காரைநகர்ச் சைவமகாசபை நூல்நிலையம் காரைநகர்ச் சைவமகாசபை பொன்விழா மலர் 1967 இல் வெளிவந்தது. இம்மலராசிரியராக வைத்தீஸ்வரக் குருக்கள் சிறப்புறப் பணியாற்றி சைவமகாசபையின் வரலாற்றை முடிந்தவரை பதிவுசெய்ய முயன்றுள்ளார். அவரது குறிப்புகளின்படி காரைநகர்ச் சைவமகாசபை 1926 ஆம் ஆண்டிலேயே 347 தமிழ்ப் புத்தகங்களும் 279 ஆங்கிலப் புத்தகங்களும் கொண்டதொரு நூலகத்தை தன்னகத்தே கொண்டிருந்துள்ளதென்ற செய்தியை அறியமுடிகின்றது. அந்த ஆண்டில் மாத்திரம் 126 புதிய புத்தகங்கள் நூலகத்தில் சேர்க்கப்பட்டிருந்தனவென்ற செய்தியும் காணக்கிடைக்கின்றது. 13 […]
கலாநிலையம் நூலகம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 1920 ஆம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்து 1958 வரை பணியாற்றியவர் கலைப்புலவர் க. நவரத்தினம். தன்னிடமிருந்த பெரும்பாலான நூல்களைக் கொண்டு ‘கலாநிலையம்’ என்ற பெயரில் ஒரு அறிவுத்தேடலுக்கான கழகமாக, ஒரு நூலக நிறுவனமாக உருவாக்கி, 1930 டிசம்பர் மாதம் 5ம் திகதி அதனைத் தொடக்கிவைத்தார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையின் மேற்கில் உள்ள பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த மனையொன்றில் ‘கலாநிலையம்’ இயங்கத் தொடங்கியது. […]
யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால நூலகங்கள் பற்றிய இக்கட்டுரைத் தொடரில் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தின் வரலாற்றைப் பதிவுசெய்யும் வேளை ‘01.08.1934 முதல் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியிலுள்ள ஒரு சிறிய வாடகை வீட்டில் படிப்பகமும் நூலகமும் செயற்படத் தொடங்கின’ என்று அறிந்துகொண்டோம். ஆயின், இதுவே யாழ்ப்பாணத்தின் முதலாவது நூலகம் அல்லது முதலாவது பொதுசன நூலகம் என்ற பிம்பம் நீண்டகாலமாக வளர்த்தெடுக்கப்பட்டு வந்துள்ளது. இது தவறானதாகும். யாழ்ப்பாணப் பொது நூலகம் வேரூன்றிய காலத்திலும் அதற்கு முன்னரும் […]
திருக்கோணமலையில் நீண்டகாலம் பணியாற்றியிருந்த திரு.வி.எஸ். தனபாலசிங்கம் அவர்கள், 1990 ஜனவரி மாதம் தொடக்கம் யாழ். மாநகர சபைப் பொது நூலகத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்தார். யாழ். நூலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தபோது, யாழ். நூலகம், கோட்டையிலிருந்து தொடர்ச்சியான ஷெல் தாக்குதலின் காரணமாக தனது பிரதான நூலகக்கட்டிடத்தை விட்டு வெளியேறியிருந்தது. அதன் சேர்க்கைகளும் சேவைகளும் பிரிக்கப்பட்டு ஆறு கிளை நூலகங்களாக செயற்பட்டுக் கொண்டிருந்தது. யாழ். நூலகத்தில் பணியாற்றும் உதவி நூலகர்கள் அனைவரிலும் […]
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முகாமையாளர் சபையில் எழுது வினைஞராயிருந்த வே. இளையதம்பி அவர்களின் மகன் வே.இ. பாக்கியநாதன் இளைஞராயிருந்த போதே இந்துக் கல்லூரியில் சிலமாதங்கள் ஆசிரியராகவும் இருந்தவர். இவர் தனது மேற்படிப்புக்காக கல்கத்தா சென்று பொருளியல், வர்த்தகம் முதலிய பாடங்கள் படித்துப் பட்டம் பெற்று மீண்டதும் கொழும்பில் வெஸ்லி கல்லூரியில் ஆசிரியரானார். வெஸ்லி கல்லூரியிருந்த காலத்தில் புல்பிறைற் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவுக்குச் சென்று அங்கே அற்லான்ரா பல்கலைக்கழகத்தில் நூலகத்துறையில் (M.Sc. […]
