இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன், Author at Ezhuna | எழுநா - Page 3 of 5

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

போர்த்துக்கேயர்கால நிலப்படங்கள்

12 நிமிட வாசிப்பு | 16757 பார்வைகள்

முன்னர் விளக்கப்பட்ட சான்செசின் இலங்கைப் படம், யாழ்ப்பாண இராச்சியம்  போர்த்துக்கேயரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன் வரையப்பட்டது. யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சிக்குள் வந்த பின்னரும் இலங்கைப் படங்களும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளைத் தனியாகக் காட்டும் நிலப்படங்களும் வரையப்பட்டன. அவற்றுட் சிலவற்றைப் பற்றிக் கீழே பார்க்கலாம். கொன்ஸ்டன்டைன் டி சாவின் நிலப்படத் தொகுப்பிலுள்ள இலங்கைப் படம் போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையின் ஆளுநராகப் பதவி வகித்த கொன்ஸ்டன்டைன் டி சா, 1628 […]

மேலும் பார்க்க

சிப்பிரியானோ சான்செசின் இலங்கை நிலப்படம்

13 நிமிட வாசிப்பு | 11843 பார்வைகள்

இத்தொடரின் முந்திய பகுதியில்  இலங்கையைக் காட்டும் மிகப் பழைய நிலப்படத்தில் இலங்கையின் வட பகுதி தொடர்பாகக் காணப்படும் தகவல்களைக் குறித்துப் பார்த்தோம். இந்தப் பகுதியிலே சில குடியேற்றவாதக்கால இலங்கைப் படங்களில் பொதுவாக இலங்கையின் வடபகுதி பற்றியும் குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசம் தொடர்பாகவும் காணப்படும் தகவல்களைப் பற்றிப் பார்க்கலாம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால இலங்கை நிலப்படங்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொலமி திரட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட இலங்கையின் நிலப்படத்துக்குப் […]

மேலும் பார்க்க

தொலமியின் “தப்ரபானா” நிலப்படம்

10 நிமிட வாசிப்பு | 22763 பார்வைகள்

யாழ்ப்பாணப் பிரதேசத்தின் விவரங்களைக் காட்டுவதற்கெனச் சிறப்பாக வரைந்த நிலப்படங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், இலங்கையைக் காட்டும் சில பழைய நிலப்படங்களில், பொதுவாக வடபகுதியைக் குறித்தும், சிறப்பாக யாழ்ப்பாணப் பகுதியைக் குறித்தும் எவ்வாறான தகவல்கள் உள்ளன எனப் பார்க்கலாம். இலங்கைத் தீவைக் காட்டும் நிலப்படங்களில் காலத்தால் முந்தியது, குளோடியஸ் தொலமியின் நிலப்படமாகும். இந்தக் கட்டுரைத் தொடர் குடியேற்றவாதக் காலத்துக்குரிய நிலப்படங்களையே குறிப்பாகக் கையாளுகின்றது. எனினும், குடியேற்றவாதக் காலத்துக்கு முந்திய இலங்கையைக் காட்டும் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள்

10 நிமிட வாசிப்பு | 18746 பார்வைகள்

இடமொன்றின் தெரிந்தெடுக்கப்பட்ட இயல்புகளைக் குறியீட்டு அடிப்படையில் காட்டுவதே நிலப்படம் ஆகும். இது பெரும்பாலும் மட்டமான தளத்தில் வரையப்படுகின்றது.1 நிலப்படங்கள், அவை வரையப்பட்ட காலத்தின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவனவாக உள்ளன. நிலப்படங்கள் முதன்மையாக, முழு உலகினதோ அதன் பகுதிகளினதோ புவியியலை விளக்குவனவாக இருந்தபோதும், அவை அப்பகுதிகளின் வரலாறுகளைப் புரிந்துகொள்வதற்கும் உதவுகின்றன. “நிலப்படங்கள் சிறப்பான வரலாற்று மூலங்கள். பழைய நிலப்படம் ஒன்று, அதன் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு கதையை உள்ளடக்கியிருக்கலாம். வரலாற்று நிலப்படங்களின் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணமும் முஸ்லிம்களும் – பிரித்தானியருக்கு முற்பட்ட காலம்

5 நிமிட வாசிப்பு | 16042 பார்வைகள்

கி.பி. 8 ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதியில் இந்துப் பெருங்கடற் பகுதியில் முஸ்லிம்களான அராபிய வணிகர்களின் செல்வாக்கு இருந்துள்ளது. இக்காலப் பகுதியில் தென்னிந்தியக் கரையோரங்களை அண்டி இவ்வணிகர்களின் குடியிருப்புக்களும், வணிக நிலைகளும் உருவாகின. அக்காலத்தில் யாழ்ப்பாணத்துத் துறைமுகங்களுடனும் அவர்களுக்கு வணிகத் தொடர்புகள் இருந்திருக்கும் என ஊகிக்கலாம். காலப்போக்கில் யாழ்ப்பாணத்திலும் துறைமுகங்களை அண்டி அவர்களுடைய குடியிருப்புக்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். எனினும், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் இருப்புக் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் […]

