமையை அறியலாம். அகழ்வாராய்வுகளில் பெண் தெய்வங்களின் உருவச்சிலைகள் கிடைக்கப்பெற்றமை தக்க சான்றுகளாகும். எகிப்தில் ‘இசிஸ்’, ‘சிபிஸ்’ போன்ற பெண் தெய்வ வழிபாடுகள், சிரியாவில் ‘அஸ்தாத்’ எனும் பெண் தெய்வ வழிபாடு போன்ற பாரம்பரியங்களும் குறிப்பிடத்தக்கவைகளாகும். “நதிக்கரை நாகரிகங்களில் நிலவிய தாய்வழிச் சமூக அமைப்பின் காரணமாகவே பெண் தெய்வ வழிபாட்டு மரபு தோன்றியிருக்கிறது” என்பர் […]
அரசனின் முழக்கம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில், ஜனவரி 20 ஆம் திகதியிலிருந்து, அவர் தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அவரின் அதிரடி ஆட்டம் திடீரென முளைத்த விடயம் அல்ல; அது அமெரிக்கச் சிந்தனைக் குழாமின் திட்டமிட்ட நகர்வு. அதனை நோக்கும் போது அமெரிக்காவின் புதிய அணுகுமுறையை அறியக்கூடியதாக உள்ளது. நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஒரு பெரிய உத்தியின் தொடக்கமாக இது இருக்கப்போகிறது. அமெரிக்க வெளிநாட்டு […]
முன்னுரை வரலாற்றுச் சிறப்பும் நாகரீக உயர்வும் உடைய மக்கள் மொழியிலேயே உலகின் செம்மார்ந்த காப்பியங்கள் தோன்றியுள்ளன. இதற்குச் சான்றாக கிரேக்கம், சீனம், எபிரேயம் முதலான மொழிகளில் தோன்றிய காப்பியங்களைக் குறிப்பிடலாம். அவ்வகையில் பண்டுதொட்டே நாகரீகச் சிறப்பினையும் செவ்வியல் இலக்கியங்களையும் செம்மார்ந்த கலைகளையும் உடைய தமிழில் சிலப்பதிகாரம் போன்ற ஒப்பில்லா காப்பியம் தோன்றுதல் இயல்பேயாம். அவ்வாறு தோன்றிய சிலப்பதிகாரம் பன்னெடுங்காலமாக தனது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழின் தன்மையாலும் அணி […]
இந்தியப் பெருங்கடலில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு இலங்கையின் கடற்படைத் துறைமுகங்கள் இருந்ததற்கான சான்றுகள் பண்டைய காலத்திலிருந்தே காணப்படுகின்றன. இந்தியப் பெருங்கடலில் பருவமழைக் காற்றின் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு இலங்கைத் துறைமுகம் ஒரு சிறந்த மையமாக இருந்து வந்துள்ளதுடன் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் இலங்கையின் துறைமுங்கள் ஒரு மையப்புள்ளியாகவும் இருந்து வந்துள்ளதை இலக்கிய ஆதாரங்கள், வெளிநாட்டார் பதிவுகள், கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் எடுத்துக் கூறுகின்றன. வட […]
1 இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் மீன்பிடித்துறை முக்கியமானது. மீன் உணவு, விலங்குப் புரதத்தின் இன்றியமையாத ஆதாரமாகும். அது உயர்தர புரதம், வைட்டமின்கள் ஏ மற்றும் டி, பொஸ்பரஸ், மெக்னீசியம், செலினியம் மற்றும் அயோடின் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இலங்கையர்கள் தங்களுக்கான விலங்குப் புரதத்தை 50% மீன்களிலிருந்து பெறுகிறார்கள். இது உலக சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம். இலங்கையின் கடல் உணவு அதன் தனித்துவமான சுவைக்காக […]
கற்காலத்தின் (நியோலிதிக் காலம்) இறுதிக் காலகட்டங்களில் மனிதன் முதலில் மட்பாண்டங்களை உருவாக்கத் தொடங்கினான். வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையிலிருந்து விடுபட்டு, உணவு உற்பத்தி செய்யும் பொருளாதார மாற்றத்தின் போது மட்பாண்டத்தின் தேவை எழுந்தது. தானிய உற்பத்திக்கு தானியங்களைச் சேமித்து வைப்பதற்கும், தண்ணீர் சுமந்து செல்வதற்கும், உணவு சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் மட்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டன. பிசுபிசுப்பான ஈரக் களிமண்ணை எரித்தால், அது கடினமாகவும், உடையக்கூடியதாகவும் மாறும் என்பதைக் கண்டறிந்தனர். மேலும் பரிசோதனையில், களிமண்ணை […]
வெறும் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளுவதற்கான தேசிய விடுதலை என்பதற்கு அப்பால் சமூக நீதியையும் வெற்றி கொள்ளும் தேசிய எழுச்சிக்கு முன்னுரிமை வழங்கியிருக்க வேண்டிய பொறுப்புணர்வு தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்தவர்களிடம் இருந்ததில்லை; அதுவே ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசியமாக இருந்திருக்கும். இவர்களுக்கு, தமக்கான உத்தியோக ஆக்கிரமிப்பை விலக்கிக்கொள்ளும் ‘சிங்களத் தேசத்தில் இருந்து விடுதலை’ வேண்டியிருந்ததே அல்லாமல் விடுதலைத் தேசிய அம்சங்கள் பற்றிய அக்கறை இருக்கவில்லை. ஏகாதிபத்திய நலனுடன் பிணைக்கப்பட்ட தமிழ்த்தேசிய […]
பேராசிரியர் க. கைலாசபதி (1933-1982) தனது நாற்பத்தொன்பதாம் வயதில் இவ்வுலகச் செயற்பாட்டில் இருந்து விடைபெற்ற போது எமது நாடு ஒரு நிலைமாறு கட்டத்தை அனுபவிக்கத் தொடங்கியிருந்தது. முன்னதாகச் சுயசார்புப் பொருளாதாரத்தை முன்னெடுத்து வந்த மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத்தியிருந்த எமது நாடு, ஏனையவை போலவே, ஐக்கிய தேசியக் கட்சி 1977 ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறியது முதலாக, திறந்த பொருளாதாரக் கொள்கையை அனுமதிக்கும் மாற்றத்துக்கு ஆட்பட்டிருந்தது. அத்தகைய […]
1 யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்றாகும். சில தருணங்களில் மனிதர்களை விட புத்திசாலித்தமானவையும் கூட. பிள்ளையார் வழிபாடு என்பது யானைகளின் சமூக, கலாசார விழுமியங்களின் ஒரு அடையாளம் எனலாம். யானைகள் சிக்கலான, வலுவான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. ஆசியாவில், குறிப்பாக இலங்கையில், இந்த அற்புதமான விலங்குகள் தங்கள் சுற்றுச்சூழலைப் பகிர்ந்து கொள்ளும் மக்களிடையே மரியாதையைத் தூண்டுகின்றன. யானைகளுக்கு குறிப்பிடத்தக்க கலாசார முக்கியத்துவத்தை சமூகம் அளிக்கிறது. யானைகள் இலங்கையின் சின்னங்களாக, சுற்றுலாப் பயணிகளை […]