இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்ற நிலையில், பத்தாவது பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் 8821 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் 396 வேட்பாளர்களும் வன்னித் தேர்தல் தொகுதியில் 423 வேட்பாளர்களும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இலங்கை அரசியலானது பெரும்பாலும் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு துறையாகவே இருந்து வருகிறது. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமானது குறைந்தளவிலேயே உள்ளது. இந் நிலையில் இலங்கையின் 16 […]
சமூகச் செயற்பாடுகள் பல்வேறு வழிகளிலும் வடிவங்களிலும் இடம்பெறுகின்றன. பால்நிலை ரீதியில் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான சமூகச் செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் அதிகம் இடம்பெறுவதனை அவதானிக்க முடிகிறது. இலங்கை மக்களிடையே 2010 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் உள்ளடங்கலான இணையவழி ஊடகங்களின் பாவனையானது அதிகரித்தது எனலாம். இணையவழி ஊடகங்கள் குயர் மக்களுடைய செயற்பாடுகளுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கின்றன. நாளாந்த வாழ்வில் ஏராளமான குயர் மக்கள் இணையவழி ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். அண்மைக்காலங்களில் […]
உலகில் தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேண, இணையவழி ஊடகங்கள் வழிகோலின. இணைய வழி ஊடகங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்று அவை இன்றியமையாதவையாக மாறி வருகின்றன. முதலாளித்துவ ஆணாதிக்க உலகில் பெண்கள் மற்றும் குயர் மக்களுக்கெதிரான வன்முறைகள் புதிய ஊடகங்கள் மூலம் நவீன வடிவம் பெறுகின்றன. குறிப்பாகச் சமூக ஊடகங்கள் மூலமாக அதிக அளவில் இணைய ரீதியான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றமையை அவதானிக்க […]
இலங்கை, வேறுபட்ட மதங்களையும் தந்தையாதிக்கக் கருத்தியல்களையும் தன்னகத்தே கொண்டு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியமான பண்பாடுகளைப் பின்பற்றக்கூடிய பெரும்பாலான மக்களைக் கொண்ட ஒரு நாடு. இது பௌத்தர்கள் மற்றும் சைவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கிறது. வடபுலத்தில் இருக்கக்கூடிய மக்கள் அதிகமாக சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இங்கு தென்னிந்திய இந்துப் பண்பாட்டின் செல்வாக்குகளை அதிகம் காணலாம். “தன்பாலீர்ப்பு இயற்கைக்கு மாறானது. அது எங்களுடைய சமயத்துக்கும் கலாசாரத்திற்கும் எதிரானது. […]
வடபுல சமூகத்தளத்தில் தன்பாலீர்ப்பை விலக்கப்பட்ட(Taboo) ஒரு விடயமாகப் பார்க்கும் பெரும்பாலானவர்கள் திருநர்களை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிடுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் திருநர்களைப் பற்றிய தெளிவு பெரும்பாலானவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது எனலாம். இருந்தாலும் கூட எவ்வாறு, தந்தையாதிக்கச் சமூகங்களில் பெண் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்கிறாளோ அதே போல் திருநங்கைகளும் திருநம்பிகளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். குடும்பத்தால் புறக்கணிக்கப்படுவதாலேயே பெரும்பாலான திருநர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. “அன்று என் தந்தை வார்த்தையாலும் பிரம்பாலும் என்னைத் […]
தன்பாலீர்ப்பு என்பது வடபுல சமூகத்தளத்தில் பெரும்பாலானவர்களால் விலக்கப்பட்ட (Taboo) ஒரு விடயமாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக தன்பாலீர்ப்பாளர்கள் இந்த சமூகத்திற்குள் தம்மை வெளிப்படுத்த முடியாதவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். பல போராட்டங்களுக்கு மத்தியில் தம்மை வெளிப்படுத்தும் தன்பாலீர்ப்பினரை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வை மதிப்பிற்குரியதுதானா? தன்பாலீர்ப்பு (Homosexual) என்பது ஒருவர் தன்பாலினத்தை சேர்ந்த ஒருவர் மேல் காதல் கொள்ளுதல் எனலாம். இதில் பெண் தன்பாலீர்ப்பாளர்கள் (Lesbian) மற்றும் ஆண் தன்பாலீர்ப்பாளர்கள் (Gay) […]
குயர் சமூகத்தின் பன்மைத்துவத்தையும் சமூக ஏற்பையும் நோக்கிய ஏராளமான செயற்பாடுகள் மற்றும் குயர் நிகழ்வுகள் உலகளாவிய ரீதியில் நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பல்வேறு தளங்களிலும் குயர் மக்கள் தமக்கான வெளிகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதை நோக்கியே நகரசெய்கின்றன. குயர் மக்கள் தமது காதல் வாழ்க்கையிலும் மற்றவர்களைப் போலவே வாழ விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் நிறையப் போராடவேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சமூக ஏற்பு நோக்கி இது […]
“நான் திருநங்கையாக இருப்பது இயற்கையானது” என்கிறார் கவிதா. இந்த சமூகத்தில் கவிதாவைப் போல பலர் தமது பால்நிலை குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். குயர் மக்கள் என்போர் யார்? அவர்களை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? என்றவாறாக ஏராளமான வினாக்கள் […]
அறிமுகம் ‘இயற்கை’, ‘இயல்பு’ என்ற வரையறைக்குள் அடங்காதவைகளை சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இயற்கையானது மற்றும் இயல்பானது என்பவைகளை யார் தீர்மானிக்கிறார்கள்? எதிர்ப்பால் காதலைக் கொண்டாடுகின்ற இந்தச் சமூகம், குயர் மக்களின் காதலையும் அழகியலையும் இயல்பாகவாவது பார்க்கப் பக்குவப்படவேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் இன்றைய காலகட்டத்தில் பால்நிலை சார்ந்த மாற்றுச் சிந்தனைகளின் அவசியம் உணரப்பட்டிருக்கிறது. இலங்கை போன்ற தந்தை ஆதிக்கக் கருத்தியல் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு நாட்டில் பால்நிலை சார்ந்த விடயங்கள் ஆய்வுக்கு […]