Articles - Ezhuna | எழுநா

இலங்கையில் தமிழ் கற்றல் – கற்பித்தல் : நடைமுறைகளும் சவால்களும்

11 நிமிட வாசிப்பு

அறிமுகம் இலங்கையில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாக இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இவ்வினங்களின் தனித்துவத்தைப் பேணிக்கொள்வதற்கும் கலாசாரப் பாதுகாப்பிற்கும், தாய்மொழியான தமிழ்மொழியின் பாதுகாப்பு முக்கியமானதாகும். இருந்த போதிலும் உலகமயமாக்கல் மற்றும் மேற்கத்திய ஆதிக்கம் என்பவற்றினாலும், இலங்கையில் வரலாற்றுரீதியாக சிறுபான்மையினர் மொழிரீதியான பாகுபாடுகளிற்கு உட்பட்டு வருவதனாலும், தமிழ்மொழி நலிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. மேலும் இனமுரண்பாடு மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக கணிசமானளவு தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து […]

மேலும் பார்க்க

விராஜ் மென்டிஸ் : ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியா ஆளுமை

12 நிமிட வாசிப்பு

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கென பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அந்தப் பரிமாணங்களின் பாதைகள் சமாந்தரமாகப் பயணித்தாலும் அதன் தொடக்கமும், இலக்கும்  ஒன்றாகவே இருக்கின்றன. விராஜினுடைய ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான பங்களிப்பு அரசியல் செயற்பாட்டுத் தளத்திலே காத்திரமானதாக அமைந்திருந்தது. தமிழினப் படுகொலை, அரசியல் வரலாற்று நிகழ்முறைக்கூடான பரிமாணத்தில் கட்டமைக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்டு, தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் விராஜினுடைய பங்களிப்பு முன்னெப்போதும் இல்லாதவாறு அவசியமானதாகவும் சுதந்திரமானதாகவும் அமைந்திருந்தது. விராஜினுடைய […]

மேலும் பார்க்க

தேசபக்தன் : தோட்டத் தொழிலாளரின் அரசியற் குரல்

23 நிமிட வாசிப்பு

மலையகத் தமிழர் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தை முக்கியமான நிலைமாறுகட்ட காலமெனலாம். அக்காலத்திலேயே இலங்கைவாழ் இந்தியருக்கு முதன்முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின்போது ஒரு நியமன உறுப்பினர் இந்தியர் சார்பாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின்னர் 1924 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின் போது இந்தியர் சார்பாக இரண்டு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். அத்தேர்தலின் போது நடைமுறைக்கு வந்த மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை இலங்கைவாழ் இந்தியருக்கும் வழங்கப்பட்டது. […]

மேலும் பார்க்க

வடமாகாணத்தின் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான சவால்களும் அவற்றை எதிர்கொள்வதற்கான பொருத்தமான கல்வி முறைகளும்

21 நிமிட வாசிப்பு

அறிமுகம் தற்கால உலகளாவிய அபிவிருத்திப் போக்கானது பேண்தகைமையுடையதாக இல்லை என்பதை சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகக் குறிகாட்டிகள் எடுத்தியம்புவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடுகின்றது. மேலும், வளங்கள் வரையறுக்கப்பட்டவையாக இருப்பதுடன், அதிகரித்த சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இருப்பதால், பேண்தகு அபிவிருத்தியே இதற்கு ஒரே தீர்வாகும் எனவும் ஐ.நா வலியுறுத்துகின்றது. தமக்கான பேண்தகு அபிவிருத்திக்கான பயணத்தில் ஒவ்வோரு நாடும், பல்வேறு சவால்களினை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இச்சவால்களில் பல, எல்லா நாடுகளுக்கும் பொதுவானவையாகவும், […]

மேலும் பார்க்க

நெருக்கடிகளைத் தாங்கக்கூடிய கல்வி முறைமைகளை உருவாக்குதல்

24 நிமிட வாசிப்பு

அறிமுகம் கொவிட் – 19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, மற்றும் அரசியல் நெருக்கடிகளால் கல்விச் செயற்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி, கல்விச் செயற்பாடுகளை நேரடியாகப் பாதித்துள்ளது. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பாடசாலைக் கல்வியைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட புதிய கல்விச்சீர்திருத்த அமுலாக்கம் தாமதமடைந்து  செல்கிறது. பொதுப்பரீட்சைகள் பிந்திக்கொண்டு செல்கின்றன. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுகின்றது. பாடசாலைக் […]