மேலும் பார்க்க

ஒல்லாந்தர் காலமும் கத்தோலிக்கத் தேவாலயங்களும்

10 நிமிட வாசிப்பு | 26390 பார்வைகள்

1619 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயர் ஆண்ட 39 ஆண்டுகாலம், முன்னர் வழக்கிலிருந்த பிற மதங்களை ஒடுக்கிக் கத்தோலிக்க மதத்துக்குத் தனியுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் வசமானதும் இந்த நிலை முற்றாக மாறியது. கத்தோலிக்க மதம் தடைசெய்யப்பட்டது, கத்தோலிக்கக் குருமார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இராச்சியத்திலிருந்த எல்லாக் கத்தோலிக்கத் தேவாலயங்களையும் தமதாக்கிய ஒல்லாந்தர் அவற்றைத் தமது சீர்திருத்தக் கிறித்தவ மதத் தேவாலயங்களாக மாற்றினர். 138 ஆண்டுகால […]

மேலும் பார்க்க

ஒல்லாந்தர் காலமும் இந்துக் கோயில்களும்

10 நிமிட வாசிப்பு | 29302 பார்வைகள்

போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களும் அழிக்கப்பட்டன. தமது மதமான கத்தோலிக்கம் தவிர்ந்த ஏனைய மதங்களைப் போர்த்துக்கேயர் ஒடுக்கினர். பல இடங்களில் இந்துக் கோயில்கள் இருந்த இடங்களில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் உருவாகின. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் கத்தோலிக்க மதத்தையும் தடை செய்து, தமது சீர்திருத்தக் கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்கு முயன்றனர். இலங்கையிலிருந்த ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி அரசாங்கம் சீர்திருத்தக் கிறித்த மதத்துக்கான தனியுரிமையைக் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் காலக் கல்வியும், பாடசாலைகளும்

10 நிமிட வாசிப்பு | 25948 பார்வைகள்

ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு கோயிற்பற்றுப் பிரிவுகளில் காணப்பட்ட கிறித்தவ தேவாலயங்களுடன் இணைந்ததாகப் பாடசாலைகள் இருந்தன. வலிகாமப் பிரிவில் தெல்லிப்பழை, மல்லாகம், மயிலிட்டி, அச்சுவேலி, உடுவில், வட்டுக்கோட்டை, நல்லூர், பண்டத்தரிப்பு, சங்கானை, மானிப்பாய், வண்ணார்பண்ணை, சுண்டிக்குழி, கோப்பாய், புத்தூர் ஆகிய 14 இடங்களிலும், தென்மராட்சியில் நாவற்குழி, சாவகச்சேரி, கைதடி, வரணி, எழுதுமட்டுவாள் ஆகிய 5 இடங்களிலும், வடமராட்சியில் பருத்தித்துறை, உடுப்பிட்டி, கட்டைவேலி ஆகிய 3 இடங்களிலும், பச்சிலைப்பள்ளிப் பிரிவில் […]

மேலும் பார்க்க

ஒல்லாந்தர் கால நல்லூர்-2

10 நிமிட வாசிப்பு | 9152 பார்வைகள்

இத்தொடரில் கடந்த கிழமை வெளியான கட்டுரையில் நல்லூரில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலம் தொடர்பான சில தகவல்களையும், அக்காலத்துக்குரிய சில கட்டிடங்களின் எச்சங்கள் பற்றிய விபரங்களையும் பார்த்தோம். இன்றைய கட்டுரை ஒல்லாந்தர் கால நல்லூர் குறித்த மேலும் சில விபரங்களைத் தருகின்றது. நல்லூரில் உள்ள மந்திரிமனை என அழைக்கப்படும் கட்டடம், தமிழரசர் காலத்து மந்திரி ஒருவரின் மாளிகையின் எச்சம் என்ற கருத்து ஒரு காலத்தில் நிலவியபோதும், இது ஒரு ஒல்லாந்தர் காலக் […]

மேலும் பார்க்க

ஒல்லாந்தர் கால நல்லூர்-1

10 நிமிட வாசிப்பு | 13429 பார்வைகள்

நல்லூர் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கிய காலத்தில், இன்று முத்திரைச் சந்தை என்று அழைக்கப்படும் இடத்தை அண்மித்த பகுதியிலேயே அரச குடும்பத்தினரின் மாளிகைகளும், அவை சார்ந்த பெருமளவு நிலங்களும் இருந்தன. அரச குடும்பத்தினருக்கு நெருக்கமான அதிகாரிகளின் வாழ்விடங்களும்கூட இப்பகுதியிலேயே இருந்தன. போர்த்துக்கேயர் நல்லூரைக் கைப்பற்றிய பின்னர், இந்நிலங்களில் பெரும்பாலானவை போர்த்துக்கேய அரசாங்கத்துக்குச் சொந்தமாகின. 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் ஒல்லாந்தர் வசமான பின்னர் மேற்படி நிலங்கள் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்