இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன், Author at Ezhuna | எழுநா - Page 5 of 5

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

போர்த்துக்கேயர் காலத் தேவாலயங்கள்

10 நிமிட வாசிப்பு | 26767 பார்வைகள்

யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆட்சி போர்த்துக்கேயரின் கையில் இருந்த 38 ஆண்டுகாலத்தில் கத்தோலிக்க மதத்துக்கு மட்டுமே அனுமதி இருந்தது. அதற்கு அரசாங்க ஆதரவும் இருந்தது.  அப்போதைய யாழ்ப்பாண நகரில் பல கத்தோலிக்கத் தேவாலயங்கள் இருந்தன. இவற்றுள் ஒன்றைத் தவிர ஏனையவை 1621 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவானவை. அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் மதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மூன்று கிறித்தவ சபைகளைச் சேர்ந்தோரும் நகரத்தில்  குரு மடங்களையும், தேவாலயங்களையும் நிறுவியிருந்தனர். இவர்களுள் யாழ்ப்பாணம் […]

மேலும் பார்க்க

பிலிப் டி ஒலிவேராவும் யாழ்ப்பாண நகரமும்

5 நிமிட வாசிப்பு | 7137 பார்வைகள்

1618 – 1622 காலப் பகுதியில் இலங்கையில் இருந்த போர்த்துக்கேயப் பகுதிகளுக்கான ஆளுனராகப் பதவி வகித்தவன் கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோஞ்ஞா (Constantino de Sá de Noronha) என்பவன். இலங்கையில் போர்த்துக்கேயரின் நலன்களை விரிவாக்குவதில் இவன் தீவிரமாக இருந்தான். இவனது திட்டங்களின் ஒரு பகுதியாக யாழ்ப்பாண இராச்சியத்துக்கு அனுப்பப்பட்டவனே பிலிப் டி ஒலிவேரா. யாழ்ப்பாண அரசனிடமிருந்து வரவேண்டியவற்றை அறவிடுவதற்காக என்ற போர்வையில் வந்தாலும், யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றுவதற்கும் […]

மேலும் பார்க்க

போர்த்துக்கேயரின் யாழ்ப்பாணப் படையெடுப்புக்கள்

5 நிமிட வாசிப்பு | 20644 பார்வைகள்

போர்த்துக்கேயர் 1619 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாண இராச்சியத்தைத் தமது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்றும், அதன் பின்னரே யாழ்ப்பாண நகரம் உருவானது என்றும் முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன். இன்றைய கட்டுரையில் காணும் விடயங்கள் யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றுக்குள் அடங்கவில்லை. எனினும், யாழ்ப்பாண நகரம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த  போர்த்துக்கேயச் செல்வாக்குப் படிப்படியாக அதிகரித்தது தொடர்பான விபரங்களை இது விளக்குகின்றது. போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முன்னர் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண நகருக்கு முந்திய தலைநகரங்கள்

10 நிமிட வாசிப்பு | 12870 பார்வைகள்

யாழ்ப்பாண இராச்சியத்தினதும், பிற்காலத்தில் இலங்கையின் வடபகுதியினதும் தலைநகரமாக யாழ்ப்பாண நகரத்தை இன்று குறிப்பிடும்போது, அதற்கு முன்னர் இப்பகுதியில் தலைமையிடமாக இருந்த நகரங்களைப் பற்றியும், யாழ்ப்பாண நகரம் தலைமையிடமாக ஆன வரன்முறை பற்றியும் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். கதிரமலை (கந்தரோடை) கி. மு 5 ஆம் நூற்றாண்டிலிருந்தே யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் குடியேற்றங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 1918 இலும் பின்னர் 1970 ஆம் ஆண்டிலும் கந்தரோடைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் […]

மேலும் பார்க்க

அழிந்துவரும் மரபுரிமைச் சின்னங்கள்

6 நிமிட வாசிப்பு | 24635 பார்வைகள்

நவீன யாழ்ப்பாண நகரம் 400 ஆண்டுகள் பழமையானது. ஆனால், இன்றைய யாழ்ப்பாண நகருக்குள் இருக்கக்கூடிய பல இடங்களில் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனித நடவடிக்கைகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. சில வரலாற்றாளர்களின் கருத்துப்படி நல்லூர் இற்றைக்கு ஏறத்தாழ 750 ஆண்டுகள் முன்பிருந்தே யாழ்ப்பாண இராச்சியத்தின் தலை நகரமாக விளங்கியுள்ளது. அண்மையில் கிடைத்த அகழ்வாய்வுச் சான்றுகளின் அடிப்படையில், இன்றைய யாழ் கோட்டைப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெளிநாட்டு வணிகத் […]

மேலும் பார்க்க

400 ஆவது ஆண்டு நிறைவு

5 நிமிட வாசிப்பு | 8372 பார்வைகள்

யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றுச் சுவடுகள் இலங்கைத் தமிழரின், குறிப்பாக வடபகுதித் தமிழரின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு நகரம் யாழ்ப்பாணம். 1619 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், 1621 ஆம் ஆண்டு, அப்போது இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைக் கைவிட்டு இன்று கோட்டை இருக்கும் பகுதிக்குத் தமது தலையிடத்தை மாற்றினர். இந்த நிகழ்வே வட இலங்கையின் முதன்மை நகரமாக யாழ்ப்பாணம் உருவானதன் தோற்றுவாய் ஆகும். இதைத் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்