முத்துவடிவு சின்னத்தம்பி, Author at Ezhuna | எழுநா - Page 2 of 2

முத்துவடிவு சின்னத்தம்பி

பெருந்தோட்டச்சமூகம்: சமூக மாற்றங்களும் நகர்வுகளும்

6 நிமிட வாசிப்பு | 11037 பார்வைகள்

இலங்கையில் வாழும் இந்திய தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் இன்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலேயே தொழில்செய்தும் வாழ்ந்தும் வருகின்றனர். அவர்கள் “தோட்டத் தமிழர்”, “பெருந்தோட்டத் தமிழர்”, “மலையகத் தமிழர்”, “உயர்நிலப்பிரதேசத் தமிழர்” போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். “உயர்நிலப்பிரதேசத் தமிழர்” (Uda Palatha Tamils) என்ற பெயர் மலையகத் தமிழரை வடக்கு – கிழக்கைச் சேர்ந்த இலங்கைத் தமிழரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்கு சிங்கள மக்களால் கையாளப்படுகின்ற ஒரு பெயரும், “மலையகத் தமிழர்” என்ற பெயர் […]

மேலும் பார்க்க

மலையகத்திலே ஒரு பல்கலைக்கழகமும் சமூக – பொருளாதார மேம்பாடும்

12 நிமிட வாசிப்பு | 10166 பார்வைகள்

சலனங்கள் இல்லாத நீர் ஒருபோதும் கடலையடையமாட்டாது. அதுபோன்றே, காலத்தின் தேவைகளுக்கேற்ப மாற்றங்களை அடைந்து கொள்ளமுடியாத ஒரு சமூகமும் வளர்ச்சியை அடையமாட்டாது. ஒரு சமூகம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், காலத்திற்குக் காலம் அதில் வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்கள் ஏற்படுவது இன்றியமையாததாகும். அப்படியெனின், சமூகத்தில் இவ்வித மாற்றங்களை ஏற்படுத்துவது யார் என்ற கேள்வி எழுகின்றது. ஒரு சமூகத்திலிருந்து உருவாகும் தொலைநோக்குள்ள அரசியற் தலைவர்கள், ஆற்றல்மிகு அறிவியலாளர்கள், சிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், திறமைமிக்க வியாபார முகாமையாளர்கள், […]

மேலும் பார்க்க

இலங்கையில் தேயிலைப் பயிர்ச்செய்கையும் இயற்கைச்சூழலின் மீது அதன் தாக்கங்களும்

11 நிமிட வாசிப்பு | 25636 பார்வைகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இலங்கையில் வளர்ச்சியடைந்து வந்த பெருந்தோட்டத்துறையானது தொடர்ந்துவந்த காலப்பகுதியில் இலங்கையினது பொருளாதாரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறையாக மாறியது. தேயிலை உற்பத்தியும், அதன் ஏற்றுமதியும் இதில் முதன்மை வகித்தது. சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நாட்டினது பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளும் சமூக-பொருளாதார முன்னேற்றமும் பெருந்தோட்டத்துறையினது வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்பு கொண்டனவாக இருந்தன. இத்துறையினது தோற்றமும் வளர்ச்சியும் பொருளாதாரத்தில் அடிப்படையான சில மாற்றங்களை ஏற்படுத்தியது. […]

மேலும் பார்க்க

பெருந்தோட்டத் தமிழ்மக்களின் சமூக அபிவிருத்திக்கு உந்துதல் அளிக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்குதல்

19 நிமிட வாசிப்பு | 17095 பார்வைகள்

ஒரு ‘சமூகம்’ என்பது எதனைக் குறிக்கும்? ‘ஒரு சமூகம் என்பது அதன் அங்கத்தவர்களை அடையாளங்காட்டுவதும், அவர்களுக்கிடையிலான ஒற்றுமையை நிர்ணயிப்பதுமான பொதுவான நோக்கம், நம்பிக்கைகள், விருப்பங்கள், தேவைகள், அத்தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கு அச்சமூகத்திற்குக் கிடைக்கப்பெறும் சாதனங்கள் என்பவற்றைக் கொண்டதாக இருக்கும். துரதிஷ்டவசமாக  பெருந்தோட்ட மக்களிடையே மேற்படி அம்சங்கள் இன்றுவரையும் போதுமான அளவு வளர்ச்சியடையாத நிலையிலேயே காணப்படுகின்றன. கடந்த சுமார் நான்கு தசாப்த காலப்பகுதியில் இச்சமூகத்தில் பல மாற்றங்களும் அபிவிருத்திகளும் ஏற்பட்டு வந்துள்ளபோதும், […]

மேலும் பார்க்க

மலையக இளைஞர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வியும் தொழில்சார் பயிற்சியும்

