பாக்கியநாதன் அகிலன், Author at Ezhuna | எழுநா

பாக்கியநாதன் அகிலன்

எரிக்கப்பட்ட நூலகங்களும் எரிபடமுடியா நூலகக் கனவுகளும் : நூலக நிறுவனம்

12 நிமிட வாசிப்பு | 12337 பார்வைகள்

1 1981 இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் அராலியில் இருந்தேன். அது என்னுடைய தாயாருடைய ஊர். நூலகம் எரிந்தபோது கடலில் வீழ்ந்த தீச்சுவாலை காரணமாக அராலிக்கடல் தீப்பற்றி எரிவதாக சிறுவனான நான் நினைத்துக்கொண்டேன். அது என் முதற் பீதிகளில் ஒன்றாய் அமைந்தது. அதற்குப் பின்னால் அடுக்கடுக்காய் பல விடயங்கள் நடந்தேறின. நெருப்பு மூண்டு எரியத் தொடங்கியது. சேரன் தனது ‘இரண்டாவது சூரியோதம்’ கவிதைத் தொகுதியில், […]

மேலும் பார்க்க

ஐ.நா இனப்படுகொலை நியதிச்சட்டத்தின் 75 வருடங்கள் : நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள், சுவடியகங்கள்

18 நிமிட வாசிப்பு | 6513 பார்வைகள்

அநேக பெயர்களுள்அவனது பெயரை மறந்துவிடுவோம் என அஞ்சுகிறேன்அவனை மறக்க நான் அஞ்சுகிறேன்மாரி மழையிலும், புயலிலும்எம் இதயக் காயங்கள் ஆறக்கூடும்என நான் அஞ்சுகிறேன்… – மஹவுட் தர்வீஷ் (பலஸ்தீனம்) – “இனப்படுகொலை என்பது பாரிய எண்ணிக்கையிலான கொலைகளை மட்டும் குறிப்பதல்ல; திட்டமிடப்பட்ட வகையில் சுவடிக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் கல்லறைகள் உட்பட ஒரு சமூகத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அழிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட எந்தவொரு செயற்பாட்டுத் தொகுதியும் இனப்படுகொலைதான்.” – சேராபிம் […]

மேலும் பார்க்க

இருப்பு, இழப்பு, நினைவு – ஊர்களைச் சுவடியாக்கஞ்செய்தல் – விரிவான உரையாடலுக்கான முற்குறிப்பு

21 நிமிட வாசிப்பு | 13689 பார்வைகள்

“ஊரான ஊரிழந்தோம் ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்”(கவிதா நிகழ்வு – எங்கள் மண்ணும் இந்தநாட்களும் :1985) ஊர்களைச் சுவடிப்படுத்தல் என்பது ஊரை அதன் அனைத்து அம்சங்களோடும் அவதானித்தல்,  அடையாளம் காணல், அது தொடர்பான அனைத்து விடயங்களையும் சேகரித்தல், அவற்றை ஒழுங்கமைக்கப்பட்ட முறையிற் பதிவுசெய்தல் ஆகியவற்யோடு கூடிய ஒரு செயற்பாடாகும். அது ஊர்களை வரலாற்று நிலைப்படுத்தி, உள்ளூர் வரலாற்றுச் சட்டகத்திற்கு வலுச்சேர்க்கிறது. அத்துடன் ஊர்களை ஆற்றல்மிக்க முறையில் பராமரித்தல், நிர்வகித்தல், பயன்படுத்துதல், பாதுகாத்தல்  முதலியவற்றுக்கான முதலீடாகவும் காணப்படுகிறது. எப்போது நாம் ஊரை இழந்தோம்? எப்போது ஊர் நினைவாகியது? அது எப்போது கழிவிரக்கமாயும், முடிவடையாத – […]

மேலும் பார்க்க

இந்துவாக்கப் பேரலையின் பின்னணியில் ஈழத்துச் சைவத்துக்கும் – சைவசித்தாந்தத்திற்கும் ஒரு ஆவணவெளி

10 நிமிட வாசிப்பு | 20774 பார்வைகள்

இப்போது உலகளாவிய அல்லது அகன்ற இந்துவாக்கப் பேரலையின் தந்திரோபாயங்களுள் ஈழத்துச் சைவமும் சிக்குண்டுள்ளது அல்லது சிக்கவைக்கப்பட்டுள்ளது. அது ஒருவகையில் ஈழச் சைவத்தின் தனியடையாளத்தை பெரும் இந்துப்போர்வை கொண்டு மூடி அதன் தனித்துவத்தை கரைக்கத்தொடங்கியுள்ளது என்பதை எங்களிற் பலர் கவனிக்கத் தவறியுள்ளோம். ஈழச் சைவ மரபுரிமைகளைப் பின் தள்ளி – அகன்ற இந்துவாதத்துள் அதனை அங்கவீனமடையச் செய்யும் இந்த மாற்றத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றல் அல்லது எந்தக் கேள்விகளுமற்று பொதுப்போக்குகளிற்கு பின்னால் ஓடும் […]

மேலும் பார்க்க

புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் – II

12 நிமிட வாசிப்பு | 15184 பார்வைகள்

புலம்பெயர் மரபுரிமை என்பது தமது தாயகங்களை விட்டு, பிற தேசங்களில் வாழ்பவர்கள் காவிச் சென்றதும், நினைவு கூர்வதும், புலம்பெயர்ந்த நிலங்களில் உருவாக்கிக் கொண்டதும், பிற பண்பாடுகளிலிருந்து உள்வாங்கிக் கொண்டதுமான ஒரு கலப்பொட்டான மரபுரிமையை (hybrid heritage) எடுத்துக்காட்டுவது. இதிற் பெரும்பகுதியாக அவர்களோடு கூடவே புலம்பெயர்ந்த அவர்களது முன்னோர்கள் வழிவந்த பரம்பியப் பயில்வுகள் அவற்றின் முக்கியமான பகுதியாக இருக்கும். இன்னொருவகையில் அவர்கள் காவிச்சென்று அவர்களது தலைமுறைகள்தோறும் கடத்தப்பட்டு வந்த மரபுரிமை புலம்பெயர் […]

