கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா

கந்தையா சண்முகலிங்கம்

சிவில் சமூகமும் சிவில் சமூக அமைப்புகளும்

12 நிமிட வாசிப்பு | 3068 பார்வைகள்

ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட சிவில் சமூகம் (Civil Society) என்னும் அரசியல் விஞ்ஞானக் கலைச்சொல் இன்று சாதாரண மக்கள் மத்தியிலும் அறிமுகமாகியுள்ள சொல்லாக உள்ளது. ஆனால் இச்சொல் பற்றிய கோட்பாட்டு விளக்கங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் தமிழில் போதியளவு இல்லை. ‘சிவில் சமூகம்’, ‘சிவில் சமூக அமைப்புகள்’, ‘ஜனநாயக சமூகத்தில் சிவில் சமூக அமைப்புகளின் வகிபாகம்’ என்பனவற்றை விளக்கும் முறையில் ‘சிவில் சமூகம்’ (Civil Society) என்னும் தலைப்பில் […]

மேலும் பார்க்க

இலங்கையில் 1970களுக்குப் பின்பாகத் தோற்றம்பெற்ற புதிய வர்க்கம் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு | 3536 பார்வைகள்

ஆங்கில மூலம்: நவரட்ண பண்டார மூன்றாவது தலைமுறை மூன்றாவது தலைமுறை அரசியல் வர்க்கம் 1977இல் ஜே.ஆர். ஜயவர்த்தன நிறைவேற்று ஜனாதிபதியாக ஆட்சியில் அமர்ந்த காலத்தில் இருந்து உருவானது. இந்த வர்க்கம் உருவான காலத்தில் புதியதொரு தேர்தல்முறை (New Electoral System) நடைமுறைக்கு வந்தது. அத்தோடு அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றம் உருவானது. நீதித்துறையும் பலவீனமுடையதாக ஆக்கப்பட்டது. ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கையும் (A New Economic Policy) […]

மேலும் பார்க்க

இலங்கையில் ஜனாதிபதிமுறையை ஆதரித்து முன்வைக்கப்படும் போலியானதும், நகைப்புக்கிடமானதுமான வாதங்கள் – பகுதி 1

15 நிமிட வாசிப்பு | 3211 பார்வைகள்

ஆங்கில மூலம்: அசங்க வெலிக்கல கோத்தபாயராஜபக்ச 2019இல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் ஜனாதிபதிமுறையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தில் 20ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி இலங்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதான நகர்வாக அமைந்தது. இத்திருத்தம் கொண்டுவரப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை ஜனாதிபதி முறைக்கு (Presidentialism) ஆதரவாக முன்வைக்கப்பட்ட வாதங்களை மறுத்து பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டன. அசங்க வெலிக்கல (Asanga Welikala) என்னும் […]

மேலும் பார்க்க

இலங்கையில் 1970களுக்குப் பின்பாகத் தோற்றம் பெற்ற புதியவர்க்கம் – பகுதி 1

14 நிமிட வாசிப்பு | 4082 பார்வைகள்

ஆங்கில மூலம்: நவரட்ண பண்டார அரசியல் பேராசிரியர் நவரட்ண பண்டார 2014ஆம் ஆண்டில் The New Class in Sri Lanka (இலங்கையில் ஒரு புதிய வர்க்கம்) என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “அரசியல்வாதிகள் இன்று ஒரு புதிய வர்க்கமாக எழுச்சி பெற்றுள்ளார்கள். இந்தப் புதிய வர்க்கம் நான்கு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலமாக பலமான ஒரு சமூக வர்க்கமாக உருவாக்கம் பெற்று இலங்கைச் […]

மேலும் பார்க்க

அதிகாரப் பகிர்வும் தன்னாட்சியும்: சர்வதேச உதாரணங்கள் சில

13 நிமிட வாசிப்பு | 3640 பார்வைகள்

ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண உலகின் பெரும்பாலான நாடுகள் பன்மைப் பண்பாடுகளை உடைய சமூகங்களாக (Multi-cultural Societies) விளங்குகின்றன. ஒரு தேசிய இனம், ஒரு மொழி, ஒற்றைப் பண்பாடு என அழைக்கக் கூடிய நாடுகள் உலகில் வெகு அரிதாகவே காணப்படுகின்றன. பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட சமூகங்களில் பெரும்பான்மையானவை ஆழமான பிளவுகளையுடைய சமூகங்கள் (Deeply Divided Societies) என அரசியல் விஞ்ஞானிகள் சிலர் குறிப்பிடுவர். ஆழமான பிளவுகளையுடைய சமூகங்களின் சிறுபான்மைத் தேசிய […]