13 நிமிட வாசிப்பு | 11193 பார்வைகள்

ஒரு நாட்டினது பொருளாதார அபிவிருத்திக்கும் கல்வித்துறையில் அந்நாட்டில் ஏற்பட்டு வரும் சமூக – பொருளாதார முன்னேற்றங்களுக்குமிடையேயான நெருங்கிய தொடர்பு அண்மைக்காலங்களில் பல்வேறு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. சிறந்த கல்வியும், சிறந்த சுகாதார நிலைமைகளும் ஒரு நாட்டினது பொருளாதார அபிவிருத்திக்கு ஆக்கபூர்வமாகப் பங்களிப்பதோடு, தனிமனிதரது திறமைகளையும், ஆற்றல்களையும் மேம்படுத்துவதனூடாக அவர்களது சுயமுன்னேற்றத்திற்கும் உதவுகின்றன. கல்வியானது வறுமை, சனத்தொகை வளர்ச்சி, போசாக்கின்மை, சிசு மரணவிகிதம் என்பவற்றைக் குறைப்பதற்கும், வருமானம், உற்பத்தி, வாழ்க்கைத்தரம் […]

மேலும் பார்க்க

கூட்டு ஒப்பந்தங்களும் வேதனத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும்

13 நிமிட வாசிப்பு | 6045 பார்வைகள்

கூட்டு ஒப்பந்தங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் கூட்டு ஒப்பந்தமொன்றின் ஊடாக வேதனங்களை நிர்ணயிப்பது தோட்டத்தொழிலாளரின் வேதனங்களை நிர்ணயிப்பதில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு முக்கிய அபிவிருத்தியாகும். தொண்ணூறாம் ஆண்டுகளின் முற்பகுதியில் தோட்டங்களைத் தனியார்மயப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் வேதனங்கள், தொழில்நிலைமைகள் என்பன தொடர்பான கூட்டு ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே அது மேற்கொள்ளப்படவேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. எனினும், அவ்வித கூட்டுஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படாமலே தோட்டங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டன. 1994 ஆம் ஆண்டு பதவிக்கு […]

மேலும் பார்க்க

தேயிலையின் பசுமையும், சோர்வின் விளிம்பிலே நின்று உழைக்கும் தோட்டத்தொழிலாளரும்

19 நிமிட வாசிப்பு | 19721 பார்வைகள்

இலங்கையின் மலைநாட்டில் அடியெடுத்து வைக்கும் எவருக்குமே அப்பிரதேசத்தின் இயற்கை வனப்பினைக்கண்டு அதில் தமது உள்ளத்தைப் பறிகொடுக்காதிருக்க முடியாது. பச்சைக்கம்பளம் விரித்ததுபோன்று மலைச்சரிவுகளிலே பரந்துவிரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களும், அங்குத் தேயிலைச் செடிகளிலே செழித்து வளர்ந்திருக்கும் பசுந்தளிர்களும், மலைமுகடுகளிலிருந்து பாய்ந்துவரும் அழகிய நீரோடைகளும், முகில்களால் அரவணைக்கப்பட்ட மலைச்சிகரங்களும் பார்ப்போருக்குப் பரவசமூட்டும் காட்சிகளாகும், இயற்கையின் இந்த எழில்கொஞ்சும் காட்சிகளிலிருந்து எமது பார்வையைச் சற்றுத்திருப்பி அங்கு தேயிலைச் செடிகளுக்கிடையே மழை, வெயில், பனி, காற்று […]

மேலும் பார்க்க

பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இந்திய சமூகங்களும் ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம் – பகுதி 2

20 நிமிட வாசிப்பு | 9035 பார்வைகள்

புலம்பெயர்ந்த இந்தியர்களின் இன்றைய நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியரின் வழித்தோன்றல்களே இன்று உலகில் பல நாடுகளிலும் காணப்படும் இந்தியச் சமூகங்களாகும். மொறிசியஸ், கயானா, பிஜி ஆகிய நாடுகளில் பெரும்பான்மையினராகவும், வேறு சில நாடுகளில் பிரதான சிறுபான்மை இனமாகவும், இன்னும் சில நாடுகளில் மிகச்சிறிய சிறுபான்மைக் குழுக்களாகவும் அவர்கள் உள்ளனர். இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் சுமார் 7 வீதமாகவும், மலேசியாவில் 11 வீதமாகவும், சிங்கப்பூரில் 5.6 வீதமாகவும், கயானாவில் 50 […]

மேலும் பார்க்க

பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இந்திய சமூகங்களும் ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம் – பகுதி 1

10 நிமிட வாசிப்பு | 8736 பார்வைகள்

இந்தியர்கள் புலம்பெயர்ந்து சென்று வெளிநாடுகளில் குடியேறியமைக்கு நீண்டதொரு வரலாறு உண்டு. தென் கிழக்காசிய நாடுகளுடனும் கிழக்காபிரிக்க கரையோரப் பிரதேசங்களுடனுமான இந்திய கலாசார, வர்த்தக உறவுகள் கிறிஸ்து சகாப்தத்திற்கு முந்திய காலத்திலிருந்தே இடம்பெற்று வந்துள்ளதாகத் தெரிகின்றது. இந்தியாவிற்குள்ளேயே ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களினால் இவ்வித குடிப்பெயர்வுகள் காலப்போக்கில் அருகி வந்தன. எனினும், அளவிலும் பண்பிலும் வேறுப்பட்ட புதியதொரு குடிப்பெயர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இடம்பெற்றது. வரலாற்றின் முந்திய காலங்களில் குடிப்பெயர்ந்தோர் ஒரு மாபெரும் நாகரிகத்தினதும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்