பொதுவசதிகள் துறையின் கீழ் உள்ளடங்கும் ஒரு பிரதான வசதிச் சேவையாக மின்சாரம் மற்றும் எரிபொருள் வழங்கல் என்பன இருந்து வருகின்றன. நாட்டின் அனைத்துப் பிரதான பொருளாதார உற்பத்தி மூலங்களையும் இயக்கும் சக்தி வளங்களாக மின்சாரம் மற்றும் எரிபொருள் வளங்கள் இருந்து வருகின்றன. நீர் மின்வலுவும் எரிபொருள் வலுவும் இணைந்து மின்சாரம் விநியோகிக்கப்படுவதுடன் மாற்றுச்சக்தி வளங்களான காற்றாலைகள் மற்றும் சூரியப்படல்கள் மூலமும் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டு வருகிறது. மின்சார வளங்களில் நீர்வலு மூலமான […]
பொருளாதார வகைப்பாட்டின் கீழ் உள்ளடங்கும் துறைசார் பகுதிகளில் முக்கியமானதான பொதுவசதிகள் துறையானது மின்சாரம், சக்திவளம், எரிபொருள், தொலைத்தொடர்பு, வீடமைப்பு வசதிகள், குடிநீர் வழங்கல் ஆகிய முக்கிய செயற்பாடுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய துறையாகவே பொதுவசதிகள் துறை காணப்படுகின்றது. இந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படும் வீடமைப்புத் துறையின் நிலையைப் பரிசீலிக்கும் போது, பிரதான பொதுவசதிகளில் முதன்மையானதாக வீட்டுவசதியே காணப்படுகிறது. அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உறைவிடம் […]
சகல துறைகளின் ஆக்க மூலங்களையும் இணைப்புச்செய்து செயற்பட வைப்பதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியினை தூண்டுகின்ற கட்டமைப்பாக வீதிகள் செயற்படுகின்றன. வீதிகளின் இணைப்பின் மூலம் உற்பத்தி வளங்கள் பரிமாற்றப்படுகின்றன. மனிதர்கள் இடமாற்றப்படுகின்றனர். விளைச்சல்கள் சந்தைகளை நோக்கி எடுத்து வரப்படுகின்றன. உற்பத்தியாளர்கள் நல்ல வருமானத்தைப் பெறுகின்றனர். நுகர்வாளர்கள் தரமும் மலிவுமான பொருள்களை நுகரக்கூடியதாக இருக்கிறது. கொண்டுவரப்படும் உள்ளீட்டுப் பொருட்கள் தொழிற்சாலைகளை இயங்கச் செய்கிறது. சுற்றுலாவின் கவர்ச்சிகரமான இடங்களைச்சென்று பார்வையிட்டு மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள […]
பொருளாதார அபிவிருத்தி துறையில் பங்கு கொள்ளும் துறைகளை நாம் பொருளாதார உட்கட்டமைப்புத் துறைகள், உற்பத்தி உட்கட்டமைப்புத் துறைகள், சமூக உட்கட்டமைப்புத் துறைகள் என மூன்று துறைகளாக பிரித்து வகையீடு செய்யலாம். உற்பத்தி உட்கட்டமைப்பு துறையினுள் விவசாயம், கால்நடை, கடற்றொழில், வனவளம், கைத்தொழில், சனத்தொகை போன்ற துறைகளும்; பொருளாதார உட்கட்டமைப்புத் துறையினுள் மின்சாரம், சக்தி வளம், நீர்வழங்கல், நீர்ப்பாசனம், போக்குவரத்து, தபால், தொலைத்தொடர்புகள், வங்கிகள் போன்ற துறைகளும்; சமூக உட்கட்டமைப்புத் துறையினுள் […]
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மனிதவள அபிவிருத்தியில் கல்வியின் மீதான முதலீடும் அது சார்ந்து செய்யப்படும் அதீத வளப் பயன்பாடும் பற்றிய ஆய்வானது இவ்விரு மாகாணங்களின் அபிவிருத்தியில் அதீத அக்கறைக்குரியதாகும். வரலாற்றின் ஆரம்பம் முதல் கற்றல் செயன்முறை என்பது இவ்விரு மாகாணங்களின் பிரதான முதலீட்டு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எல்லையோரத்திலிருந்த பல குடும்பங்களின் மெய்யான அபிவிருத்தியை வெளிக்கொண்டு வந்ததற்கு, கல்வியினால் அக் குடும்பங்களிலிருந்து மேற்கிளம்பிய ஒரு சில பிள்ளைகள் காரணமாகினர். அக் […]