நகரசபையினர் தாமே ஒரு வாசிகசாலையை ஆரம்பித்து நடத்தலாம் என்று கருதிய வேளையில் ஆர். சுப்பிரமணியம் அவர்கள் இந்நூலகத்தைப் பொறுப்பேற்று நடத்துமாறு பிரேரணை கொண்டு வந்தார். இவ்வாறாக, நூல் நிலைய பரிபாலன சங்கத்தின் காரியதரிசியாய் க.மு.செல்லப்பா அவர்கள் நகரசபைத் தலைவருக்கு 21-12-1934 இல் எழுதிய கடிதம் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். தலைவர்,நகரசபை,யாழ்ப்பாணம். ஐயா, தங்கள் சபையினர் எங்கள் நூல் நிலையத்தை பொறுப்பேற்று நடத்துதல் சம்பந்தமாக நிறைவேற்றிய பிரேரணையை எங்கள் காரிய […]
க.மு.செல்லப்பாவின் யாழ்ப்பாண மத்திய இலவச தமிழ் நூற் கழகம் நகுலேஸ்வரா படிப்பகம் திறக்கப்பட்ட காலகட்டத்தின் பின்னரும் சரி அதற்கு முன்னரும் சரி, குடாநாட்டு பல்வேறு அறிஞர்களின் வீடுகளில் குடும்ப நூலகங்கள் இருந்துள்ளன என்பதை பல்வேறு வகையிலும் அறியமுடிகின்றது. இன்றும் பிரித்தானிய நூலகத்தில், எமது மூதாதையர் பலரின் தனிப்பட்ட சேகரிப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் பிறந்த சேர். முத்து குமாரசுவாமி (Muttu Coomaraswamy, 23.01.1833 – 04.05.1879) பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டவாக்கப் […]
9.5.1895 ‘உதயதாரகை’ பத்திரிகையில் பாடசாலை நூலக விருத்தி பற்றிய சுவாரஸ்யமான செய்தியொன்று காணப்படுகின்றது. “கோப்பாய் வித்தியாசாலையார் புத்தகசாலை ஒன்றுக்கு அடியிடக் காண்பது சந்தோட கருமம். பிள்ளைகள் துண்டு கொண்டு பணம் தண்டலிற் திரிகின்றனர். வீட்டுக்கு வீடு ஒவ்வொரு புத்தகசாலை இருந்தாலோ என்றும் ஆசை என் மனதில் நெடுங்காலம் குடி கொண்டது. வாய்ச்சியளி இல்லாத தபதியும், கலப்பை நுகமில்லாத வேளாளனும் புத்தகமில்லாத ஆசிரியனும் ஒருவருக்கொருவர் சமம். பாடசாலையோட்டம் முடிந்தால் புத்தகங்கள் ஓட்டம் […]
யாழ்ப்பாணத்தில் நூலக வளர்ச்சியில் நாவலரது காலப்பகுதியை கணிசமான கவன ஈரப்புக்கு உட்பட்டதாகக் கொள்ளலாம். நாவலர் வாழ்ந்த காலப் பின்னணியும் சமய இயக்கங்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பெருக்குவதற்கு உதவின. இக்காலத்தில் மக்களின் கல்வியை ஓங்கச் செய்வதற்கு சமய நிறுவனங்கள் சிறந்த சாதனங்களாக விளங்கின. பப்டிஸ்ட் மிஷன் (Baptist Mission), வெஸ்லியன் மிஷன், அமெரிக்கன் மிஷன் ஆகிய சமய நிறுவனங்களின் தொண்டர்கள் இக்காலத்தில் இலங்கைக்கு வந்து சமயப் பணியினை ஆற்றினார்கள். இக்காலத்தில் […]
உலகில் கல்வி வளர்ச்சியும் நூலகங்களின் தோற்றமும் ஒன்றோடொன்று தொடர்புபட்டே வந்துள்ளன. யாழ்ப்பாணத்தின் நூலக வளர்ச்சியை நாம் ஆராய்வதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டினது கல்வி வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதும் அவசியமாகின்றது. அந்நியராட்சிக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் கல்வி வளம் பெற்றிருந்தது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. இதனைக் கடந்த இயலில் கண்டிருந்தோம். குறிப்பாக 13ஆம், 14ஆம் நூற்றாண்டுகளில் ஆரியச் சக்கரவர்த்திகளது காலங்களில் இக்கல்வி வளர்ச்சி உச்சநிலை அடைந்திருந்ததெனக் கூறலாம். இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகளும் […]