இளங்கோ, Author at Ezhuna | எழுநா

இளங்கோ

சங்கரி சந்திரனின் ‘சூரியக்கடவுளின் பாடல்’ (Song of the Sun God)

10 நிமிட வாசிப்பு | 4056 பார்வைகள்
March 22, 2025 | இளங்கோ

இலக்கியம் கடந்த காலத்தை சாம்பல் புழுதிகளிலிருந்து வெளியே எடுத்துவரும் வல்லமை உடையது. ஆகவேதான் அதிகார வர்க்கம், எழுதுபவர்களை எப்போதும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஓர் இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால், அவர்களை அடையாளப்படுத்தும் ஆவணங்களை அழிக்கவேண்டுமென, அன்றைய பேரரசுகளிலிருந்து இன்றைய நவீன அரசுகள் வரை முயல்கின்றன. காலனித்துவத்திலிருந்து விடுபட்ட இலங்கையில், தமிழர்கள் தாம் ஒடுக்கப்படுவதற்கு எதிராகச் செயற்படத் தொடங்கியதை சிங்கள அதிகார வர்க்கம் நன்கு விளங்கிக்கொண்டதால்தான், அரிய நூல்களையும், ஓலைச்சுவடிகளையும், […]

மேலும் பார்க்க

‘தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்’ : ‘Tea Time With Terrorists’ நூலை முன்வைத்து

11 நிமிட வாசிப்பு | 5837 பார்வைகள்
February 18, 2025 | இளங்கோ

‘Tea Time With Terrorists’ என்கின்ற சுவாரசியமான தலைப்புடன் இருந்த ஈழம் பற்றிய நூலை அண்மையில் வாசித்தேன். 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு அமெரிக்கருக்கு ‘தீவிரவாதிகள்’ பற்றி அறியும் ஆவல் வருகின்றது. தீவிரவாதிகளை நேரடியாக அறிவதன் மூலம் ஏதேனும் ஒருவகையில் தீவிரவாதத்தை அறியவும், கட்டுப்படுத்தவும் முடியும் என அவர் நினைக்கின்றார். இத்தனைக்கும் அவர் இயந்திரவியலில் பணியாற்றிவர். ஒருவகையில் இன்றைய AI (Artificial Intelligence) பற்றி 25 […]

மேலும் பார்க்க

மலரவனின் ‘போர் உலா’ (War Journey) 

10 நிமிட வாசிப்பு | 7917 பார்வைகள்
January 22, 2025 | இளங்கோ

‘போர் உலா’ 1990 களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த மலரவன் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூல். ஆங்கிலத்தில் இது ‘War Journey’ என மொழியாக்கம் செய்யப்பட்டு பெங்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது 1990 ஆம் ஆண்டு மாங்குளத்தில் இருந்த சிங்கள இராணுவ முகாமைத் தகர்ப்பதற்காய் மணலாற்றிலிருந்து செல்கின்ற போராளி அணியின் கதையைச் சொல்கின்றது. மலரவன் இயக்கத்தில் இருந்தபோது அப்போது முக்கிய ஒரு படைத்துறையாக வளர்ந்து கொண்டிருந்த பசீலன் 2000 […]

மேலும் பார்க்க

அலைந்துழலும் வாழ்க்கையும், இட‌ம்பெய‌ர‌ ம‌றுக்கும் ம‌ன‌ங்க‌ளும் : வாசுகி க‌ணேசான‌ந்த‌னின் ‘Love Marriage’ நாவலை முன்வைத்து

11 நிமிட வாசிப்பு | 6565 பார்வைகள்
December 19, 2024 | இளங்கோ

அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் ‘Representations of the Intellectual’ என்கின்ற நூலில், ஒரு அத்தியாயம் முழுவதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கியே செல்லும். தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து நகராதவிடத்து எந்த ஏற்றமும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை. ‘மாற்றம் என்பதே மாறாதது’ என்று வாளா சொல்லிக்கொண்டிருக்காது, எந்தத் திசையில் செல்ல‌வேண்டுமென்ப‌தைத் தீர்மானிக்கும் […]

மேலும் பார்க்க

ஒரு ஈழத் தமிழரின் புகலிட வாழ்வு : லோகதாசன் தர்மதுரையின் ‘The Sadness of Geography’ நூலை முன்வைத்து

10 நிமிட வாசிப்பு | 6838 பார்வைகள்
November 21, 2024 | இளங்கோ

1 1983 இல் சாவகச்சேரி சங்கத்தானையில், இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பியோடும் ஒருவர் இறுதியில் கனடாவை வந்து சேரும்வரை அலைந்துழலும் வாழ்க்கையை ‘The Sadness of Geography’ நூல் கூறுகின்றது. 80 களில், தனது பதின்மங்களில் யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி விடுதியில் கல்வி கற்கின்ற லோகதாசனின் சுயசரிதை நூல் இதுவாகும். அநேக ஈழத்தமிழரைப் போல, 81 இல் யாழ் நூலக எரிப்பும், 83 ஆடி இனக் கொலைகளும் […]

