Articles - Ezhuna | எழுநா

இலங்கையின் ஜனாதிபதிமுறையை ஒழித்தல் : 2024 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் வாக்காளர்களுக்கான ஓர் கொள்கை வழிகாட்டி

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : அசங்க வெலிக்கல ‘Abolition of Executive Presidency: A Voters Policy Guide to the 2024 Presidential Election’ என்ற தலைப்பில் இலங்கையின் சட்டத்துறை அறிஞரும், எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றுபவருமான அசங்க வெலிக்கல (Asanka Welikala) ‘Groundviews’ எனும் இணைய இதழில் ஓர் கட்டுரையை வெளியிட்டார். 15 வினாக்களையும், அவ் வினாக்களுக்கான விடைகளையும் உள்ளடக்கிய இக்கட்டுரை ஜனாதிபதிமுறை (Presidentialism) பற்றிய விமர்சன […]

மேலும் பார்க்க

புலம்பெயர்ந்தோரின் வாக்குரிமை: தேவையும் சாத்தியமும்

17 நிமிட வாசிப்பு

இலங்கையின் அரசியல் உயரடுக்குகள் நலன் சார் அரசு, சகல இலங்கையரின் சமூக, பொருளாதார, கலாசார உரிமைகைளையும் உள்ளடக்கும் செயன்முறையில் ஆர்வம் கொள்வதில்லை; மாறாக, பொருளாதார வாய்ப்புகளை மட்டும் உறிஞ்சி தங்கள் நலன் சார் விடயங்களில் மட்டும் உச்ச ஆர்வம் கொள்பவையாக உள்ளன. இந்தப் போக்கின் நேரடி விளைவு சமூக, பொருளாதாரப் பின்னடைவாகவும் வங்குரோத்து நிலையாகவும் அமையும். புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார வாய்ப்புகளின் ஊற்றுகளாக மட்டுமே கருதப்படுகின்றனர். அவர்களின் அரசியல் உரிமைகள் பற்றிய […]

மேலும் பார்க்க

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சட்டத்தின் வகிபங்கு பற்றிய ஓர் மதிப்பீடு – பகுதி 2

22 நிமிட வாசிப்பு

சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டம் சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டமானது 1941 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கச் சட்டமாக ஆக்கப்பட்டு பின்னர் இச் சட்டம் பல தடவைகள் திருத்தப்பட்டது. இச் சட்டத்தின் கீழ் வெவ்வேறு தொழில்துறைகளுக்கென சம்பளச் சபைகள் தாபிக்கப்பட்டுள்ளன. சம்பளச் சபையானது தொழில் தருநரின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் அமைச்சரால் நியமிக்கப்பட்ட நியமன அங்கத்தவர்கள் ஆகிய முத்தரப்பினரைக் கொண்ட ஒரு சபையாகும். சம்பளச் சபையானது […]

மேலும் பார்க்க

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சட்டத்தின் வகிபங்கு பற்றிய ஓர் மதிப்பீடு – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

(அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக்குழு நடத்திய ‘அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த இருபத்தைந்தாவது நினைவுப் பேருரை நிகழ்வில் பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் அவர்களால் இக் கட்டுரை வாசிக்கப்பட்டது) அறிமுகம் இலங்கையில் தொழிற் சட்டத்தின் வளர்ச்சியானது பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் ஆரம்பமானது. ஆரம்ப காலங்களில் பெருந்தோட்டங்களில் தொழில் செய்த தொழிலாளர்கள் மிக மோசமான முறையில் பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்டார்கள் என்பதுடன் அவர்களுடைய அடிப்படை மனித உரிமைகளும் மிக மோசமான முறையில் மீறப்பட்டன. […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் : முன்னோட்ட நிகழ்வுகள்

25 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக 1974 இல் தோன்றி, 1979 இல் ஒரு தனிப் பல்கலைக்கழகமாக உயர்வுபெற்று வளரும் இந்த உயர்கல்வி நிறுவனத்துக்கு ஐம்பது வயது. அவ்வளவு நீண்ட காலமாகத் தோன்றாவிட்டாலும், யாழ்ப்பணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முதலாவது முயற்சி 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதுமட்டுமல்லாது, 19 ஆம் நூற்றாண்டில் இருந்து யாழ்ப்பாணத்துக் […]

மேலும் பார்க்க

இலங்கையுடனான அரேபியர் மற்றும் பாரசீகர்களின் வர்த்தக, கலாசார தொடர்புகள் : கி.பி 7 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டுகள் வரை

