தமிழில்: த. சிவதாசன் எனது வீட்டிலிருந்து யாழ்ப்பாண நகரம் நோக்கி நான் போகும்போதெல்லாம் அரசடி/ பலாலி வீதிகளின் சந்தியில் இருக்கும் SLITT வடக்குப் பல்கலைக்கழகத்தின் (SLIIT Northern Uni – NU) கட்டடத்தைக் கடந்து போவதுண்டு. சென்ற வருடம் (2023), இக்கட்டடத்திற்கான அத்திவாரம் இடப்பட்டதிலிருந்து, தூண்கள் நிறுவப்பட்டு, கண்ணாடி யன்னல்கள் பொருத்தப்படுவது என அதன் உருவாக்கத்தை மிகவும் ஆர்வமாக அவதானித்து வந்தவன். எதிர்காலக் கனவுகளைச் சுமந்துகொண்டு நம்பிக்கையோடு வந்து போகும் […]
தமிழில் : த. சிவதாசன் மூலம் : marumoli.com, January 22, 2025. 2021 இல் நான் திரு டேவிட் பீரிஸை முதன் முதலாகச் சந்தித்தேன். தொழில் விடயமாக வடக்கிற்கு வந்தபோது யாழ்ப்பாணத்திலுள்ள எனது வீட்டில் நாம் சந்தித்தோம். டேவிட் பீரிஸ் மோட்டர் கொம்பனி (David Pieris Motor Company – DPMC), போர்க்காலமுட்பட, பல தசாப்தங்களாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகிறது. வியாபார முயற்சிகளுக்கும் அப்பால் வடக்கில் தனது நிறுவனம் […]
தமிழில் : த. சிவதாசன் Source : Jekhan Aruliah, Jaffna’s 3AxisLabs’ journey into Artificial Intelligence, lankabusinessonline.com, Dec.03.2024 “உங்களைக் கொல்லாதுவிடுவது எதுவோ, அதுவே உங்களை மேலும் பலமாக்குகிறது”. செயற்கை விவேகம் இச்சுலோகத்தை எளிதாக உருவாக்கித் தந்திருக்க முடியும். உண்மையில் இச்சுலோகத்தை முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியது 19 ஆம் நூற்றாண்டில் ஜேர்மனியில் வாழ்ந்த தத்துவஞானி நீட்சே. விஞ்ஞானப் புனைவுகளில் மட்டுமே எந்திர மனிதர்கள் அசத்திக்கொண்டிருந்த அபத்தமான கற்பனைக் […]
தமிழில் : த. சிவதாசன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகத்தை நான் விமர்சிப்பதற்கு முன் அதற்கு எனது வாழ்த்தைத் தெரிவிக்க வேண்டும். எனது ‘ஜூன் 2018 லங்கா பிஸினெஸ் ஒன்லைன்’ கட்டுரையில் சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகத்தின் வரைபடத்தில் வடமாகாணம் வெறுமனே வறண்ட பிரதேசமாகவே காட்டப்படுகிறது எனவும், யாழ்ப்பாண விமான நிலையத்தைத் தவிர வேறெந்தச் சுற்றுலாத்தலங்களும் அங்கில்லை என்பது போலக் காட்டப்பட்டிருக்கிறது எனவும் விமர்சித்திருந்தேன். ஆனால் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்ட […]
தமிழில் : த. சிவதாசன் இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ‘சுற்றுலாத் தளங்கள்’ என்ற வரைபடத்தின் படி, வடமாகாணத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு சுற்றுலாக் கவர்ச்சியாக யாழ். விமான நிலையம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இவ்வரைபடம் யாழ். விமான நிலையத்தையாவது காட்டுகிறதே என நாம் பூரிப்படைய வேண்டும். விமான நிலையத்தைத் தவிர வடமாகாணத்தின் அனைத்துப் பகுதிகளுமே வறண்ட பிரயோசனமற்ற பிரதேசங்களெனவே இப்படம் காட்டுகிறது. வடக்கில் […]
