Articles - Ezhuna | எழுநா

மன்னார்ப் படுகை எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வும் அகழ்வும் : அபிவிருத்திக்கான வாய்ப்பா, சாபமா?

23 நிமிட வாசிப்பு

பின்புலம் அரசியல் பொருளாதாரப் பகுப்பாய்வு (Political Economy Analysis) என்பது ஒரு சூழ்நிலையில் உண்மையில் என்ன நடக்கிறது, உடனடிப் பிரச்சினையின் மேற்பரப்பிற்குப் பின்னால் என்ன இருக்கிறது, போட்டியிடும் ஆர்வங்கள் உள்ளதா என்பனவற்றைக் கண்டறியும் முயற்சியாகும். அரசியல் பொருளாதாரப் பகுப்பாய்வு, ஒரு சமூகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரச் செயல்முறைகளின் தொடர்புகளை ஆராய்கிறது. இது சமூகத்திலுள்ள குழுக்களின் அதிகாரத்தைப் புரிந்துகொள்வதை உள்ளடக்குகிறது; அவர்கள் வைத்திருக்கும் நலன்கள் மற்றும் அவர்களை உந்துவிக்கும் ஊக்கங்கள், குறிப்பிட்ட […]

மேலும் பார்க்க

தனிநாயகம் அடிகளாரின் கல்விச் சிந்தனைகள் – பகுதி 2

16 நிமிட வாசிப்பு

விடுதலைக்கான கருவி கல்வி சமுதாயத் தலைவர்களாக இருப்பவர்களின் கல்விநிலை தாழ்ந்திருக்குமாயின் நாட்டினுடைய முன்னேற்றத்தை எதிர்பார்ப்பது எங்ஙனம்? இந்திய நாட்டின் புரட்சிக்குக் காரணமாக இருந்தவர் பலர் எவ்வாறு ஆங்கில நாட்டில் கல்வி கற்றிருந்தனரோ அவ்வாறே இந்தோனேசியாவின் விடுதலைக்குக் காரணமாக இருந்த தலைவர்கள் பலர் டச்சு நாட்டில் கல்வி கற்றிருந்தனர். எனவேதான், கல்வி விடுதலைக்கான கருவி என்பது தனிநாயகம் அடிகளார் சிந்தனையாகும். ரஷ்யா : செய்தித்தாள்களே பொதுமக்களின் கல்விக்கழகம், அங்கு அனைவரும் செய்தித் […]

மேலும் பார்க்க

தனிநாயகம் அடிகளாரின் கல்விச் சிந்தனைகள் – பகுதி 1

16 நிமிட வாசிப்பு

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘தமிழ்த்தூது வண. தனிநாயகம் அடிகளாரின் நான்காவது நினைவுப் பேருரை’ நிகழ்வில் பேராசிரியர். முனைவர். கு. சின்னப்பன் அவர்களால் இக் கட்டுரை வாசிக்கப்பட்டது. சுருக்கம் உரைநடை, நாவல், சிறுகதை, அகராதி, நகைச்சுவை இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஒப்பீட்டு இலக்கியம் என்று பல முதற்பணிகளைத் தமிழுக்குச் செய்தவர்கள் கிறித்தவத் தமிழ்த் தொண்டர்கள். இவர்களில் இருபதாம் நூற்றாண்டில் ஈழம் தந்த தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் (1913-1980), […]

மேலும் பார்க்க

தமிழினப் படுகொலையின் 15 ஆவது ஆண்டில் இனப் படுகொலையின் அரசியல்

18 நிமிட வாசிப்பு

பலஸ்தீனமும் முள்ளிவாய்க்காலும் தமிழினப் படுகொலையின் 15 ஆவது ஆண்டில், நாங்கள் யாவரும் சாட்சிகளாய் பார்த்திருக்க பலஸ்தீனப் படுகொலை அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இஸ்ராயேல் – பலஸ்தீனப் போரை வெறும் இஸ்ராயேல் – பலஸ்தீனப் போராக மட்டுமே அவதானிக்க முடியாதென்பதை எல்லோருமே அறிந்திருக்கின்றோம். எனது ஆய்வு நோக்கம் கருதி இப் போரை, மத்திய கிழக்கில் பேரரசுக் கட்டமைப்புக்காக, புவிசார் அரசியல் தளத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற பலப் பரீட்சைக்கான போராகவே நான் பார்க்க விரும்புகின்றேன். […]