மேலும் பார்க்க

கைதி #1056 : ரோய் ரத்தினவேல் அவர்களின் சுயசரிதை 

13 நிமிட வாசிப்பு | 7540 பார்வைகள்
October 16, 2024 | இளங்கோ

மனவடுக்களின் காலம் ‘Prisoner #1056’ என்கின்ற இந்தச் சுயசரிதை நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலாவது பகுதி, ரோய் ரத்தினவேல் என்பவர் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள் பற்றியது. இரண்டாவது பகுதி கனடாவில் அவர் பெறுகின்ற அனுபவங்கள் குறித்தது. இலங்கையில் பிறந்த ரோய் ரத்தினவேல் போரின் நிமித்தம் அனுபவித்தவை மிகுந்த துயரமானவை. ரோய் கொழும்பில் பிறந்தாலும், நாட்டு நிலைமைகளால் அவரது தாயாரோடும், தமையனோடும் பருத்தித்துறைக்கு அனுப்பப்படுகின்றார். தகப்பன் மட்டும் […]

மேலும் பார்க்க

சாரோன் பாலாவின் ‘படகு மக்கள்’ 

17 நிமிட வாசிப்பு | 9451 பார்வைகள்
July 27, 2024 | இளங்கோ

‘படகு மக்கள்’ (The Boat People), கனடாவில் கப்பலில் வந்து இறங்கிய ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசும் ஒரு புதினமாகும். ஐநூறுக்கு அதிகமான ஈழத் தமிழர்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக கடலில் பயணித்து கனடாவின் கிழக்குப் பகுதியில் வந்து சேர்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல் இதுவாகும். இந்நாவலில் மகிந்தன் என்பவனும், அவனது பத்து வயது மகனான செழியனும் முக்கிய பாத்திரங்களாகின்றனர். அவர்கள் கனடா வந்திறங்கியபின், அவர்களுக்காக […]

மேலும் பார்க்க

ஷியாம் செல்வதுரையின் ‘பசித்த பேய்கள்’ (The Hungry Ghosts)

12 நிமிட வாசிப்பு | 7527 பார்வைகள்
June 19, 2024 | இளங்கோ

‍’பசித்த‌ பேய்கள்’ நாவல் 1983 இனக்கலவரத்தின் பின்னர் கனடாவிற்கு வந்து சேரும் சிவனின் கதையாகும். சிவன் தனது 19 ஆவது வயதில் இலங்கையில் உயர்தரப் பரீட்சை எடுத்த கையோடு கனடாவுக்குப் புலம்பெயர்கின்றார். அது 1984 இல் நிகழ்கின்றது. சிங்களத் தாய்க்கும், தமிழ்த் தந்தைக்கும் பிறந்த சிவன், ‘83’ கலவரத்தால் அச்சுறுத்தப்பட்டாலும், அவர்களைச் சிங்களக் கலப்பின அடையாளம் காப்பாற்றுகின்றது. இக்கலவரம் நிகழ்வதற்கு முன், சிவன் அவரது தமிழ்த் தந்தையை இழந்துவிடுகின்றார். சிவனின் […]

மேலும் பார்க்க

அனுக் அருட்பிரகாசத்தின் ‘ஒரு குறுகிய திருமணத்தின் கதை’

17 நிமிட வாசிப்பு | 9945 பார்வைகள்
May 20, 2024 | இளங்கோ

1 நெடும் வருடங்கள் நடந்த ஒரு யுத்தத்தில் ஒரு நாளைப் பிரித்தெடுத்து நிதானமாய்ப் பார்த்தால் என்னவாகும்? உயிர் தப்பியதே அதிசயமாய்த் தோன்றுவது ஒருபுறமிருக்க, அந்த நாளொன்றில் இந்தளவு சம்பவங்கள் நிகழ்ந்ததா என்ற ஆச்சரியம் இன்னொருவகையில் ஒருவரைத் திகைக்க வைக்கக்கூடும். அனுக் அருட்பிரகாசம் எழுதிய ‘The Story of a Brief Marriage’ நாவல், எறிகணைத் தாக்குதலில் காயமடையும் ஆறுவயதுச் சிறுவனை, இளைஞனான தினேஷ் வைத்தியசாலைக்குள் தூக்கிக்கொண்டு வருவதோடு தொடங்குகின்றது. அதேபோல […]

மேலும் பார்க்க

தமிழ்ப் பெண்புலி (Tamil Tigress) : நிரோமி டீ ஸொய்ஷாவினது நினைவுக் குறிப்புகள்

18 நிமிட வாசிப்பு | 10478 பார்வைகள்
April 19, 2024 | இளங்கோ

ஒருவர் ஈழத்தில் இயக்கமொன்றில் இணைந்து போராடியதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாய் போர் உக்கிரமாய் நடைபெறும் பிரதேசங்களில் – போராட்டத்தில் இணைந்துகொள்ள – புறக்காரணிகள் இன்னும் அதிக நெருக்கடிகளைக் கொடுக்குமென்பதை நாமனைவரும் அறிவோம். எமது இயக்கங்களில் பலர் பெருந்தொகையாய்ச் சேர 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் சம்பவமும், 1981 இல் யாழ். நூலக எரிப்பும், 1983 இல் ஜூலைக் கலவரமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய காரணங்களாய் அமைந்தன. ஆனால் யாழ். […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்