கார்த்திகேசு இந்திரபாலா, Author at Ezhuna | எழுநா

கார்த்திகேசு இந்திரபாலா

உச்சநிலைப் பேரரசுகளை உலுப்பிய உலகப் போர்

12 நிமிட வாசிப்பு | 4381 பார்வைகள்

யாழ்ப்பாணத்துக்கும் மலாயா – சிங்கப்பூருக்கும் இடையில் வளர்ந்துவந்த நெருங்கிய தொடர்புகள் 1930களில் இடம்பெற்ற இரு பெரும் நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டன. ஒன்று, 1933 இல் தொடங்கிய பெருமந்தம் (Great Depression); மற்றது 1939இல் தொடங்கிய இரண்டாவது உலகப் போர். மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத்தவரின் எண்ணிக்கை படிப்படியாகக் கூடி, 1930களில் உச்சத்தை அடைந்தது. புலம்பெயர்வு தொடர்ந்து வளர முடியாத வகையில் பெருமந்தமும் உலகப் போரும் தடைபோட்டன. தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தவர் சிலர் ஆங்கிலேய நிர்வாகிகளால் […]

மேலும் பார்க்க

மலாயா தந்த மாற்றங்கள்

13 நிமிட வாசிப்பு | 5642 பார்வைகள்

என் பெற்றோருடைய மூன்றாவது பிள்ளையாக நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். அவர்களுடைய முதல் இரு பிள்ளைகளும் கோலாலம்பூர் நகரில் பிறந்தவர்கள். என் பெற்றோருடைய திருமணமே கோலாலம்பூரிலேதான் நடைபெற்றது. நான் பிறந்தபோது என் தாயாருடைய சகோதரர்கள் ஐவர் மலாயாவில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு மூத்தவராக இருந்தவர் மலாயாவில் வேலை செய்து ஓய்வு பெற்றுத் திரும்பிவந்திருந்தார். மலாயா நாட்டுடனான இத்தகைய தொடர்பு யாழ்ப்பாணத்தில் பரவலாகப் பல இடங்களில் இருந்தது. இருபதாம் நூற்றாண்டில், இலங்கை சுதந்திரம் அடையுமுன், […]

மேலும் பார்க்க

படுவானை நோக்கி

12 நிமிட வாசிப்பு | 4758 பார்வைகள்

பொ.ஆ. 1937 இனை உலக நிலையைப் பெரும் அளவில் குலுக்கும் நிகழ்வு எதுவும் நடைபெற்ற ஆண்டாகக் கணிப்பதற்கு இல்லை. உலகம் காணாத மிகப்பரந்த வல்லரசாகிய பிரித்தானியப் பேரரசும், அதனுடன் இரு நூற்றாண்டுகளுக்கு மேலாகப் போட்டியிட்ட ஐரோப்பிய வல்லரசுகளாகிய பிரெஞ்சுப் பேரரசும், ஒல்லாந்துப் பேரரசும் ஒற்றுமையாக ஐரோப்பிய ஏகாதிபத்திய வலைக்குள் தாம் கைப்பற்றிய ஆசிய, ஆபிரிக்க, ஓசியானிய நிலங்களை அடக்கி வைத்திருந்தன. உலகில் ‘பிரித்தானியாவின் அமைதிநிலை’ (Pax Britannica) மலர்ந்திருப்பதாகத் தோன்றியது. […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்