மேலும் பார்க்க

புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’

10 நிமிட வாசிப்பு

காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை  நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் ‘நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது. நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க […]

மேலும் பார்க்க

விபுலானந்தர் ஆய்வுத்தடத்தில் தமிழிசையின் மீட்டுருவாக்கம்

13 நிமிட வாசிப்பு

தமிழிசையின் செல்நெறி, சுகமான ஒரு பயணம் அல்ல. மக்களின் வாழ்வியலுக்குள் இலக்கியச் செழுமைக்குள் புதைந்திருந்த தமிழிசையின் தனித்துவமான அடையாளங்கள், காலவெளியில் கண்டுவந்த மாற்றங்களும் படிமலர்ச்சியும், பண்பாட்டு அரசியல் மேலாண்மைகளுக்குள் எதிர் கொண்ட சவால்கள், தன்னைத் தகவமைத்துக் கொள்ள எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் என்பன தமிழர் வாழ்வியல் வரலாறாகும்; தமிழ்ப் பண்பாட்டின் வரலாறுமாகும். இந்த வகையில் தமிழிசையின் மீட்டுருவாக்கதில் உயிர் விசைகளாக விளங்கிய முன்னோடிகளின் உருவாக்கம், பங்களிப்பு பற்றிய தெளிவான புரிதல் இன்றியமையாதது. […]

மேலும் பார்க்க

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் ராஜபக்சாக்களும்

10 நிமிட வாசிப்பு

இலங்கை முன்னொருபோதும் காணாத கடந்த வருடத்தைய படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரும் அவர்களுக்கு நெருக்கமான  மத்திய வங்கியின் இரு முன்னாள் ஆளுநர்கள் உட்பட ஐந்து உயர்மட்ட அதிகாரிகளுமே பொறுப்பு என்று உயர்நீதிமன்றம்  அண்மையில் வழங்கிய தீர்ப்பு, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நாட்டின் அதியுயர் நீதிமன்றம் வழங்கிய மூன்றாவது தீர்ப்பாகும். ஜனாதிபதியாக இருந்தபோது […]

மேலும் பார்க்க

சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பின்னணி – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : வி. நவரத்தினம் சட்டசபையில் தமிழ்ப் பிரதிநிதிகள் ஆற்றிய உரைகள் அவர்களது சந்தர்ப்பவாத மனப்பாங்கை பறைசாற்றுவன. அவர்கள் யாவரும் சிங்களவர்களை நம்ப வேண்டும். புதிய அரசியல் யாப்பைச் செயற்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கூறினர். சு. நடேசப்பிள்ளை பேசும்போது “நாம் எமது பக்கக் கருத்தை நீதிபதி ஒருவர் முன்னிலையில் எடுத்துரைத்தோம். அவர் அதனை நிராகரித்துவிட்டார். இனி நாம் செய்வதற்கு எதுவும் இல்லை” (பிரித்தானிய காலனிய […]

மேலும் பார்க்க

சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை மறுசீரமைப்பு அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் : சில அவதானிப்புகள் – பகுதி 2

20 நிமிட வாசிப்பு

வரி விலக்கு தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு வழங்குதல்   மேலும், முதலீட்டு சபை மற்றும் தந்திரோபாய அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக வரி விதிவிலக்கினைப் பெறும் நிறுவனங்கள், வரி விலக்களிப்பட்ட (tax exemption) மொத்த தொகை, மற்றும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வரி சலுகை வழங்கப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள் அனைத்தினையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இணையத்தளத்தில் இற்றைப்படுத்த (update) வேண்டும் என இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இதன் மூலம் வரி […]

மேலும் பார்க்க

சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பின்னணி – பகுதி 1

22 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : வி. நவரத்தினம் 1947 இல் சோல்பரி அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த யாப்புடன் தமிழர்களின் துயர நாடகம் ஆரம்பித்தது. சோல்பரி அரசியல் யாப்பின் தோற்றம், அதன் வீழ்ச்சி, இறுதியில் அது ஒழிக்கப்பட்டமை ஆகிய வரலாறு தமிழர்களின் இத்துன்பியல் நாடகத்தில் உள்ளடங்குவதாகும். தமிழ் – சிங்கள உறவுகளில் இவ்வரசியல் யாப்பு கறுப்புப் பக்கங்களாக உள்ளது. காலனிய ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் சமூகங்கள் அரசியல் விடுதலையும் சுதந்திரமும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்