பால. சிவகடாட்சம், Author at Ezhuna | எழுநா

பால. சிவகடாட்சம்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அன்னாசிப் பழம்

12 நிமிட வாசிப்பு | 7956 பார்வைகள்

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது இரண்டாவது பயணத்தின் போது, 1493 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி, தாம் புதிதாகக் கண்டறிந்த கரீபியன் தீவு ஒன்றுக்கு சாண்டா மரியா டி குவாடெலூப் என்று பெயரிட்டார். கப்பல்கள் கரையை நெருங்கியபோது, அத்தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகள் படகுகளில் நன்னீர் மற்றும் உணவை விற்பதற்காகக் கொண்டு வந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்டவற்றுள் கொலம்பஸை மிகவும் கவர்ந்த ஒன்று அன்னாசிப்பழமாகும். கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வருவதற்குப் […]

மேலும் பார்க்க

சர்க்கரை வள்ளி எனப்படும் வத்தாளங்கிழங்கு

8 நிமிட வாசிப்பு | 7462 பார்வைகள்

பொதுவாக நிலத்தின் மேல் கொடியாகவும் நிலத்தின் கீழ் கிழங்காகவும் காணப்படும் தாவரங்களுக்கு ‘வள்ளி’ என்று பெயரிட்டனர் எமது முன்னோர்கள். கொடியைக் குறிக்கும் ‘வல்லி’ என்னும் வடமொழிப்பெயர் தமிழில் இருந்தே பெறப்பட்டிருத்தல் கூடும். வள்ளிக்கிழங்கு சங்க காலத்தில் நன்கு அறியப்பட்ட ஓர் உணவாக இருந்தது. நெல்லரிசிச்சோறு போதுமான அளவு கிடைக்கப்பெறாத சங்ககாலத்துக் குறிஞ்சி நிலமக்கள் தமக்குத் தேவையான கார்போஹைட்ரேட் (carbohydrate) எனப்படும் ஊட்டச்சத்தை மாச்சத்து நிறைந்த வள்ளிக்கிழங்கில் இருந்தே பெற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் […]

மேலும் பார்க்க

பறங்கிப்பூசணியும் நீற்றுப்பூசணியும்

15 நிமிட வாசிப்பு | 9958 பார்வைகள்

அனலழலை நீக்கும் அதிபித்தம் போக்கும்கனலனலே வென்பசியைக் காட்டும்-புனலாகுமிக்கவைய முண்டாக்கு மென்கொடியே யெப்போதும்சர்க்கரைப் பறங்கிக்காய் தான்– பதார்த்தகுண சிந்தாமணி- பொருள் : சர்க்கரைப் பறங்கிக்காய் எனப்படும் பூசணிக்காய் உடல் சூட்டைக் குறைக்கும். கூடிய பித்தத்தைப் போக்கும். பசியைக் கூட்டும். பெருமளவில் நீரைக் கொண்டிருக்கும். கபத்தைத் தோற்றுவிக்கும். ‘பறங்கிப்பூசணி’ என்னும் பெயரைக் கேட்டதுமே இந்தப்பூசணி பறங்கியர் என அழைக்கப்பட்ட போர்த்துக்கேயர் அல்லது ஒல்லாந்தரால் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு காய்கறியாக இருத்தல் வேண்டும் என்பதை […]

மேலும் பார்க்க

கோடைகாலத்தில் குளிர்ச்சிதரும் வத்தகப்பழம்

9 நிமிட வாசிப்பு | 11609 பார்வைகள்

*இலங்கையில் வத்தகப்பழம் என்றும் இந்தியாவில் தர்ப்பூசணி என்றும் பரவலாக அறியப்படும் இப்பழம் கோடைகாலத்தில் அருந்துவதற்கு மிகவும் சிறந்த ஒரு பழம் என்பதைப் பலரும் அனுபவபூர்வமாக அறிந்துவைத்துள்ளார்கள். இக்கட்டுரையில் வெளிநாட்டில் வாழும் தமிழர் பலரும் அறிந்துவைத்திருக்கும் தர்ப்பூசணி என்னும் பெயரையே பெரிதும் பயன்படுத்தியுள்ளேன். “வத்தகப் பழம் குளிர்ச்சி மன்னிடும் பைத்தியம்போம்சத்திபோம் பித்தம் தீரும் தவறிலாக் கொடி ஈதல்லால்ஒத்த கக்கரியும் வெம்மை ஒழித்துச் சீதளம் உண்டாக்கும்”-பதார்த்தசூடாமணி- “ஒரு தர்ப்பூசணியைச் சாப்பிட்டுப்பார்த்தால் தேவதைகள் என்ன […]

மேலும் பார்க்க

பயன்பல கொடுக்கும் பப்பாளி மரம்

11 நிமிட வாசிப்பு | 17433 பார்வைகள்

உலகில் அதிகளவில் பயிரிடப்படும் வெப்பமண்டலப் பயிர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது பப்பாளி ஆகும். வெப்பமண்டல அமெரிக்காவில் அதன் சரியான தோற்றம் தெரியவில்லை என்றாலும், அதன் தோற்றம் மற்றும் வளர்ப்பின் மையமாக மத்திய அமெரிக்கா அல்லது மெக்சிகோ இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. ஐரோப்பியரால் முதன்முதலில் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டொமினிக்கன் குடியரசு மற்றும் பனாமாவில் பப்பாளி கண்டறியப்பட்டது. மத்திய அமெரிக்காவிற்கு அப்பால் பப்பாளி பரவியதற்கு ஸ்பெயின் நாட்டவர்கள் தான் காரணம். […]

