“அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல்”– திருக்குறள் (461) மு.வரததாசனார் விளக்கம்: (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். உலகில் மிகப்பிரபலமான மைக்ரோசொஃப்ட் (Microsoft) நிறுவனத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பர். அதன் நிறுவுநர் பில் கேட்ஸ் (Bill Gates). உலகின் விரல்விட்டு எண்ணக்கூடிய முதன்மைப் பணக்காரர்களில் பில்கேட்ஸும் ஒருவர். பில்கேட்ஸ் உருவாக்கிய மென்பொருட்களைப் பயன்படுத்தாத எவருமே […]
“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு” – திருக்குறள் (424) சாலமன் பாப்பையா விளக்கம்: அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படிஎளியனவாகவும், அவர்மனங் கொள்ளும்படியும் சொல்லும்;பிறர் சொல்லும் கருத்து நுண்ணியதுஎன்றாலும் அதைஎளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு. இன்றைய கால வாழ்க்கையில் எம்மை மேலே உயர்த்தவும் நாட்டை அபிவிருத்தி செய்யவும், அத்தோடு உலகளாவிய வகையில் இணைந்து வாழ்வதற்கும் புதுத்தொழில் முறை (Startup companies) மிக்க உதவியாக இருக்கிறது. இந்த புதுத்தொழில் […]
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு”. — திருக்குறள் (467) மு.கருணாநிதி விளக்கம்: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்;இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. புதிய தொழில் முயற்சிகளை தொடங்குவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. அந்த வல்லமை எல்லோருக்கும் வாய்த்தும் விடாது. புதிய தொழில் என்பது தனியே வர்த்தகம் என்பதாக அர்த்தப்படாது. அது அறிவியல் பாதி, செய்கலை பாதி கலந்து செய்த நுட்பத்தினூடாகவே புதிய சிந்தனைகளும், அதன் […]
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற” — திருக்குறள் (661) மு.வரததாசனார் விளக்கம்: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை. திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே […]