Articles - Ezhuna | எழுநா

சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை மறுசீரமைப்பு அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் : சில அவதானிப்புகள் – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

அறிமுகம் தற்போது இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பாகப் பரந்த கலந்துரையாடல் (ஆதரவாகவும் எதிராகவும்) பாராளுமன்றத்திலும், அரசியல் பரப்பிலும், சிவில் சமூக மட்டத்திலும் இடம்பெற்று வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருப்பதனைப்  பார்க்க முடிகிறது. அது IMF இன் பொதுவான நடைமுறையும் கூட. அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச […]

மேலும் பார்க்க

தேசிய இனப் பிரச்சினையும் இலங்கையின் இடதுசாரி இயக்கமும் – பகுதி 3

33 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : குமாரி ஜயவர்த்தன இனவாதமும் ஐக்கிய முன்னணி தந்திரோபாயமும் 1950 களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மக்களின் கவனத்தை ஈர்க்கும் இரு விடயங்களில் அக்கட்சி பிரச்சாரத்தை மேற்கொண்டது. சமயம், மொழி என்பன சார்ந்த பண்பாட்டுப் பிரச்சினைகள் கைத்தொழில் வர்த்தக முயற்சிகளைத் தேசியமயமாக்கல், ஏகாதிபத்திய இராணுவத் தளங்களை மீட்டு எடுத்தல் ஆகிய கிளர்ச்சிவாதக் கோரிக்கைகளை முன்னெடுத்தல். மேற்குறித்த இரு பிரச்சினைகளை அக்கட்சி முன்னெடுத்தபோது இடதுசாரிகளிடையே ஒரு […]

மேலும் பார்க்க

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்கள்

12 நிமிட வாசிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்தமாதம் சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் இணையவெளி பாதுகாப்புச் சட்ட மூலமுமே அவையாகும். இரு சட்டமூலங்களுமே பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்த போதிலும், இணையவெளி பாதுகாப்புச் சட்டமூலத்தை மாத்திரம் கடந்த வாரம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. தற்காலிகமான ஏற்பாடு என்று கூறப்பட்டு, ஜெயவர்தன அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டு, கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறையில் இருந்துவரும் கொடூரமான […]

மேலும் பார்க்க

தேசிய இனப் பிரச்சினையும் இலங்கையின் இடதுசாரி இயக்கமும் – பகுதி 2

24 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : குமாரி ஜயவர்த்தன மலையாளிகளுக்கு எதிரான இனவாதம் 1930 களில் முதற்தடவையாக கொழும்பு நகரின் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவினரான மலையாளிகளுக்கு எதிரான இனவாத கூக்குரலை தொடக்கினர். ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தில் எழுந்த இந்த இனவாத எதிர்ப்பை இடதுசாரி இயக்கம் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. அக்காலத்தின் பொருளாதார மந்தம் வேலையின்மையை அதிகரித்ததால் இறக்குமதி செய்யப்பட்ட இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான கோஷங்கள் எழுந்தன. அந்நியர்கள் ‘மண்ணின் புதல்வர்களான’ சிங்களவர்களின் வேலைகள், வர்த்தக […]

மேலும் பார்க்க

தேசிய இனப் பிரச்சினையும் இலங்கையின் இடதுசாரி இயக்கமும் – பகுதி 1

26 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : குமாரி ஜயவர்த்தன குமாரி ஜயவர்த்தன (Kumari Jayawardena – பிறப்பு 1931)  இலங்கையின் முன்னணி கல்வியாளரும் பெண்ணிய ஆர்வலரும் ஆவர். இவர் கொழும்புப் பல்கலைகழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் இணைப் பேராசிரியாராகப் பணியாற்றியவர். ஓய்வு வயதை அடையும் முன்னரே பல்கலைக் கழகப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். இவர் ஒரு முழுநேர ஆய்வாளராகச் செயற்பட்டார். இலங்கை சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SSA) என்ற ஆய்வு நிறுவனத்தின் தொடக்க கால […]

மேலும் பார்க்க

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் : 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள் – பகுதி 3

