பழப்பயிர்களின் பல்வகைமை பனம்பழம் அரிய சொத்தாகும். வேறுபட்ட போகங்களில் பழங்களைத் தரும் பனை மரங்கள் எம் பிரதேசத்தில் பரந்து காணப்படுகின்றன. அவற்றின் கிழங்குகளின் தன்மையிலும், கள் மற்றும் கருப்பனி என்பனவற்றின் பிரிகை அளவுகளிலும் மாறுபாடு உண்டு. கற்பகத் தருவான பனைமரத்தின் பயன்பாடுகள் அநேகம். முக் கனிகளான மா, பலா, வாழை என்பனவற்றின் பயன்பாடும் எம் பிரதேசத்தில் கணிசமாக உண்டு. மா மரத்தில் ஒட்டுதல் மூலம் உருவாக்கப்படும் கன்றுகள் தாய் தாவரத்தின் […]
இந்தப் பகுதி உணவளிக்கும் விவசாயம், உற்பத்தி பற்றியும் சுற்றாடலின் பல்வகைமை பற்றியும் ஆராய்கிறது. உலகின் சகல பகுதியிலிருந்தும் உணவு உற்பத்தியாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருள்கள் இயற்கை எமக்குத் தந்த அருங்கொடையாகும். அறுசுவை கொண்ட இவ் உணவுகளே உலகத்தை நிலைபெறச் செய்கிறது. தாவரங்களானாலும் சரி, விலங்குகளானாலும் சரி, உணவின்றி இயங்கமுடியாது. இவ் உலகில் உணவுற்பத்தி இன்றியமையாத ஒன்றாகும். உணவு உற்பத்தியில் பிரதான காரணகர்த்தா சூரியனே. சூரிய ஒளி […]
நன்னீர் நிலைகளின் பல்வகைமையும் அபிவிருத்தியும் வளமுள்ள நிலங்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்கள் வெவ்வேறு வகையான அச்சுறுத்தல்களுக்கு உட்படுகின்றன. அவ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே அபிவிருத்தியும் நடந்தேறுகிறது. வடக்கு மற்றும் கிழக்கானது இலங்கையின் அபிவிருத்தியில் முக்கிய பங்குவகிக்கும் பிரதேசங்களாகும். மேடுபள்ளம் அதிகமுள்ள தரைத்தோற்றமாகையால் இப் பகுதியில் நடாத்தக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் இலகுவில் முன்னெடுக்கப்படக்கூடியவை. பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டமையால், இப் பாதைகளிலிருந்து எய்தக்கூடிய போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலும் […]
முதல் இரண்டு அத்தியாயங்களில் கடல், கரையோரங்கள், காடுகள் மற்றும் அங்குள்ள உயிரினங்கள், ஏனைய பல்வகைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. இம் மூன்றாம் அத்தியாயம், தரையிலுள்ள முக்கியமான அம்சங்களை பல்வகைமையுடன் தொடர்புபடுத்தி ஆராயவுள்ளது. ஆகையால், இவ் அத்தியாயம் ‘நிலப்பயன்பாடும் நன்னீர் நிலைகளின் பல்வகைமையும்’ எனும் தலைப்பில் அமைகிறது. வட மாகாண நிலம், நன்னீர்நிலைகளின் பல்வகைமை வடக்கு கிழக்கு பிரதேசம் 8 மாவட்டங்களைக் கொண்டது. இலங்கையின் முதலாவது நிர்வாகக் கட்டமைப்பு வட மாகாணத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. […]
வடக்கு கிழக்கு காடுகளின் பொதுவான தன்மைகள் காடுகளிலுள்ள மண்ணானது மிகவும் வளமுள்ளது. ஆண்டாண்டு காலமாக சிதைவடையாமல் பேணப்படும் இம் மண், மண்ணின் சகல கூறுகளையும் கொண்டுள்ளது. அதிகமாக காணப்படும் பிரிகையாக்கும் பக்டீரியாக்கள் இப் பகுதியின் சமநிலையைப் பேணுவதில் பெரும்பங்காற்றுகிறது. வேருடன் இணைந்து ஒன்றிணைந்து வாழும் அநேக பக்டீரியாக்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. பிரிகையாக்கிகளான பங்கசுகளும் இங்கு உண்டு. வேருடன் இணைந்துவாழும் பக்டீரியாக்கள் மண்ணிலுள்ள பொஸ்பரஸை கரைத்து தாவரங்களுக்கு தேவையான போசணைகளை வழங்குவதில் […]
கற்றது கைமண் அளவு கல்லாதது கடலளவு என்பதற்கு ஏற்ப கடல் பற்றிய எம் அறிவுக்கெட்டிய விபரங்கள் முதலாவது அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளன. இவ் இரண்டாம் அத்தியாயம் காடும் காடுசார் உயிரியல் பல்வகைமை பற்றியும், அதனுடனான அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களையும் தாங்கிவருகின்றது. காடுசம்பந்தமான ஒரு பொதுஅறிமுகத்துடன் இவ் அத்தியாயத்தில் நுழைந்தால் மட்டுமே வடக்கு கிழக்கு காடுகள் பற்றிய ஓர் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும். காடு அல்லது வனம் எனும் பதம் உலகில் பல்வேறு […]
கடல்சார் பல்வகைமை மேற்பரப்பு நீர்நிலைகளில் ஒன்றான கடல், வடகிழக்கின் முக்கிய சொத்தாகும். பரந்துபட்ட பிரதேசமாக விரிந்து காணப்படும் இந் நீலநிறப் பிரதேசம் அநேக உயிர் இரகசியங்களை உள்ளடக்கியுள்ளது. இப்பிரதேசம் அறுகம்பே கரையிலிருந்து புத்தளம் வரை எம் பிரதேசவாசிகளால் கையாளப்பட்டுவருகிறது. பருவகாலங்களுக்கு அமைய மாறிமாறி வீசும் காற்றலைகளோடு கடலில் குறித்துக்காட்டப்படும் மாற்றங்கள் நிகழ்வதுண்டு. கடற்கரையோரம், கடற்கரையை அண்டிய பகுதி, தரவைக்கடல் மற்றும் ஆழ்கடல் பகுதி என்பன பல்வேறுவகைப்பட்ட சாகியத்தொகுதிகளை உள்ளடக்கியுள்ளன. இவை […]
கிழக்குக்கரையின் அம்பாறை தொடங்கி வடமேற்குக் கரையின் புத்தளம் வரை கடற்கரையோரங்களை உள்ளடக்கிய நிலம், நீர்நிலைகள், காடு என்பன உள்ளடங்கலாக ஐவகை நிலங்களை உள்ளடக்கியதே வடக்கு – கிழக்குபிரதேசமாகும். பாரம்பரிய வரலாறுகள், நிகழ்வுகள், இடப்பெயர்வுகள், விவசாய அபிவிருத்திகள் என்பனவற்றை உள்ளடக்கி இலங்கையின் அபிவிருத்தியில் பெரும்பங்காற்றிவருகின்றது இந்தப் பிராந்தியம். பூகோள அமைப்பின்படி, கடலோரங்களையும் ஐவகை நிலங்களையும் கொண்ட இப் பாரம்பரிய பிரதேசம் பலநூற்றாண்டுகாலமாக அழிவடையாமல் இருப்பது பெரும்பேறாகும். இயற்கை அனர்த்தங்கள், மனிதச் செயற்பாடுகள், […]