தி. செல்வமனோகரன், Author at Ezhuna | எழுநா

தி. செல்வமனோகரன்

இளந்தாரி வழிபாடு

20 நிமிட வாசிப்பு | 3289 பார்வைகள்

அறிமுகம் எந்த உயிரியின் பரிணாமத்திலும் வளர்ச்சியிலும் இளமைப் பருவம் முக்கியமானதாகும். மனிதரில் இளைஞர்களை வாலிபர், இளைஞர் – இளந்தாரி என்று சுட்டுதல் வழக்கம். போர், காதல், உழைப்பு என எல்லாத்தளங்களிலும் இளமை தவிர்க்க முடியாத பிரதானமான அம்சமாகத் திகழ்கிறது. வாழ்வில் துடுக்குத்தனமும் அளவற்ற செயற்பாடுகளும் உடைய அப்பருவம் ஒவ்வொரு மனிதராலும் மறக்க முடியாத ஒன்றாகும். போரிலும் வீரத்திலும் ஆற்றலிலும் இளந்தாரிப் பருவம் தவிர்க்க முடியாத பருவமாகின்றது. மண், பொன், காதல் […]

மேலும் பார்க்க

வன்னித்தம்பிரான் வழிபாடு

20 நிமிட வாசிப்பு | 7046 பார்வைகள்

அறிமுகம் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த ஆதிகாலத்தில் இருந்து விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மனிதர்களின் முக்கிய தொழில்களாக இருந்து வருகின்றன. குறிப்பாகத் தமிழகச் சூழலில் உருவான திணைக்குடிகள் இதற்குச் சான்றாகின்றன. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்; அதுவே விவசாயத்தின் பூர்வீகம் என்று கூறப்பட்டாலும் முல்லை நிலமும் குறிஞ்சியும் கூட குறித்த காலகட்டத்தின் பின் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தவிர்க்க முடியாத தொழில்சார் இணங்கு முறையை உடையன […]

மேலும் பார்க்க

குறிப்பன் எனும் தெய்வம்

19 நிமிட வாசிப்பு | 5512 பார்வைகள்

அறிமுகம் மக்களின் வாழ்வியல் புலத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் நிலத்துக்கே உண்டு. நிலமே பண்பாட்டை, பொருளாதாரத்தை, அரசியலை, கலையை, தத்துவத்தை, சமயத்தை என எல்லாவற்றையும் ஆதியிலிருந்து தீர்மானித்து வந்திருக்கிறது. திணைமரபு எனும் தமிழ் அடையாளம் நிலத்தின் அடையாளமே. நிலத்தோடு ஒட்டிய வாழ்வு பேரியற்கையோடு இயைந்து வாழ்தலாக அமைந்துள்ளது. நிலத்தின் வழியமைந்த தொழில், தொழிலின் தாற்பரியம், இயற்கையை எதிர்கொள்ளல் என்பன இயற்கை அதீதத்தை உணரச் செய்தன. தமக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூரச் செய்தன. […]

மேலும் பார்க்க

பெத்தப்பா என்னும் தெய்வம்

15 நிமிட வாசிப்பு | 6851 பார்வைகள்

அறிமுகம் மனிதர் பேரியற்கை மீது கொண்டிருந்த வியப்பு, அச்சம் மற்றும் மரணம், பிறப்புப் பற்றிய சூக்குமமறியா மனோநிலைகள், துயரம் தந்த வாழ்வு போன்றன இயற்கைக்கதீதமான ஒன்றைப் பற்றிச் சிந்திக்கவும், அதை நம்பவும் வழிபடவும் செய்தது. அச்சந்தர்ப்பத்தில் குறித்த துயரத்தில் இருந்து விடுபடல் நிகழும் போது அதனை மேலும் மேலும் வழிபடச் செய்தது. அரூப இயற்கையை – வெறுவெளியை அல்லது நிலம், நீர், காற்று, தீ என்பவற்றை வழிபடுதல் பூரண பிடிப்பைத் […]

மேலும் பார்க்க

முனிகளின் இராச்சியம்

18 நிமிட வாசிப்பு | 8996 பார்வைகள்

அறிமுகம் மனிதர் சமூக விலங்காக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இயற்கையுடனிணைந்த வாழ்வில் தன் தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டேயிருப்பது மனிதரியல்பாகும். இயற்கையை வெல்ல முடியாத தருணங்களில் எல்லாம் மனிதர் ‘இயல்பிறந்த’ ஆற்றலாக அதனைக் கருதி அச்சத்துடன் வழிபட, விசுவசிக்க, இறைஞ்சி நிற்கத் தலைப்பட்டனர். தான் நினைத்தது சித்திக்கச் சித்திக்க, மேலும் விசுவசிக்கவும் இறைஞ்சவும் நம்பிக்கை கொள்ளவும், தன் பகுத்தறிவைப் புறந்தள்ளி, அளவற்ற பக்தி கொள்ளவும் தலைப்பட்டனர். அது வயது, […]