“உன்னைக் கொல்லாமல் விடுவது எதுவோ, அதுவே உன்னை மேலும் பலப்படுத்தும்” என்றொரு பிரபலமான சொல்வழக்கு 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜேர்மன் தத்துவ ஞானி பிறெட்றிக் நீட்சேயினால் முதலில் பாவிக்கப்பட்டது என்பார்கள். இக்கூற்று கொஞ்சம் மிகை நாடகப் பாணியானதும் பெரும்பாலும் உண்மையற்றதுமெனக் கருதப்பட்டாலும் யாழ் ஜீக் சலஞ் (Yarl Geek Challenge – YGC) இற்கு இது மிகவும் பொருத்தமானது. YGC ஒரு போட்டி நிகழ்வு. எனக்குப் பிடித்தமான அதற்கு, […]
தமிழில்: த. சிவதாசன் ராஜ் ஜனனின் தந்தையார் முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் வெற்றிகரமான ஆலை அதிபர். அலுமினியத் தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலை, தனியார் மருத்துவமனை, செய்திப் பத்திரிகை எனப் பல தொழில்களையும் நடாத்தியவர். அப்போது ஜனனுக்கு 11 வயது மட்டுமே. 1971 இல் நடைபெற்ற ஜே.வி.பி ஆயுதக் கலகம் சிறுவன் ஜனனின் அரும்பும் காலங்களைக் குழப்பிவிட்டது. கலகத்தின் விளைவாக குடும்பம் பிரிய நேரிட்டது. தாயும் சகோதரியும் கொழும்பில் மாட்டிக்கொள்ள தந்தையுடனும் […]
தமிழில் : த. சிவதாசன் 2015 இல் நான் யாழ்ப்பாணத்திற்குக் குடிபெயர்ந்ததிலிருந்து அங்கு போர் விதவைகளால் நடாத்தப்படும் உணவகம் பற்றி பல வதந்திகளைக் கேள்விப்பட்டிருந்தேன். கொழும்பிலிருந்து வடக்கே வரும் நண்பர்கள் கிளிநொச்சிக்கு அருகே, A9 வீதியில் இது இருப்பதாகச் சொன்னார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து ஒன்றரை மணித்தியால வாகன ஓட்டத்தில் (சிலர் இதை ஒரு மணித்தியாலத்தில் கடந்துவிடுவார்கள்) கிளிநொச்சிக்கு அருகே இருக்கும் இவ்விடத்தைத் தரிசிக்க எனக்கு ஒரு வருடம் பிடித்தது. பின்னர் தான் […]
காரைநகர் தீவை யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் இணைப்புத் தெருவின் வடமேற்கு மூலையில் இருக்கிறது மூளாய் என்னும் ஒரு சிறு கிராமம். பிரபலமான கசூரினா கடற்கரை மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி அமைந்திருக்கும் வட்டுக்கோட்டை ஆகியவற்றை யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் முக்கிய கிராமமும் இதுவே. மூளாய் கூட்டுறவு மருத்துவமனை இல்லாவிட்டால் இக்கிராமம் இவ்வளவு பிரபலமாகியிருக்க முடியாது. பிரித்தானிய மலாயாவிலிருந்து தாயகம் திரும்பும் தமிழரது சேமிப்பையும் ஓய்வூதியத்தையும் மூலதனமாகக் கொண்டு 1935 இல் ஆரம்பிக்கப்படது இந்த மருத்துவமனை. […]
பல தசாப்தங்களைக் காவுகொண்டு 2009 இல் முடிவுக்கு வந்த இனப்போர் முடிந்து 7 வருடங்களாகியும் வடக்கின் பணியுருவாக்க முயற்சிகள் இன்னும் விவசாயம் மற்றும் பாரம்பரியத் தொழில்களோடு மட்டுமே நின்றுவிடுகின்றன. இது சிலருக்கு “ஏதோ எம் பங்கிற்கு செய்கிறோம்” என்ற எண்ணத்தையும்; இன்னும் சிலருக்கோ போருக்கு முன்னான இலட்சியக் கற்பனா பூமியைத் தாம் நிறுவிவிடப் போகிறோம் என்ற துடிப்பையும் கொடுக்கலாம். என்ன இருந்தாலும் விவசாயம், கைத்தொழில்கள் மட்டும் போதாது. இலட்சிய பூமி […]