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியின் நிர்ணயக் காரணிகளில் ஒன்றாக விளங்கும் நன்னீர் மூலங்கள் இவ்விரு மாகாணங்களையும் விவசாயம் சார் பொருளாதாரம் நிலவும் பிராந்தியங்களாக உருமாற்றக் காரணமாகியுள்ளன. மழைக் காலத்தில் அதிகம் பெறும் நீரைச் சேமித்து வைப்பதன் மூலம், இவ்விரு மாகாணங்களின் 60 சதவீதமான மக்கள் விவசாயம் சார் தொழில் முனைவுகளை தமது நிரந்தர ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். இதனால் இவ்விரு மாகாணங்களின் எழுச்சிமிக்க பொருளாதாரத் தொழில் […]
வாழ்வாதாரத் தொழில் முனைவுகளில் பெரிதும் விரும்பப்படுவதும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக் கூடியதுமான தொழிற்துறையாக கைத்தொழிற்துறை இருந்து வருகிறது. வளர்ச்சியடைய விரும்பும் எந்தப் பொருளாதாரமும் கைத்தொழிற்துறையின் மீது வளர்ச்சியை ஏற்படுத்தினால் தான் அது நிலைபேறுடைய பொருளாதார வளர்ச்சியாக அமையும். இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கையிலும், முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கான 7 பிரதான பகுதிகளில், நான்கு துறைகள் கைத்தொழிற் துறை சார்ந்தே காணப்படுகின்றன. பின்வருவன அந்த 07 பிரதான பகுதிகள் : உணவுப் பாதுகாப்பு […]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வாழ்வாதாரத் தேவையின் ஒரு பகுதியை நிறைவு செய்துவரும் நன்னீர் மீன்பிடித் தொழில்துறையானது நன்னீர் மீன்பிடி நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தியடைந்து வருகிறது. வடக்கு மாகாணத்தில் காணப்படும் நன்னீர் மூலங்களாகவுள்ள பாரிய மற்றும் நடுத்தர குளங்களும் 1,740 சிறிய குளங்களும் 1,605 சிறு குட்டைகளும் 60 அணைக்கட்டுக்களும் நன்னீர் மீன்பிடியை பெரிய, சிறிய அளவுகளில் மேற்கொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றன. குறிப்பாக வடமாகாணத்தில் 15,455 சதுர கிலோமீற்றர் […]
இலங்கை நாட்டினுடைய 63 சதவீதமான கடற்கரைகளை கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் வட மாகாணத்தில் 40 சதவீதமான கடற்கரைகளும் கிழக்கு மாகாணத்தில் 23 சதவீதமான கடற்கரைகளும் காணப்படுகின்றன. இவ்விரு மாகாணங்களும் மிகச் சிறந்த மீன்பிடி வளத்தை கொண்ட கடல்பரப்பை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இக்கடற்கரைகள் மீன்பிடி, மீன் வளர்ப்பு, சுற்றுலா ஆகியவற்றுக்கு பொருத்தமாக உள்ளன. மீன்பிடித் தொழிலானது இவ்விரு மாகாணங்களிலும் விவசாயத்துறைக்கு அடுத்து மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் துறையாகும். நாட்டின் மொத்த […]
வாழ்வாதாரத் தொழில் முயற்சித் துறைகளில் உயிரின வளர்ப்புத் துறையானது முக்கியத்துவம் வாய்ந்தது. இவ் வளர்ப்புத் துறை விலங்குகளையும் பறவைகளையும் உள்ளடக்குகின்றது. பறவை வளர்ப்பில் முதன்மையாக அமைந்திருப்பது கோழி வளர்ப்பாகும். இவை இறைச்சி, முட்டை ஆகிய இரு பெரும் நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகின்றன. சமூகத்தில் பலரும் இந்த வாழ்வாதார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த முதலீட்டுடன் இத்தொழிலை ஆரம்பிக்க முடிவதுடன் இயலுமையின் விருத்திக்கேற்ப படிப்படியாக அதிகரித்துச் செல்லவும் முடியும் என்பது பலரும் இத்தொழிலில் இணைவதற்கு […]