மேலும் பார்க்க

இலங்கையில் பாராளுமன்றத்தின் தோற்றமும் அதன் சுருக்கமான வரலாறும் – பகுதி 2

20 நிமிட வாசிப்பு | 5863 பார்வைகள்

ஆங்கில மூலம் : பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல 1978 ஆம் ஆண்டு யாப்பு இலங்கையில் பாதி – ஜனாதிபதிமுறையை ஏற்படுத்தியது. பாதி ஜனாதிபதி முறையென்பதை ஆங்கிலத்தில் ‘Semi – Presidential System’ என அழைப்பர். இப்பாதி ஜனாதிபதிமுறை இரு உப பிரிவுகளைக் கொண்டது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுவர். அவையாவன: முதலாவது உப வகையான ஜனாதிபதி – பாராளுமன்றமுறையில் பிரதமரும் மந்திரிசபையும் கூட்டாக ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்திற்கும் பொறுப்புக்கூற […]

மேலும் பார்க்க

இலங்கையில் பாராளுமன்றத்தின் தோற்றமும் அதன் சுருக்கமான வரலாறும் – பகுதி 1

18 நிமிட வாசிப்பு | 5616 பார்வைகள்

ஆங்கில மூலம் : பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல ‘Parliament: Law, History and Practice’ என்னும் பெயரிலான நூல் ஒன்றை மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனம் (CPA) 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. இலங்கையின் சட்ட ஆக்கத்துறையான (Legislature) பாராளுமன்றத்தின் தோற்றத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் கூறுவதாக மேற்படி நூலின் இரண்டாவது அத்தியாயம் அமைந்துள்ளது. ‘Parliament in its Historical and Constitutional Context’ என்னும் தலைப்புடைய […]

மேலும் பார்க்க

ஜனநாயக ஆளுகையும் இலங்கையின் உயர் நீதிமன்றமும் – பகுதி 3

16 நிமிட வாசிப்பு | 4602 பார்வைகள்

ஆங்கில மூலம் : கலன சேனரத்தின 2015 ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகவும் பதவி வகித்த காலம் அப்போது ஆரம்பித்தது. ஜனாதிபதித் தேர்தலை அடுத்து இம்மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. 2015 இன் பிற்பகுதியிலேயே பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நடைபெறவிருந்தது. இதனால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால […]

மேலும் பார்க்க

அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் : பகுதி 3

10 நிமிட வாசிப்பு | 4667 பார்வைகள்

ஆங்கில மூலம் : லக்ஸ்மன் மாறசிங்க ஒற்றையாட்சி முறைக்குள் அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகளை உருவாக்குதல் பற்றி இலங்கையின் 1978 அரசியல் யாப்பு, தென்னாபிரிக்காவின் அரசியல் யாப்பு என்னும் இரு உதாரணங்கள் குறித்து லக்ஸ்மன் மாறசிங்க அவர்களின் கருத்துகளை முன்னர் எடுத்துக்கூறி அறிமுகம் செய்தோம். அடுத்து இந்தியாவில் அதிகாரப் பகிர்வு (Devolution of Powers in India) என்னும் விடயம் பற்றி அவரது கருத்துகளை நோக்குவோம். இந்தியாவில் அதிகாரப் பகிர்வு […]

மேலும் பார்க்க

ஜனநாயக ஆளுகையும் இலங்கையின் உயர் நீதிமன்றமும் – பகுதி 2

12 நிமிட வாசிப்பு | 5408 பார்வைகள்

ஆங்கில மூலம் : கலன சேனரத்ன 1987 நவம்பர் 6 ஆம் திகதி இலங்கையின் உயர்நீதிமன்றின் 9 நீதிபதிகள் கொண்ட மன்று மாகாண சபைகளை உருவாக்குதல் தொடர்பான இரு மசோதாக்கள் பற்றி ஆராய்ந்து தீர்ப்பை வழங்கியது. நீதிமன்றின் முன்னர் வைக்கப்பட்ட மசோதாக்கள் பின்வருவன: 1978 அரசியல் யாப்பின் உறுப்புரை 120 இன்படி அரசாங்கத்தால் இயற்றப்படவிருக்கும் மசோதாக்கள் அரசியல் யாப்புச் சட்டத்திற்கு முரணுடையனவாக உள்ளனவா, அல்லது முரண்படாதனவாகவும் இசைவானவையாகவும் உள்ளனவா என்பதை […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்