தமிழ்ச் சமூகம் நெடுங்காலத்திற்கு முன்பே வணிகத்தில் நன்கு வளர்ச்சியடைந்திருந்துள்ளது. தொல்லியற் சான்றுகளும் இலக்கியத் தரவுகளும் ஐயத்திற்கிடமற்ற வகையில் அதனை நிரூபிக்கின்றன. பொ.ஆ. முற்பட்ட காலத்திலேயே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழரின் வணிக வலையமைப்பு பரந்து விரிந்திருந்துள்ளது. தனிமனித நிலையிலும் பலரின் கூட்டிணைவுடன் குழும நிலையிலும் வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாங்குளத்து பிராமிக் கல்வெட்டில் இடம்பெறும் ‘வெள்ளறை நிகமத்தோர்’ என்ற குறிப்பு, பொ.ஆ.மு. 02 ஆம் நூற்றாண்டில் குழுவாக வணிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை வெளிப்படுத்தி […]
I தென்னாபிரிக்காவில் காந்தியும் பீஜி, மொறிசியஸ் முதலான நாடுகளில் மணிலாலும் புலம்பெயர்ந்த இந்தியரின் விடுதலைக்கான போராட்டங்களைத் தலைமைதாங்கி முன்னெடுத்ததுபோல இலங்கையில் இந்தியத் தொழிலாளரின் மீட்சிக்கான போராட்டங்களை கோ. நடேசய்யர் முன்னெடுத்துள்ளார். தஞ்சாவூரின் தென் ஆற்காட்டில் வளவனூர் கிராமத்தில் ஜனவரி 14, 1887 அன்று பிறந்த அவர் 1920 ஆம் ஆண்டு முதல் மரணிக்கும் வரை (நவம்பர் 07, 1947) இலங்கையில் வாழ்ந்துள்ளார். பத்திரிகை ஆசிரியர், சட்ட நிரூபண சபை – […]