இதுவரை உலகம் கண்டிராத தார்ப் பாதைகள், புகையிரத வண்டிகள், நீராவிக் கப்பல்கள், தொலைத்தொடர்புச் சாதனங்கள் அனைத்துமே இக்காலத்துக்குரியவை. 1760 ஆம் ஆண்டு முதல் 1820 – 1840 வரை – அதற்குப்பின்னரும் – பிரித்தானியாவில் தொடர்ந்த இயந்திரக் கைத்தொழில் புரட்சியே உலகத்தை நவீன யுகத்துக்குக் கொண்டுவந்தது. 1820 இல் தான் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் லவுடன் மக்அடம் (Johon Loudon MacAdam) என்பவரால் முதற்தடவையாக பாதைகள் கற்களால் சமப்படுத்தப்பட்டு கற்தூள்களால் […]
பிரித்தானியர் இலங்கையின் மன்னராட்சி முறைமையினை ஒழித்து, ழுழு நாட்டையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்ததுடன், அவர்களின் ஏகபோக நலனுக்காக பல்வேறு மாற்றங்களை செய்திருந்தமையினை முன்னைய கட்டுரையில் அவதானித்திருந்தோம். அதன்தொடர்ச்சியினை இனி பார்க்கலாம். 1830 களின் முற்பகுதியில், பிரித்தானியர்கள் இலங்கையில் தங்கள் நிலையை உறுதிப்படுத்துவதை கிட்டத்தட்ட பூர்த்திசெய்துவிட்டனர். ஐரோப்பாவிலும் உலக அரங்கிலும் அவர்களுக்கு பெரிய சவால்கள் இருக்கவில்லை. எனவே தீவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும் பொருளாதார இலாபத்தைப் பாதுகாப்பதிலும் அவர்கள் அதிக ஆர்வம் […]
1818 இல் கிளர்ச்சி வெடிக்கும் வரை தமக்கு சரியான தகவல் கிடைக்காததற்கும், கிளர்ச்சி வெடித்தபின்னர் அதனை நசுக்குவதற்கும் தாம் மிகுந்த சிரமப்பட்டதற்கும் இரு காரணங்களை பிரித்தானியர் இனம்கண்டனர். ஒன்று கண்டியை சிறப்பாக கண்காணித்து நிர்வகிப்பதற்கு மலைப்பாங்கான கண்டி பிரதேசத்தினை பாதைகளால் இணைக்கவேண்டும். மற்றையது தமக்கு விசுவாசமான உள்ளூர்த் தலைவர்களை உருவாக்கி தமது நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பதாகும். 1818 இல் கிளர்ச்சியை அடக்குவதற்கு தமது படைகளை அனுப்பியதன் மூலம் கண்டி இராச்சியத்தில் […]
12 ஆம் நூற்றாண்டில் இந்து சமுத்திரத்தில் அதுவரை கடலாதிக்கம் செலுத்திய சோழ சம்ராச்சியம் பலவீனப்பட்டபோது அவர்களது பிடியில் இருந்த கடல் வர்த்தகம் அரேபியர்களினதும் முஸ்லிம்களினதும் கைகளுக்கு மாறியது. ஐரோப்பிய நாடுகளின் கடல் வலிமை ஓங்கியபோது அவர்களது துப்பாக்கிப் பலத்தின் முன்னால் ஆரியர்களின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதலில் போர்த்துகேயர் இலங்கைக்கு வந்தது ஒரு தற்செயலான விடயம். அவர்கள் கடலாதிக்கத்துக்காக அரேபியர்களோடும், இலங்கையிலும் இந்தியாவிலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட – […]
வரலாற்று போக்குகளைப் பற்றி பேசும்போது “அந்த காலம் போல இனிவருமா” என்று பலர் சலித்துக்கொள்வது புதிய விடயம் அல்ல. சில நல்ல விடயங்கள் மறைந்து வருகின்றன என்பது உண்மைதான். அன்றிருந்த காடுகள், தெளிவான ஆற்றுநீர், தூயகாற்று போன்ற பலவற்றை இன்றைய தலைமுறை இழந்திருக்கிறது. சமூக வாழ்க்கையில் கூட அன்பான குடும்ப உறவு, நாணயம், பெரியோரை மதித்தல் போன்ற நல்ல விழுமியங்கள் மறைந்து வருகின்றன. ஆயினும் கடந்த காலமே பொற்காலம் என்று […]
கடந்த காலங்களில் ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர, நீண்ட காலமாக பல்வேறு கலாசார பின்புலம்கொண்ட, மக்கள் அமைதியாக சகவாழ்வு நடத்தும் ஒரு முன்மாதிரியான நாடாக இலங்கை இருந்து வந்திருக்கிறது. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான உறவுகள் ஒரு சில பக்கச்சார்பான வரலாற்றாசிரியர்கள் சித்திரிப்பதைப்போல எப்போதும் அல்லது தொடர்ச்சியாக பகை முரண்பாடானதாக இருக்கவில்லை. பண்டைக் காலங்களில் அவ்வப்போது இடம்பெற்ற தென்னிந்தியப் படையெடுப்புகளை உள்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்மீது தொடுத்த யுத்தங்களாக சில […]
இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்கும் இத்தொடர் கட்டுரை இரு […]