1884 இல் பிரித்தானிய ஆளுநர் சேர். ஆர்தர் கோர்டன் யாழ்ப்பாணக் கல்லூரியையும் அமெரிக்க மிசனரிகளின் பணியையும் பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்தார். அமெரிக்க மிசனரிகள் யாழ்ப்பாணத்தில் ஆற்றும் மருத்துவப் பணிகளுக்காகவும் மருத்துவப் பீடத்தை மீள ஆரம்பிக்கவும் 1000 ரூபாவை ஆர்தர் கோர்டன் அமெரிக்க மிசனுக்கு வழங்கினார். உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து 1873 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குத் திரும்பிய கிறீன் நியூயோர்க்கில் கிறீன்கில் என்ற இடத்தில் உள்ள தனது குடும்ப இல்லத்தில் […]
அமெரிக்க இலங்கை மிசனரியினர் (ACM) 1879 ஆம் ஆண்டின் காலாண்டுக் கூட்டத்தொடர் ஒன்றில் மானிப்பாய் மருத்துவக் கல்லூரி தொடர்பில் சில தீர்மானங்களை மேற்கொண்டனர். அதிலே மருத்துவக் கல்லூரிக்கு ஒரு வகுப்பில் ஆகக் கூடுதலாக 15 மாணவர்களையே அனுமதிப்பதென்றும் ஒவ்வொரு மாணவரிடமும் மாதாந்தம் 3 ரூபாவை பள்ளிக் கட்டணமாக அறவிடுவதென்றும் தீர்மானித்தனர். இதற்கமைய ஒவ்வொரு மாணவரும் வகுப்பில் அனுமதிக்கப்படும் போது முற்பணமாக 25 ரூபாவை கட்டணமாகச் செலுத்துமாறு கேட்கப்பட்டனர். இந்நிபந்தனைகளுக்கு அமைவாக […]
யாழ்ப்பாணக் கல்லூரியும் புகழ்பெற்ற மாணவர்களும் அண்மையில் தனது 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய யாழ்ப்பாணக் கல்லூரியானது 1823 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைக் கல்விக்கழகம் (Batticotta Seminary) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. வட்டுக்கோட்டை கல்விக்கழகமானது அன்று ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களுக்கு இணையானதாக விளங்கியது. கிறித்துவ சமயத்துக்கு அதிகமான மாணவர்களை உள்ளீர்க்க முடியாத காரணத்தால் 1855 இல் இதன் கற்றல் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன. வட்டுக்கோட்டை கல்விக்கழகம் இருந்த இடத்திலிருந்தே அதாவது “பற்றிக்கோட்டா […]
இன்று இலங்கையின் முதன்மைத் தேசிய மருத்துவமனையாக விளங்கும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலே வருடாந்தம் சிகிச்சை பெறும் நோயாளர்களது எண்ணிக்கையானது நாட்டிலுள்ள ஏனைய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரைவிட அதிகமாகும். ஆனால் இலங்கையில் ஐரோப்பிய மருத்துவம் அறிமுகமான 19 ஆம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக மருத்துவமனையிலே (யாழ். போதனா மருத்துவமனை) இலங்கையின் எந்த ஒரு மாகாண மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுவோரைவிட அதிகளவானோர் சிகிச்சை பெற்றனர். மருத்துவர் […]
1838.11.29 அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்த மருத்துவர் எட்வின் லோசன் கொச் ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணத்தில் பயின்று தனது 20 ஆவது வயதில் அரச புலமைப்பரிசிலைப் பெற்று கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்குச் சென்று மருத்துவப் பட்டம் பெற்றார். இவர் கொழும்பு மருத்துவபீடத்தின் ஆரம்ப விரிவுரையாளர்களில் ஒருவராகவும் இதன் 2 ஆவது அதிபராகவும் கடமையாற்றினார். 1870 இல் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு மருத்துவபீடத்தின் முதலாவது அணி மாணவர்களது 2 ஆவது விரிவுரையின் போது உரையாற்றிய மருத்துவர் […]
ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆபத்துக்கு உதவி வைத்தியசாலையின் (FINS Hospital) தலைமை அதிகாரியாகக் கடமையாற்றிய மருத்துவர் கிறீன் செப்ரெம்பர் 1868 இல் தலைமை நிருவாகி என்ற பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஆபத்துக்குதவி வைத்தியசாலை நிருவாகத்துக்கு அனுப்பினார். கிறீன் கடிதத்திலே பின்வரும் விண்ணப்பங்களையும் முன்வைத்திருந்தார். தனது மாணவர்கள் மருத்துவப் பயிற்சியை ஆபத்துக்குதவி வைத்தியசாலையில் பெற்றுக்கொள்வதற்கு அனுமதித்தல். மானிப்பாய் மருத்துவமனையும் ஆபத்துக்குதவி மருத்துவமனையும் மருந்துகளையும் ஏனைய பொருட்களையும் பரிமாறிக் கொள்வது. மருந்துகள் மற்றும் […]
யாழ்ப்பாணத்தில் வசித்த மருத்துவர் கிறீனுக்கு 1865 ஆம் ஆண்டு 2 ஆவது பெண் குழந்தை கிடைத்தது. பத்து வயதிலே தாயை இழந்த கிறீன் சிறுவயது முதல் தன்னை அரவணைத்து வளர்த்த லூசி என்னும் மூத்த சகோதரியின் பெயரைத் தனது 2 ஆவது குழந்தைக்குச் சூட்டினார். இந்த ஆண்டு 88 வயதான தனது தந்தை மசாசுசெட்சில் மறைந்த செய்தியை அமெரிக்காவிலிருந்து ஏறத்தாழ 3 மாதங்களுக்குப் பின்னர் கிடைத்த கடிதம் மூலம் கிறீன் […]
பிரபல்யமான அமெரிக்க மிசனரிகள் சிலர் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய தொண்டுகளைப் பற்றி தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன் அவர்கள் ஆற்றிய விரிவுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. அந்நூலுக்கு “அமெரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குள் ஆறாகப் பாய்ந்து வந்த அன்பு வெள்ளம்” என்று பெயரிட்டிருந்தார் பேராயர். அந்த அன்பு வெள்ளத்தில் மருத்துவர் கிறீனும் ஒருவர். 1858 இல் அமெரிக்கா திரும்பிய கிறீன் தமிழிலே […]
மானிப்பாயிலிருந்து 1864 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் திகதி மருத்துவர் கிறீன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தமக்கு முதலாவது மகவு பிறந்த மகிழ்ச்சியான செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். யூலியா என்ற தனது மூத்த சகோதரியின் பெயரையே அந்தப் பெண் குழந்தைக்கு கிறீன் சூட்டினார். பின்னாளில் யூலியா தான் பிறந்த யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து 1906 -1910 வரையான காலப்பகுதியில் அமெரிக்க இலங்கை மிஷனுக்காக 5 வருடகாலம் சேவையாற்றினார். கீழைத்தேசத்தில் இந்தியத் […]
மருத்துவர் கிறீனது 2 ஆவது வருகை மருத்துவர் கிறீன் 1862 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் திகதி பிறதேசங்களுக்கு மிஷனரிகளை அனுப்பும் அமெரிக்க மிஷன் சங்கத்துக்கு (ABCFM) எழுதிய கடிதத்தில் தான் யாழ்ப்பாணம் புறப்படுவதற்குத் தயாராகி இருந்தமையைத் தெரிவித்திருந்தார். கப்பல் புறப்படுவதற்காக 5 மாதங்கள் வரை கிறீன் காத்திருக்க வேண்டியிருந்தது. நியூயோர்க்கிலிருந்த கிறீன், 82 வயதான தந்தையிடம் இறுதி பிரியாவிடை பெறுவதற்காக கிறீன் கில்லிற்குச் (Green Hill) […]