(‘எழுநா’ பதிப்பகத்தின் பிரசுரமாக 2024 – நவம்பர் மாதம் வெளிவரவிருக்கும் கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் ‘யாழ்ப்பாணத்துச் சாதியம்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலின் அறிமுகமாக அமையும் கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது.) இந்நூலில் 9 ஆய்வுக் கட்டுரைகளின் தமிழாக்கம் இடம்பெறுகிறது. இக்கட்டுரைகள் யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பினையும் சமூக உறவுகளையும் பன்முக நோக்கில் ஆராய்வனவாக உள்ளன. இவை யாவும் போருக்கு முந்திய கால யாழ்ப்பாணத்தின் சமூகம், பண்பாடு, பொருளாதாரம் அரசியல் என்பன பற்றிய நுண்ணாய்வுகளாக […]
ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின ஒற்றையாட்சி அரசு (Unitary State), ‘நேஷன் ஸ்டேட்’ (Nation State) என்பன நவீன அரசியல் கோட்பாடுகள் சார்ந்த அரசறிவியல்துறை எண்ணக்கருக்கள் (Concepts) என்பதையும், நவீனத்துக்கு முந்தியகால அரசுகளை ஒற்றையாட்சி முறையில் அமைந்த நேஷன் ஸ்டேட்ஸ் (Nation State) என விளக்கம் கூறுவது வரலாற்றுத் திரிபு என்பதையும் பேராசிரியர் செனிவிரத்தின விளக்கிக் கூறியிருப்பதை இக்கட்டுரையின் முதலாம் பகுதியில் எடுத்துக் கூறினோம். 2500 ஆண்டுகளுக்கு மேலாக […]
ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம் (ICES) கொழும்பு, 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இனத்துவக் கற்கைகள் (Ethnic Studies) என்ற ஆய்வுத்துறை உலக அளவில் பிரபலம் பெற்று வந்த காலத்தில் இலங்கையில் நிறுவப்பட்ட இந்த ஆய்வு நிறுவனம், தனது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக 2002 ஆம் ஆண்டு இனத்துவமும், இனத்துவ அடையாளமும் முரண்பாடுகளும் (Ethnicity, Identity and Conflict) என்ற விடயப் […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் வெலிவிற்ற கிராமத்தில் சமூக நிலைமாற்றம் (Social Transformation) நிகழ்ந்தது. அந்நிலை மாற்றம் கண்டிப் பிராந்தியம் முழுமைக்கும் பொதுவானதாக இருந்தது என ரியுடர் சில்வா அவர்கள் குறிப்பிடுகிறார். இச்சமூக நிலைமாற்றம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, கருத்தியல் என அனைத்துக் கூறுகளையும் தழுவியதாக இருந்ததெனவும் அவர் கூறுகின்றார். வெலிவிற்றவின் பொருளாதார நிலைமாற்றத்தை எடுத்துக் கொண்டால் அது: அ) வெலிவிற்றவின் […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா ஜோரஜ்.ஈ.டி. சில்வாவின் எழுச்சி கண்டிப் பிராந்தியத்தின் அரசியலில் ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவின் பிரவேசம் பற்றிக் குறிப்பிட்டோம். இப்பகுதியில் அவரின் எழுச்சியைப் பற்றி பேராசிரியர் ரியுடர் சில்வா அவர்கள் கூறியிருப்பனவற்றைத் தழுவி விளக்கிக் கூறுவோம். ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா (1879-1951) 1879 ஆம் ஆண்டு பிறந்தவர். 1951 ஆம் ஆண்டில் அவர் காலமானார். 1931-1947 காலத்தில் டொனமூர் அரசியல் யாப்பின் படி அமைக்கப்பட்ட சட்ட […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா ஆய்வு வினாவும் ஆய்வுப் புதிரும் “கண்டியின் சிங்களச் சமூகத்தில் சாதிக்கும் ஜனநாயகப்படுத்தலுக்கும் (Caste and Democratisation) இடையிலான உறவை ஆராய்வதே இக்கட்டுரையில் நான் ஆராயவிருக்கும் பிரதான ஆய்வுப் பிரச்சினையாகும் (The Key Research Question – பக். 450)” மேற்கூறியவாறு தாம் ஆராயவிருக்கும் ஆய்வுப் பிரச்சினை யாது என்பதைப் பேராசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையின் முற்பகுதியில் தெரிவிக்கின்றார். இவ்வாறு தமது […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா இலங்கையில் சாதிக்கும் ஜனநாயக அரசியலுக்கும் (Caste and Democratic Politics) இடையிலான உறவைக் குறித்து ஆய்வு ஒன்றினைப் பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா அவர்கள் எழுதியுள்ளார். ‘CASTE DEMOCRACY AND POST INDEPENDENCE SOCIAL TRANSFORMATION IN A KANDYAN VILLAGE – 2023’ என்னும் தலைப்பில் அவரது ஆய்வுக்கட்டுரை அமைந்தது. அதனை மேற்குறித்தவாறு தமிழில் தந்துள்ளேன். இவ்வாய்வுக்காக ரியுடர் […]
ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம அரச அதிகாரத்தை கைப்பற்றுதல் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுதல் (CAPTURE OF STATE POWER) பற்றிய மார்க்சியக் கோட்பாடுகள் சீன-சோவியத் வாதங்களின் போது மேற்கிளம்பின. சீனா, கியுபா, வியட்நாம் ஆகிய நாடுகளின் அனுபவங்கள் மரபுவழி மார்க்சிஸ்டுகள் முன்வைத்த மாதிரியில் இருந்து வேறுபட்டதாக இருந்தன. சீனாவின் ஷங்காய் நகரின் தொழிலாளர் வர்க்கத்தின் கிளர்ச்சி கொடூரமாக அடக்கப்பட்டது. அதன் பின்னர் ‘மா ஓ சேதுங்’ யெனான் […]
அரசியல் யாப்புச் சட்டங்களின் ஒப்பீடு ‘பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களிற்குப் பொருத்தமான அரசியல் யாப்புக்களை வரைதல் : சர்வதேச அனுபவங்கள் சில’ என்னும் கட்டுரையின் சில பக்கங்களில் உள்ள கருத்துக்களை மேலே சுருக்கித் தந்தோம். இக்கட்டுரைத் தலைப்பு, இக்கட்டுரை ஆராயும் விடயங்கள் ஆகியன அரசியல் யாப்புச் சட்டம் பற்றியவை. குறிப்பாக அரசியல் யாப்புச் சட்டங்களின் ஒப்பீடு (COMPARATIVE CONSTITUTIONAL LAW) என்ற பாடத்தின் பகுதியாக அமையும் விடயங்களையே விக்கிரமரட்ண ஆராய்விற்கு எடுத்துக் […]
ஆங்கில மூலம் : சரத் அமுனுகம சமூகவியலாளர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் ‘WIJEWEERA AND THE LEADERSHIP OF THE J.V.P: A SOCIOLOGICAL PERSPECTIVE’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘DREAMS OF CHANGE – LAND LABOUR AND CONFLICT IN SRI LANKA’ என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு நூலின் ஆறாவது அத்தியாயமாக (பக். 184 – […]