33 நிமிட வாசிப்பு

இஸ்லாம் தோன்றுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பிருந்தே அரேபியர் சிறந்த வணிகர்களாக ஆசியாக் கண்டம் முழுவதும் பிரபல்யம் பெற்றிருந்தனர். ஆயினும், அரேபியர்களுக்கு முன்பிருந்தே பாரசீகர்கள் சீனாவுடனும் தூர கிழக்கு நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இத்தகைய வர்த்தகத்தின் ஒரு முக்கிய தலமாக இலங்கை விளங்கியது. கிபி. 5 ஆம் நூற்றாண்டில் அனுராதபுர மன்னனோடு பாரசீகத்தின் சாசானியச் சக்கரவர்த்திகள் இராஜதந்திர ரீதியான உறவுகளைக் கொண்டிருந்தனர் (இமாம், 1944, 1965:13). பட்டுத் துணிகளை ஏற்றிவந்த சீனக் […]

மேலும் பார்க்க

‘மில்க்வைற்’ சுதேச நிறுவனம்: உள்ளூர் உற்பத்திக்கான உந்து சக்தி

11 நிமிட வாசிப்பு

முகப்பு  ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வுகள் (2023) இலங்கையின் ‘சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்’ பொருளாதார மீட்சியில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என மதிப்பிட்டுள்ளது. மதிப்புச் சங்கிலிகளுடன் (Value Chain) மீண்டும் அக்கறையுடன் ஈடுபடுவதன் மூலம், உற்பத்தி மற்றும் வணிகங்களை புத்துயிர் பெறச் செய்ய முடியும். இலங்கையில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 75% இற்கும் அதிகமான நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளன. இவை 20% இற்கும் அதிகமான ஏற்றுமதிகள், 45% […]

மேலும் பார்க்க

இலங்கைப் பல்கலைக்கழக முறைமையில் சேர்.பொன். அருணாசலத்தின் வகிபாகம்

28 நிமிட வாசிப்பு

(யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய ‘தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் – 2024’ இல் வழங்கப்பெற்ற நினைவுப் பேருரை.) எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்தித்து, இந்த நிகழ்வைத் தலமையேற்று நடத்துகின்ற யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் அருட்பணி. ஜெறோம் செல்வநாயகம் அடிகளார்களே, இங்கு பிரசன்னமாயிருக்கும் தனிநாயகம் அடிகள் ஆய்வு மையத்தின் இயக்குனர் அருட்கலாநிதி.அ.பி. ஜெயசேகரம் அடிகளார் உள்ளிட்ட அருட்தந்தையர்களே மற்றும் அருட்சகோதரிகளே, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் தகைசால் பேராசிரியர் […]

மேலும் பார்க்க

கடந்த கால அபிவிருத்தித் திட்டங்களின் பகைப்புலத்தில் ‘திருகோணமலை – கொழும்பு’ விரைவுப் பாதையும் பொருளாதார வலயமும்

15 நிமிட வாசிப்பு

1 இலங்கைப் போரின் பின்னணியில், தமிழ்க் கிராமங்கள் காணாமல் போயின. சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப் பெயர்களை மாற்றின. தமிழருக்குச் சொந்தமான நிலங்கள் அபிவிருத்தி என்னும் பெயரில் பறிபோயின. நிலத்தை விட்டு விரட்டுவது என்பது ஒரு இனக்குழுவின் கலாசாரத் தளங்களை அழித்தல் ஆகும். இழைக்கப்பட்ட அட்டூழியங்களை சரியான முறையில் அடையாளப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களிடமும் தப்பிப் பிழைத்தவர்களிடமும் மன்னிப்புக் கேட்காமல், கடந்த காலத் தவறுகளின் கள நிலையை உணராமல் அபிவிருத்தி, முன்னேற்றம் ஆகிய முன்னெடுப்புகளைச் […]

மேலும் பார்க்க

பிராமி எழுத்து வடிவமும் தொடக்ககால எழுத்தறிவும்

23 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டினதும் இலங்கையினதும் எழுத்தறிவின் தொடக்கம் குறித்து ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இரு பிராந்தியங்களிலும் புழக்கத்தில் இருந்துள்ள காலத்தால் பழைய எழுத்தாகப் பிராமி கொள்ளப்படுகின்றது. இந்திய உபகண்டச் சூழலில் பெரும்பாலான மொழிகளின் வரிவடிவங்களுக்கான தாய் வடிவமாகப் பிராமி விளங்கியுள்ளது. தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளின் வரிவடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே வளர்ச்சியடைந்துள்ளன. பிராமி எழுத்துகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே முதன்முதல் வாசித்தறியப்பட்டன. ஜேம்ஸ் பிரின்ஸப் 1837 ஆம் ஆண்டு அசோகரின் பாறைக் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்