இற்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது இடைக்கற்காலக் காலந்தொடக்கம் இலங்கையில் வேடர் சமூகம் வாழ்ந்து வருகின்றது என்பதனை, இலங்கை மானிடவியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் தமது வரையறைக்கு எட்டியவரை எடுத்துக்காட்டி நிற்கின்றன. இலங்கையில் கிழக்குப்பக்கமாக திருகோணமலை தொடங்கி மட்டக்களப்பு, அம்பாறை என மிக நீண்டதான கரையோரத்துடன் அண்டியதாகக் கடலோர வேடர் குடிப்பரம்பலை இன்றும் வாழும் சாட்சிகளாகக் காணமுடிகின்றது. கிழக்கிலங்கையின் இனக்கலப்பில் இன்றும் வேடப்பூர்வகுடிகளின் அடையாளங்கள் சடங்கார்ந்த நடவடிக்கைகள் ஊடாக வெளிக்கிளம்பியபடியே […]
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தே, குழுக்களாக மனிதர்கள் கூடி வாழத் தொடங்கிய காலத்தில் இருந்தே, மனித இனக்குழு ஒன்றின் சகல முன்னெடுப்புக்களிலும் பெண்களின் பங்களிப்பே முக்கியமானதாக இருந்திருக்கிறது. தத்தமது கூட்டத்தை வழிநடத்துபவளாக பெண்ணே இருந்திருக்கிறாள். உடல் வலுவிலும், உணவுத்தேடலுக்கான உழைப்பிலும், ஆணுக்குச் சமமாகவும் சில தருணங்களில் ஆணை விஞ்சியே பெண்ணின் செயற்பாடுகள் இருந்துள்ளன. “வருவிருந்து அயரும் விருப்பினள்” (புறம்.326:12) எனும் புறநானூற்றுப் பாடல் வேட்டைச் சமூகத்தில் உணவுப்பங்கீடு செய்வதில் அவளுக்கிருந்த நிர்வாகத்திறனின் தொடர்ச்சியைப் புலப்படுத்துவதாகக் காணப்படுகிறது. […]
மனித இனத்தின் தோற்றத்தில் இருந்தே மொழியின் தோற்றத்தினையும் கருத்திற்கொள்ள முடியும். மனிதத் திரள்களின் தொடர்பாடல் ஊடகமாக மொழியானது ஆரம்பத்தில் இருந்து பயன்பட்டு வருகிறது. இது தொடக்கத்தில் சைகை, ஊமத்தில் இருந்து பின்னர் ஒலிவடிவம், எழுத்து வடிவம், பேச்சு வழக்கு, இலக்கண வழக்கு என்னும் படி நிலைகளை மனித வரலாற்றுப் போக்கின் அடிப்படையில் கண்டு கொண்டது. இவ்வாறான மொழியினை “ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துதற்கு ஒரு […]
இற்றைக்கு 28000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது இடைக்கற்கால காலத்தில் இருந்தே இலங்கையில் வேடர் சமூகம் வாழ்ந்து வருகின்றது என்பதனை, இலங்கை மானிடவியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் தமது வரையறைக்கு எட்டியவரை எடுத்துக்காட்டி நிற்கின்றன. இயக்கர், நாகர் என்னும் வரலாற்றுக்கு முந்தைய குடிகளை தமது மூதாதையர்களாக சிங்கள மற்றும் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தும் முயற்சியில் இருக்கும் சூழ்நிலையில் அந்த குடிகளின் காலத்துக்கு எத்தனையோ ஆயிரமாண்டு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த குடிகளாகவும் […]
இன்றைய நவீன காலனித்துவ உலகம் மனிதனை இயற்கையிலிருந்து பிரித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மனித குலத்தின் பாரம்பரியங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசார நடவடிக்கைகள் அனைத்தும் சீர்குலைந்துள்ளன. இதைத் தாமதமாகவேனும் உணர்ந்துகொண்டே மனிதச் சிந்தனையானது தன் இயல்பான வாழ்க்கை முறையை நோக்கி நகர முற்பட்டுள்ளது. பல இடங்களில் வியாபாரமாகவும், சில இடங்களில் திறமான கருத்தாடலாகவும் இது காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தான் நவீன உலகில் மானுடவியல் ஆய்வுகளும் ஆய்வாளர்களும் […]
இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நாட்டின் பூர்வீகக் குடிகளுக்கும் அவரவர்களுக்கான பல சிறப்புரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா ஏன் நமது அண்மைய நாடான இந்தியாவிலும் கூட மிகத்தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் எமது நாடான இலங்கையில் பூர்வகுடிகளான வேடர் என்போர் அரும்பொருட்காட்சியகத்தில் இருக்கும் காட்சிப்பொருட்களாகவும், அழிந்து வரும் உயிரினம் ஒன்றை பாதுகாக்க வேண்டிய பச்சாதாபச் சிந்தனையுடனும் தான் பார்க்கப்படுகின்றனர். இன்னமும் வேடுவர் என்பவர்களுக்கான அடையாளமானது இலையும் குழையும், அம்பு […]
ஒவ்வொரு சமூகக்குழுக்களும் தமக்கு வாலாயமான பண்பாட்டு நகர்வுகளுள் பல முன்னெடுப்புக்களை, கால வர்த்தமானங்களுக்கு அமைவாக ஈடேற்றிக் கொண்டுள்ளமையே வரலாறாகின்றது. அவ்வாறான நிலைப்பாடானது இயல்பான முறையிலும், வலிந்து புகுத்தப்பட்ட வடிவிலும் குறித்தவொரு சமூகத்தில் தாக்கம் செலுத்தியே வந்துள்ளது. இதற்கு தீவின் ஆதிப்பிரஜைகளான வேடரும் விதிவிலக்கல்லர். இலங்கை வரலாறானது காலத்துக்குக் காலம் இடம் பெற்ற, வரத்து இனங்களின் குடியேற்றத்துடனேயே பார்க்கப்படுகின்றமையை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டிய பாரிய தேவையுண்டு. உதாரணமாக இலங்கையின் முதல் மன்னனாக […]
“நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணக்கொடுத்தானே பூர்வக்குடி” இந்த பாடல் வரிகள் இன்றும் உலகெங்கும் ஓயாமல் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்களின் வாழ்வில் ஒளியிழந்து பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டமை எத்துணை பேருக்குத் தெரியும். உலகரங்கிலும் நிலமையிதே. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இயற்கையுடன் இணைந்து அதை தன்வயப்படுத்தி வாழ்ந்து வந்த எம்மை, மனித முன்னேறுகைகளின் படிப்படியான ஈடேற்றங்கள் அனைத்தும் கால வர்த்தமானங்களுக்கு அமைய ஓர் கை பார்த்துக் கொண்டே வந்துள்ளமைதான் […]
காரை இலை – (தாவரவகைப்பாடு: Canthium parviflorum) பொதுத்தன்மை காரை இலை என்பது, பூர்வகுடிகளின் உணவுத்தாவரங்களின் பழந்தாவரங்களில் ஒன்றாகும். இது காரைச்செடி என்றும் அழைக்கப்படும் இதன் காய்கள் காரைக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு முட்செடியாகும். இதில் சாதாரண காரை, சோத்துக்காரை (சோற்றுக்காரை) எனும் வகைகள் உண்டு. இது ஒரு பூக்கும் தாவர இனமாகும். இதன் காய்கள் பிஞ்சுப் பருவத்தில் பச்சை நிறத்தில் காணப்படும். பிறகு முதிர்ந்து மஞ்சள் நிறமாகி […]
இயற்கையுடன் இணைந்து அன்றும், இன்றும், என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற பழங்குடிகளின் பண்பாட்டு அசைவுகளில் உணவுமுறைகள் பிரதான இடத்தினை வகிக்கின்றன. அவ்வகையில் இன்றும் இலங்கைத் தீவின் கிழக்குக்கரையில் வசிக்கின்ற பூர்வகுடிகளிடம் காணப்படுகின்ற உணவுமுறைகள், அவற்றில் காணப்படுகின்ற மருத்துவக் குணங்கள், வழிபாட்டுப் பயன்பாடுகள் போன்ற நடைமுறை விளக்கி விபரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யாவரும் இயற்கையின் பிரதி பலன்களினை ஏதோ ஒரு வகையில் அனுபவித்துக் கொண்டு வருகின்றமை அறிந்த விடயம். ஆனால் பூர்வகுடிகளோ […]