அறிமுகம் உலகின் 70% இயற்கைப் பேரழிவுகள் அரசியல், பொருளாதார, சமூக காரணிகளுடன் வானிலை மற்றும் காலநிலையுடனும் ஓரளவு அல்லது முற்றிலும் தொடர்புடையவை என்று உலக வானிலை அமைப்பு குறிப்பிடுகின்றது. இலங்கையின் பொருளாதாரம் இயற்கை அனர்த்தங்கள், குறிப்பாக காலநிலை மாற்றம் காரணமாக பல சவால்களை எதிர்கொள்கிறது. இலங்கையின் விவசாயம் வெப்பநிலை, மழைவீழ்ச்சி, மண்ணின் ஈரப்பதன் வேறுபாடுகள், வானிலை நிகழ்வுகளின் தீவிரம் மற்றும் அதிர்வெண் அதிகரிப்பு ஆகியவற்றின் மாறுபாடுகளால் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. […]
அறிமுகம் அனர்த்தம் என்பது இயற்கை மற்றும் மானிடவியற் காரணிகளினால் தூண்டப்படுகின்றது. அது உலகின் ஒட்டுமொத்த உயிர்ச்சூழலுக்கும், குறிப்பாக மனித சமூகத்திற்கு உடல், உள, சொத்துகள் மற்றும் சுற்றுச் சூழலியல் ரீதியாக இடர்பாடுகளினை ஏற்படுத்துகின்ற அனைத்து நிகழ்வுகளினையும் குறித்து நிற்கின்றது (Amri et al., 2023). மேற்குறிப்பிட்ட இயற்கை அனர்த்தங்களில் இடி – மின்னலும் ஒன்றாகும். அதாவது இயற்கை மற்றும் மானிடக் காரணிகளினால் தூண்டப்படுகின்ற காலநிலை மற்றும் நீர் சார்ந்த அனர்த்தங்களில் […]
அறிமுகம் இன்றைய மனித சமூகம் எதிர்கொள்ளுகின்ற மிக முக்கியமான இயற்கை அனர்த்தங்களுள் வறட்சியும் ஒன்றாகும். பூகோள ரீதியிலான காலநிலை மாற்றம் உலகளாவிய ரீதியில் வறட்சி அனர்த்தங்களின் நிகழ்வு எண்ணிக்கையையும் பாதிக்கும் தன்மையையும் அதிகரித்து வருகின்றது (Dananjaya et al., 2022). 2019 ஆம் ஆண்டின் ஐ.பி.சி.சி. யின் அறிக்கை, உலகளாவிய ரீதியில் ஆண்டுக்கு சராசரியாக 42 நாடுகள் வறட்சியினால் பாதிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றது (Abeysinghe & Rajapaksha, 2020). அத்தோடு எல் […]
அபிவிருத்திக் காரணங்கள் வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் குறிப்பாக 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பூரணப்படுத்தப்பட்ட பல்வேறு வகையிலான வீதி சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களான ‘கார்பெட்’ தெருக்களின் நிர்மாணம், உள்ளூர் வீதி அமைப்புகள், புகையிரத வீதி நிர்மாணம் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக வடிகால் பாங்குகள் குழப்பமடைந்து பல பிரதேசங்களில் வெள்ள அனர்த்த நிலைமைகள் உருவாக்கப்பட்டு இருப்பதைக் காண முடிகின்றது. யாழ்ப்பாணக் குடா நாட்டினுடைய புகையிரதப் பாதைகள் மழைநீரைக் கடத்தும் அல்லது […]
அறிமுகம் இயற்கை அனர்த்தப் பாதிப்புகளுக்கு இடம், காலம் என்பன ஒரு போதும் தடையாக இருப்பதில்லை. இவை எங்கும் எப்போதும் தோன்றலாம். அனர்த்த வாய்ப்புகள் குறைவானதென கருதப்பட்ட பல பகுதிகளில் அண்மைக் காலங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டிருப்பதாக அறிகிறோம் (Wen et al., 2021). இவ் இயற்கை அனர்த்தங்களில் காலநிலை அனர்த்தங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றவையாக மாறியுள்ளன. உலகளாவிய ரீதியில் உள்ள காலநிலை மாற்றத்தின் விளைவாக காலநிலை அனர்த்தங்கள் அடிக்கடி தோன்றுகின்ற […]