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : பேராசிரியர் சி. அரசரத்தினம் பனஞ்சீனி உற்பத்தித் தொழிற்சாலை 1916 ஆம் ஆண்டில் பதநீரில் இருந்து சீனி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வல்வெட்டித்துறையில் ஆரம்பிக்கப்பட்டது. ‘சிலோன் சுகர் ரிபைனரிஸ் கம்பனி’ என்ற பெயருடைய நிறுவனம் இத்தொழிற் சாலையை இயக்கியது. இத்தொழிற்சாலை அயலில் இருந்த மக்கள் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கியது. பதநீரின் விலையும் அதிகரித்தது. கள்ளிறக்கும் தொழிலாளர் குடும்பங்கள் நன்மை பெற்றன. நாட்டின் தென்பகுதிக்கும் இந்தியாவிற்கும் பனை […]

மேலும் பார்க்க

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் : 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள் – பகுதி 2

25 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : பேராசிரியர் சி. அரசரத்தினம் கூலிகள் 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் கூலியின் போக்கு எவ்வாறு அமைந்தது என்பதை அறிந்து கொள்வதும், அதனை ஆதாரமாகக் கொண்டு சமூகத்தின் பல்வேறு பிரிவினரதும் வாழ்க்கைத் தரம் எப்படி இருந்தது என்பதை ஊகித்து அறிவதும் சுவாரசியமானதொரு விடயமாகும். 1835 இல் ஒரு கூலித் தொழிலாளியின் நாட் கூலி 3 துட்டு அல்லது 12.3 சதமாக இருந்தது. கைவினைத் தொழிலாளி ஒருவன் […]

மேலும் பார்க்க

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் : 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள் – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : பேராசிரியர். சி. அரசரத்தினம் அறிமுகம் பேராசிரியர். சி. அரசரத்தினம் அவர்கள் ‘வட இலங்கைத் தமிழர் பொருளாதாரத்தின் அடிப்படைகள்’ எனும் நூலை எழுதினார். இச் சிறுநூல் 1982 ஆம் ஆண்டில் ‘தந்தை செல்வா நினைவு’ இரு நாள் நிகழ்வரங்கில் இவர் நிகழ்த்திய பேருரைகளின் தொகுப்பாகும். முதல் நாள் விரிவுரையில் 17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் வட இலங்கைத் தமிழர் பொருளாதாரத்தின் வளர்ச்சி நிலையை விரிவாக எடுத்துக் கூறினார். […]

மேலும் பார்க்க

17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் வடஇலங்கையின் தமிழர் பொருளாதாரம் – பகுதி 3

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : சின்னப்பா அரசரத்தினம் தானிய வரி நிலத்திலிருந்து அறுவடைசெய்த தானியத்திற்கு வரியாக, விளைவின் பத்தில் ஒரு பங்கு அறவிடப்பட்டது. விவசாயிகள் தானியவரி பற்றி அடிக்கடி முறைப்பாடு செய்து வந்தனர். நிலத்திற்கு அறவிடப்பட்ட வரிக்கும் மேலாக, அறுவடை செய்த தானியத்திற்கு எனவும் வரி அறவிடப்பட்டது. இது விவசாயிகளின் வரிச் சுமையை அதிகரித்தது. இந்த வரியைக் கழித்துவிடும்படி விவசாயிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. அறுவடைக் காலத்தில் டச்சுக்காரர் […]

மேலும் பார்க்க

17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் வடஇலங்கையின் தமிழர் பொருளாதாரம் – பகுதி 2

18 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : சின்னப்பா அரசரத்தினம் ஏற்றுமதி வர்த்தகம் 17 ஆம் 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வேறு பல பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டன. இவை ஒவ்வொன்றும் சிறிய அளவு உடையனவாயினும் யாவற்றையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது கணிசமான அளவுடையனவாக அவை இருந்தன. யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்திற்கு இவற்றின் பங்களிப்பும் கணிசமான அளவினதாக இருந்தது. இப்பொருட்களில் பனை மரமும், பனை உற்பத்திகளும் முக்கியமான ஏற்றுமதிகளாக இருந்தன. மலையாளம், கருநாடகம், மதுரை ஆகிய […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்