மேலும் பார்க்க

நீலாசோதையன் என்னும் துணைத்தெய்வம்

19 நிமிட வாசிப்பு | 9763 பார்வைகள்

அறிமுகம் மனிதகுலம் ஏனைய உயிரினங்களில் இருந்து வேறுபட்டு தனி அடையாளங்களோடு – பகுத்தறிதலோடு இயங்கத் தொடங்கிய இனக்குழுமக் காலந்தொட்டு வீரம் – போர் என்பன தவிர்க்க முடியாதவையாகி விட்டன. தனக்காக மட்டுமன்றி இனக் குழுவுக்காகப் போராடுதலும் இன்றியமையாததாயிற்று. தமக்காகப் போராடி உயிர்நீத்த தலைவனை அல்லது வீரனை அவ்வவ் இனக்குழு மக்கள் போற்றினர். இனக்குழுவின் பகையை வெல்லல், வேட்டை, குழுவின் தேவைகளை நிறைவேற்றல், பகை விலங்குகளைக் கொல்லுதல் – வெல்லுதல் என […]

மேலும் பார்க்க

பெரும்படை என்னும் குலதெய்வம்

16 நிமிட வாசிப்பு | 11349 பார்வைகள்

ஆதிகால மக்களின் நம்பிக்கைகளே சமயங்களாகப் பரிணமித்தன. மானுடர்களின் வாழ்வில் உருவான நம்பிக்கைகள் பல்வேறு நம்பிக்கைகளையும், கற்பனைகளையும், அச்சங்களையும் அவற்றினூடாகப் பல்வேறு ஐதிகக் கதைகளையும் புராணங்களையும் நீண்ட நெடுங்காலங்களுக்கு அளிக்கை செய்து வந்துள்ளன. அதன் வழி “ஓ! நம்பிக்கையே என்னை நம்பிக்கை உடையவனாக்கு” என இறைஞ்சுகின்ற நிலைக்கு மானுடரை உந்தித் தள்ளிற்று. அவை அகவியல், புறவியல் எனும் இரு தளங்களிலும் வாழ்வு முழுவதும் மானுடருடன் தொடர்ந்து பயணித்தன. அது இயற்கை வழிபாடு, […]

மேலும் பார்க்க

வழுக்கு மர சுவாமி காத்தவராயர்

16 நிமிட வாசிப்பு | 10881 பார்வைகள்

இயற்கையோடு ஒட்டி வாழத் தலைப்பட்ட காலத்தில் இருந்து மனித வாழ்வில் சடங்குகளும் சமயங்களும் உருவாகத் தொடங்கின. இயற்கையை வழிபடத் தொடங்கிய மனிதர், அதனைத் திருப்திப்படுத்த பல சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய முற்பட்டனர். மக்களின் வாழ்க்கையோடு இயைந்த வழக்காறாக, நிலப் பண்பாடாக அவை வளர்ந்தன; சமய வழிபாட்டு முறைகள், சடங்குகள், நம்பிக்கைகள், கலைகள் என பன்முகப்படுத்தப்பட்டன. அவை பற்றி உரையாடல்கள் கர்ண பரம்பரைக் கதைகள், வாய்மொழிப் பாடல்கள், வெறியாடல்கள், கூத்துகள் எனப் […]

மேலும் பார்க்க

காவல் தெய்வம் சேவகர்

16 நிமிட வாசிப்பு | 10205 பார்வைகள்

மனிதர் ஆதிகாலத்தில் நாகரிகமுற்று நிலையான குடியிருப்புகளை அமைத்து வாழத்தலைப்பட்ட காலத்தில் அவர்களது வாழ்வு இரு அடிப்படைகளைக் கொண்டமைந்தது. ஒன்று காதல்; காமம் உள்ளிட்ட உணர்வுகளைச் சார்ந்த அகவியல் அம்சங்கள். மற்றையது வீரம்; கொடை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட புறவியல் அம்சங்கள். வீரம் என்பது பகை வெல்லல், தலைமை தாங்குதல், வேட்டையாடுதல், உடலுள வலிமை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டிருந்தது. இனக் குழுத்தலைவன் அல்லது வீரன் தன் இனத்திற்காக உயிர் துறக்கும் […]

மேலும் பார்க்க

பிரசவச் செவிலி கொத்தியாத்தை

18 நிமிட வாசிப்பு | 10855 பார்வைகள்

அறிமுகம் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதன் தன் வாழ்வில் நடைபெற்ற விரும்பத்தக்க, விரும்பத்தகாத அல்லது நன்மை, தீமையின் பாற்பட்ட அனுபவத்தின் வழி தன்னால் கட்டியமைக்க முடியாத விடயங்களை இயல்பிறந்த ஆற்றல்களாகக் கருதத் தலைப்பட்டான். ஒவ்வொரு இயற்கை நிகழ்வுக்கும் காரணமாக தெய்வங்கள் உருப்பெறத் தொடங்கின. நன்மை செய்யும் தெய்வங்கள், தீமை செய்யும் தெய்வங்கள் என அவை உரைக்கப்பட்டன. நிலத்தெய்வம், ஐம்பூதங்களின் தெய்வம், மரத்தெய்வம், உருவம் உள்ள தெய்வம், உருவம் அற்ற தெய்வம், […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்