மேலும் பார்க்க

1971 ஜே.வி.பி கிளர்ச்சியும் ‘அரகலயவும்’ : சிங்களப் போராட்டக் கட்டமைப்பில் சாதியப் பின்னணி

17 நிமிட வாசிப்பு

இலங்கையின் சிங்களக் கிராமிய வாழ்வியலுடனும், அரச ஆட்சி முறைமையுடனும், அரச உயர் பதவிகளுடனும் வர்க்க, சாதிய, கல்வித் தராதர, இனக் கட்டமைப்பு முறைமைகள் பின்னிப் பிணைந்துள்ளன. பண்பாடு ரீதியான தொழில்சார் குடியேற்றங்கள் காரணமாக சாதியக் கட்டமைப்பானது ஏற்பட்டது என சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கின்றார்கள். தந்தையின் சாதி பிள்ளைக்குக் கடத்தப்பட்டதுடன் தந்தை செய்த குலத் தொழிலை மகனும் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதனைக் காணலாம். இதற்கமைய, மக்களின் குடியேற்றக் கிராமங்களும் தொழில்சார் குடியேற்றங்களாகவே […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருவதற்குப் பின்னணியாக இருந்த வரலாற்றுக் காரணங்கள்

16 நிமிட வாசிப்பு

தென்னாசியாவில் பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழ்ந்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இலங்கையின் வரலாறும் பண்பாடு இலங்கைக்கே உரிய தனிப் போக்குடன் வளரவும் உதவியுள்ளது. இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக இடங்களாகவே கருதப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் தமிழ் மக்களே அதிகமாக அன்று தொட்டு இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் கூட்டமானது தமக்கென ஒரு பாரம்பரியப் பிரதேசம், மதம், கலை, மொழி, சமூகக் கட்டமைப்பு, கலாசாரம், […]

மேலும் பார்க்க

பொலநறுவைக் கால சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் பின்பற்றப்பட்ட சோழர்களின் நடைமுறைகள் : சாசனங்களை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு

17 நிமிட வாசிப்பு

தென்னாசியாவிலேயே தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்றுப் பாரம்பரியங்கள் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது. இந்நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர். அன்று தொட்டு இன்றுவரை பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழுகின்ற நாடாக இலங்கை காணப்படுகின்றது. இங்கு பல்லினப் பண்பாட்டை வெளிப்படுத்தும் உச்ச காலப் பகுதியாக பொலநறுவை இராசதானி யுகம் விளங்கியது. இப்பொலநறுவை இராசதானியானது இலங்கையினுடைய இராசதானி வரலாற்றில், அனுராதபுரம் சோழர்களினால் கைப்பற்றப்பட்ட பின்னர், அவர்களால் […]

மேலும் பார்க்க

‘சி- நோர்’ : நோர்வே யாழில் நிறுவிய மீன்பிடி நிறுவனம் 

18 நிமிட வாசிப்பு

‘Cey-Nor’ நிறுவனம் அந்தோணி ராஜேந்திரம் அவர்களால் கனவு கண்டு படிப்படியாக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு; 1960 களில் முளைத்து படிப்படியாக வார்க்கப்பட்டது. நோர்வேக்கும் யாழ்ப்பாணத்துக்குமான உறவின் நிமித்தமாக நோர்வே மக்களால் நிதி வழங்கப்பட்டு உருவாக்கப்பட்டது. 1960 களில், ஒரு நீடித்து நிலைக்கக்கூடிய மீன்பிடித்துறைசார் அபிவிருத்திக் கட்டமைப்புக்கு, எமது முன்னோர்கள் முயன்றார்கள் என்பதுக்கு Cey-Nor ஒரு எடுத்துக்காட்டு. 1983 களில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாகப் பிடிக்கப்பட்ட மீனின் அளவு 50,000 மெற்றிக் […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ‘டெங்கு’ ஏற்படுத்தும் பொருளாதாரச் சுமை 

18 நிமிட வாசிப்பு

டெங்கு நோயின் உலகளாவிய பரவல் சமீபத்திய தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. ஆனால் அதன் பொருளாதாரத் தாக்கங்கள் பற்றிய விரிவான கவனம் குறைவு.  அது பற்றிய தகவல்கள், ஆதாரம் சார்ந்த கொள்கைகள் மற்றும் ஆய்வுகள் அரிது. எவ்வாறாயினும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், டெங்குவின் பொருளாதாரச் சுமை மீதான கவனத்தை ஈர்க்கும் முகமாக இவ் ஆரம்ப விசாரணை முன்வைக்கப்படுகிறது. ஆழமான விசாரணைக்கான ஒரு ஒரு பாதையின் ஆரம்பமாக […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்