மேலும் பார்க்க

புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் – I

15 நிமிட வாசிப்பு | 16120 பார்வைகள்

ஈழத் தமிழர்களின் மரபுரிமையைப் (Heritage) பாதுகாப்பதற்கான ஒரு வழிவரைபடத்தை இந்தக் கட்டுரை உருவாக்க முயல்கிறது. இன்று, ‘ஈழத் தமிழர்கள்’ என்ற பதப் பிரயோகம் புவியியல் ரீதியாக இலங்கைத் தீவுக்குள் வாழுகின்ற சிறுபான்மைத் தமிழர்களை மட்டுமின்றி, உலகில் வேறு எந்தப் பாகத்திலும் வாழும் இலங்கைத் தீவைச் சேர்ந்த தமிழர்களையும் இணைத்துக் கொண்ட கூட்டு அடையாளத்தைக் குறிக்கிறது. இன்று  அது தன்  புவியியல் எல்லை கடந்த உணர்வுத் திரட்சி; ஒடுக்குமுறையும், மனக்காயங்களும் கட்டமைத்த […]

மேலும் பார்க்க

எண்மிய மரபுரிமை : அவசியமும் அவசரமும்

7 நிமிட வாசிப்பு | 13247 பார்வைகள்

மரபுரிமை பற்றிய பாரம்பரிய உரையாடல்கள் மரபுரிமைகளை இயற்கை மரபுரிமை, பண்பாட்டு மரபுரிமை என்று பாகம்பிரித்துக் கொள்ளும். ஆனால் அண்மைய பத்தாண்டுகளில் மரபுரிமை பற்றிய கற்கைப்புலம் பெருவிரிவு கண்டுள்ளதுடன் உள்ளடக்க ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அது மேலும் செழுமை பெற்றுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப பெருவெடிப்பு மரபுரிமைப் புலத்தின் சாத்திய எல்லைகளை அகலித்துவிட்டுள்ளது. அவ்வகையில் உருவான புதிய சாத்தியமும், பாகமுமாக எண்மிய மரபுரிமை (digital heritage) அமைகிறது. எண்மிய மரபுரிமை என்பது […]

மேலும் பார்க்க

வன்செயல் மரபுரிமையும் ஈழத்தமிழர்களும்

7 நிமிட வாசிப்பு | 10946 பார்வைகள்

கடந்த சில பத்தாண்டுகள், மரபுரிமைகளை இனங்காணல், அது தொடர்பான கருத்தாடல்கள், செயற்பாடுகளில் பல முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளன. குறிப்பாக அனைத்து வகைப்பட்ட போர்கள், இனவழிப்புக்கள், சர்வாதிகாரம், காலனியங்கள் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் வெளிப்பாடுகளை மரபுரிமையின் பகுதியாகக் கொள்ளும் போக்கு முக்கியமானதாகும். இவற்றை இன்று ‘வன்செயல் மரபுரிமை’ (violence heritage) என்ற பெயரால் இப்புதிய பார்வைகள் சுட்டுகின்றன. இவை இருண்ட, எதிர்மறையான, வலிமிகுந்த, அதிருப்தி நிறைந்த, கடினமான நிலைமைகளது வாழும் சாட்சியங்களாகப் […]

மேலும் பார்க்க

ஈழத் தமிழரும் கறுப்புச் சுற்றுலாவும்

6 நிமிட வாசிப்பு | 13416 பார்வைகள்

அண்மைக் காலத்தில் அதிகம் கவனிப்புப் பெற்ற ஒரு சுற்றுலா முறையாகச் கறுப்புச் சுற்றுலா (Black tourism) காணப்படுகிறது. குறிப்பாக 1990களில் இது முக்கியமான புலமை உரையாடலாக உருவாகியது. சிலவேளைகளில் இருள் சுற்றுலா (Dark tourism) அல்லது துயரச் சுற்றுலா (Grief tourism) எனும் பெயர்களாலும் அழைக்கப்படும். இது ஒரு மக்கள் குழுமத்தின் அல்லது தேசத்தின் துயரடர்ந்த நிகழ்ச்சிகளான இறப்பு, கொலை, அழிவு முதலியன நடைபெற்ற இடங்களை அவற்றின் சான்றாதாரங்களை உள்ளடக்கிய […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை அழித்தல்

12 நிமிட வாசிப்பு | 17680 பார்வைகள்

யாழ்ப்பாண நகரபிதாவுக்கு ஒரு குடியானவனின் மடல் ஓகஸ்ட் 2021 இல் எழுதப்பட்ட இக்கட்டுரை அக்காலப் பகுதியில் வெளியான மாநகர முதல்வரின் நாவலர் மண்டபம், ஆஸ்பத்திரி வீதி தொடர்பான கருத்துக்கள் மீதான உரையாடல் ஆகும் அன்புடையீர். தங்களுடைய அண்மைய பத்திரிகையாளர் சந்திப்பொன்றின் காட்சித் துண்டொன்றை டான் தொலைக்காட்சியில் பார்க்கக் கிடைத்தது. அது ஒருங்கே மகிழ்ச்சியையும், கவலையையும் தந்தது. மகிழ்ச்சியானது, ‘நாவலர் கலாசார மண்டபத்தை மத்திய அரசிடம் கையளிப்பது இல்லை’ என்ற தங்கள் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)