அறிமுகம் ஒரு பிரதேசத்தின் எதிர்கால காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகள் இன்று உலகளாவிய ரீதியில் முதன்மை பெற்ற விடயங்களாக மாறி வருகின்றன. எதிர்கால காலநிலை மாற்றம் பற்றிய விடயங்களை அறிந்து கொள்வதன் ஊடாக காலநிலை மாற்றத்தை குறைப்பதற்கான அல்லது இயைபாக்குவதற்கான செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்க முடியும் என்ற அடிப்படையில், எதிர்காலக் காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகளை பல்வேறு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன (Hamadamin & Khwarahm, 2023). காலநிலை மாற்றத்திற்கு […]
நீரை வளிமண்டல நீர், சமுத்திர நீர், தரை மேற்பரப்பு நீர் மற்றும் தரைக்கீழ் நீர் என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். நன்னீரில் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் என்று மேலும் சில வகைப்பாடுகள் உள்ளன (Praveen et al., 2020). மேற்பரப்பு நீரானது மேற்பரப்பில் உள்ள அனைத்து வகையான நீரையும் குறிக்கின்றது. பனி மற்றும் பனிப்பாறைகள் போன்ற திடமான நீராதாரங்கள், சதுப்பு நிலங்கள், நீர்த்தேக்கங்கள், ஆறுகள், நீரோடைகள், ஏரிகள், […]
அறிமுகம் வட பிராந்தியத்தின் வருடாந்த மழைவீழ்ச்சி 1230 மி.மீ. ஆயினும்கூட, ஆண்டுக்கு ஆண்டு, இடத்திற்கு இடம் மற்றும் பருவத்திற்குப் பருவம் இது வேறுபடும் (படம் 7.1). இருப்பினும், வடகிழக்கு பருவக்காற்றின் தாக்கம் மற்றும் வங்காள விரிகுடாவில் பல்வேறு காற்றழுத்த தாழ்வுகள் உருவாகி வருவதால், மொத்த மழையில் 75 சதவீதம் (700மி.மீ.) வடகீழ் பருவக்காற்றின் போது பெறப்படுகிறது (Alahacoon & Edirisinghe, 2021b). மேலும், வடக்கு பிராந்தியத்தில் 60% மழை (550 […]
அறிமுகம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்ற, வளிமண்டல வெப்பநிலை அளவீடு செய்கின்ற உலக வளிமண்டல திணைக்களத்தின் தர நிர்ணயத்திற்கு உட்படுத்தப்பட்ட வகையிலான வெப்பமானிகள் மூலமே இலங்கையிலும் வெப்பநிலை அளவீடு செய்வதற்கான வெப்பமானிகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் ஈர மற்றும் உலர் வெப்பமானிகள், மண் வெப்பமானிகள், உயர்வு மற்றும் இழிவு வெப்பமானிகள் மற்றும் தன்னியக்க வெப்பநிலை பதிவுக் கருவி போன்றவற்றை பயன்படுத்தி வெப்பநிலை பற்றிய அளவீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த அடிப்படையில் […]
வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய முறையிலான மழை வீழ்ச்சி அவதானிப்பு முறைகள் வடக்கு மாகாண மக்கள் மிக நீண்ட காலமாக மழை வீழ்ச்சி அவதானிப்பிற்கு என்று பல்வேறு வகைப்பட்ட உத்திகளை பயன்படுத்தி வந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் வடக்கு மாகாண மக்கள் பல்வேறு வகையிலான கருவிகளைப் பயன்படுத்தி அவதானிப்புகளை மேற்கொண்டு இருப்பதை அறிய முடிகின்றது. அவர்கள் பின்வரும் கருவிகளைப் பயன்படுத்தி மழை வீழ்ச்சி அவதானிப்புகளை மேற்கொண்டு உள்ளார்கள். மரக்கால் மரக்கால் என்பது மிக […]