வடக்கு கிழக்கின் ஆடு வளர்ப்புத் தொழிற்றுறை வடக்கு கிழக்கு மாகாணங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி நிற்கும் மற்றொரு வாழ்வாதாரத் துறையாக, ஆடு வளர்ப்பைக் குறிப்பிடமுடியும். மிருக வளர்ப்பில் குறுகிய காலத்தில் நன்மை பெறக்கூடியதும் பராமரிப்புத் தொடர்பில் ஒப்பீட்டளவில் இலகுவானதுமான ஆடு வளர்ப்புத் தொழில் துறையானது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நன்கு பிரபல்யமான ஒன்றாகும். கிழக்கு மாகாணத்தில் 254,066 ஆடுகளும் வட மாகாணத்தில் 192,779 ஆடுகளுமாக, இவ்விரு மாகாணங்களிலும் 446,845 ஆடுகள் உள்ளதாக […]
வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் மற்றுமொரு வாய்ப்புமிக்க வளமாகக் காணப்படும் கால்நடைத் துறையில், இப்பிரதேசத்தில் காணப்படும் நிலவளம் முக்கிய ஆதாரமாகக் காணப்படுகிறது. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 15.2 சதவீதத்தைக் கொண்ட கிழக்கு மாகாணத்தினதும் 13.5 சதவீதத்தைக் கொண்ட வடக்கு மாகாணத்தினதும் நிலப்பரப்புக் கூட்டுத்தொகை 28.7 வீதமாகக் காணப்படுகின்றது. இந்த அதிகளவான நில அமைவின் காரணமாக திறந்தமுறைக் கால்நடை வளர்ப்புப் பாரம்பரியத்தைக் கொண்ட கால்நடைத்துறை வளர்ச்சியடைந்துள்ளது. கால்நடை வளர்ப்புத் துறையின் ஆதாரத்துடன் மேலதிக […]
வடக்கு – கிழக்கின் விவசாயத்துறையில் மற்றொரு வாழ்வாதார வளமாக காணப்படும் பழப்பயிர்ச் செய்கையில் பல சாத்தியமான வளங்கள் இவ்விரு மாகாணங்களிலும் காணப்படுகின்றன. இலங்கையின் பழச்சந்தையில் கணிசமான ஒரு வீதத்தை நிரம்பல் செய்யும் இவ்விருமாகாணங்களிலிருந்தும் வாழை, மா, பப்பாசி, தர்பூசணி, தேசி, தோடை, கொய்யா, மாதுளை ஆகிய பழப்பயிர்கள் முதன்மை பெறுகின்றன. வடக்கு – கிழக்கு மாகாண வாழைச்செய்கை வாழைப்பழச்செய்கை பிரபல்யம் பெற்றுள்ள இலங்கையின் மாகாணங்களில் வடக்கும் கிழக்கும் பிரபல்யமானவை. வடக்கு […]
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வாய்ப்பான தொழில் வளமாகக் காணப்படும் விவசாயத்துறையில் அதிக பங்கை நிர்ணயிக்கும் நெல் மற்றும் தானியப் பயிர்களின் பங்களிப்புத் தொடர்பாக கடந்த இரு தொடர்களில் நாம் பரிசீலித்தோம். இன்று இதே துறையில் கணிசமான வாய்ப்பைக் கொண்டிருக்கும் மரக்கறிப்பயிர்களின் உற்பத்தி தொடர்பாக ஆராய்வோம். இலங்கைத் திருநாட்டின் தேசிய நெருக்கடியாக உருப்பெற்றுள்ள பொருளாதாரப் பின்னடைவை வெற்றி கொள்வதில் அதிக பங்களிப்பை வழங்கி வரும் உள்நாட்டு விவசாயத்துறையில் இப்போது பல […]
வடமாகாணத்தின் ஏனைய பயிர்செய்கைகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் தன்னாதிக்கமுள்ள உற்பத்தித் துறையாக விளங்கும் விவசாயத்துறையில் நெல் விவசாயம் பற்றிய செயல் மதிப்பீட்டை கடந்த கட்டுரையில் பார்வையிட்டோம். இம்முறை நெல் தவிர்ந்த பழப்பயிர்கள், மரக்கறிப்பயிர்கள், ஏனைய தானியப் பயிர்கள் மூலம் இவ்விருமாகாணங்களும் கொண்டுள்ள வாழ்வாதார வாய்ப்புகளையும் உணவுப்பாதுகாப்பையும் மதிப்பிடுவதாக இந்த ஆய்வானது இடம்பெறுகிறது. இதில் முதலாவதாக தானியப் பயிர்களின் உற்பத்தி தொடர்பாக நோக்கலாம். வடக்கு – கிழக்கு ஆகிய இரு […]
நெல் உற்பத்தியும் முதன்மைத்தன்மையும் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் தன்னாதிக்கமுள்ள உற்பத்தித் துறையாக விவசாயத்துறை விளங்குகின்றது. இவ்விரு மாகாணங்களினதும் பொருளாதாரத்தில் 15 சதவீதமான பங்களிப்பை விவசாயத்துறை வழங்கிவருவதுடன் 65 சதவீதமானோர் வாழ்வாதாரத்திற்கு தங்கியிருக்கும் துறையாகவும் இது செயற்பட்டு வருகின்றது. நிலப்பாவனை என்ற வகையில் விவசாயச் செய்கைக்காக கிழக்கு மாகாணத்தின் 42 சதவீதமான நிலப்பரப்பும், வடமாகாணத்தின் 33 சதவீதமான நிலப்பரப்பும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்விரு மாகாணங்களின் பிரதான விவசாயப் பயிராக நெல்லே […]
நிலப்பயன்பாட்டின் அடிப்படையில் 1,888,607 ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்ட வடக்கு -கிழக்கு மாகாணங்களில், வடமாகாணம் 889,007 ஹெக்டெயர் நிலப்பரப்பையும், கிழக்கு மாகாணம் 999,600 ஹெக்டெயர் நிலப்பரப்பையும் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் கிழக்கு மாகாணம் அதிக நிலப்பரப்பை கொண்டிருப்பதுடன், நீர்ப்பரப்பு என்ற வகையில் வடமாகாணத்தில் 8% சதவீதமும், கிழக்கு மாகாணத்தில் 6.35 சதவீதமுமாக மொத்தமாக இவ்விரு மாகாணங்களிலும் 14.35 சதவீதம் நீர்ப்பரப்பாகக் காணப்படுகின்றது. நிலப்பாவனையின் அடிப்படையில் வடமாகாணத்திலேயே அதிக காடுகள் காணப்படுகின்றன. 735,413.67 […]
பிரதேச அறிமுகம் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் ஒன்பது மாகாண பரப்புக்களில் அதிக நிலப்பரப்பைக் தன்னகத்தே கொண்டதும் சனத்தொகை செறிவின் அடிப்படையில் இலங்கையின் பிரதான இனங்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் ஆகிய மூவினத்தவரதும் குடியிருப்புக்களை கொண்டதோடு அதிக அளவிலான தமிழர்கள், முஸ்லீம்களின் தாயகப்பரப்பாகவும் காணப்படுகின்றது. பல்லின பன்மைச்சமூகங்கள் வாழும் பகுதியாகவுள்ளதனால் இப்பிரதேசத்தின் பண்பாட்டு மற்றும் சமூக நிலைமைகள் வேறு எந்த மாகாணங்களிலும் இல்லாத விசேட தன்மையுடைய பிராந்தியமாக இயங்கி […]