மேலும் பார்க்க

சிங்கள மக்களின் சோற்றுமரம் : ஈரப்பலா

9 நிமிட வாசிப்பு | 9347 பார்வைகள்

நியூகினியாவை பூர்வீகமாகக் கொண்ட ஈரப்பலா பழங்காலத்திலிருந்தே மலாய் தீவுக்கூட்டத்திலும், பசுபிக் தீவுகள் முழுவதும் பயிரிடப்பட்டு வந்துள்ளது. பண்டைய காலங்களில் சேப்பங்கிழங்கு மற்றும் தேங்காயுடன் ஈரப்பலா சேர்ந்த உணவு பூர்வீகக்குடிகளின் ஆரோக்கியத்தைப் பேணிவந்துள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்பு, இந்த மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுகளைக் கைவிடும் வரை ஊட்டச்சத்துக்குறைபாடு, உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோயைத் தவிர்க்க உதவிய உணவின் ஒரு பகுதியாக ஈரப்பலா இருந்துள்ளது. 1778 ஆம் ஆண்டில் ஹவாய் தீவுகளைக் […]

மேலும் பார்க்க

தக்காளி : இடைக்காலத்தில் வந்துசேர்ந்த இன்றியமையா உணவு

11 நிமிட வாசிப்பு | 9009 பார்வைகள்

காய்க்குக் கபம்தீரும் காரிகையே இவ் இலைக்குவாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் – தீக்குள்அணக்கிடு வற்றல் உறுபிணியோர்க்கு ஆகும்மணத்தக்காளிக்கு உள்ளவாறு – பதார்த்த குணவிளக்கம் – மணத்தக்காளியின் காய்க்கு சளி தீரும். இதன் இலைக்கு வாயில் ஏற்படும் கிரந்தி, சூடு என்பன மாறும். இதன் வற்றல், நோயாளிகளுக்கு நல்ல பத்திய உணவாகும் என்பது மேற்காணும் பாடல் தரும் செய்தி. ‘மணத்தக்காளி’ என்னும் ஒரு கீரை பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் […]

மேலும் பார்க்க

பஞ்சத்தில் உயிர்காத்த மரவள்ளி

10 நிமிட வாசிப்பு | 8372 பார்வைகள்

தமிழ்மக்களின் உணவுப்பதார்த்தங்கள் தொடர்பான பழைய நூல்களுள் ஒன்றில்கூட மரவள்ளிக்கிழங்கு இடம்பெற்றிருக்க முடியாது. வள்ளி அல்லது வல்லி என்பது படரும் கொடியைக் குறிக்கும். வள்ளி என்றால் நிச்சயமாக அது நிலத்தின் மேலே கொடியும் கீழே கிழங்கும் உள்ள தாவரம் ஒன்றையே குறிக்கும். சங்ககாலத்தில் குறிஞ்சிநில மக்களின் பிரதான உணவுகளுள் ஒன்று வள்ளிக்கிழங்கு. பிற்காலத்தில் நிலத்தின் கீழே கிழங்கும் மேலே மரமும் கொண்டதாக ஒரு பயிர் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதற்கு ‘மரவள்ளி’ என்று பொருத்தமான […]

மேலும் பார்க்க

பதார்த்த சூடாமணி – தூதுவளை

10 நிமிட வாசிப்பு | 12766 பார்வைகள்

தூதுபத் திரியன் னத்தைத் தொலைக்கும்பூத் தாதுண்டாக்கும் மேதகு காய்ச்சே டத்தை மீட்கும்வேர் மூன்று தோஷம் சேதமாய்ப் போகச் செய்யும்                                              பதார்த்த சூடாமணி தூதுபத்தி ரியுண்டு தொலைக்கும் பூதாது மெத்த மிகுத்திடு தழைத்திடுங் காய்கூறுகின்ற இருமலை மாத்திடும் வேர்வாதபித்த சிலேத்தும மாற்றுமே அகத்தியர் 2000 தூதுவளை உணவைச் சமிபாடு அடையவைக்கும். இதன் பூ ஆண்மையை அதிகரிக்கும். காய் நெஞ்சில் கட்டிய சளியை வெளியேற்றும். தூதுவளையின் வேர் வாதம், பித்தம், கபம் என்னும் […]

மேலும் பார்க்க

பதார்த்த சூடாமணி – மிளகாய்

7 நிமிட வாசிப்பு | 10621 பார்வைகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இருபாலைச் செட்டியார் என்பவரால் இயற்றப்பெற்றதாகக் கருதப்படும் பதார்த்த சூடாமணியில் மிளகாயும் இடம்பெற்றுள்ளது. கவிதை வடிவிலான இந்நூலில் கூறப்பட்டுள்ள உணவுகளின் குணங்கள் பற்றி இத்தொடரில் ஆராயப்படுகின்றது. அவசியமான இடங்களில் சி. கண்ணுசாமிப்பிள்ளை அவர்களின் பதார்த்தகுணவிளக்கம் உள்ளிட்ட பிற தமிழ் மருத்துவ நூல்களில்   இருந்தும் ஒருசில பாடல்கள் தரப்படுகின்றன. மிளகாய் தீதிலா மிளகாய்க்குள்ள செய்கையைச் சொல்லக் கேண்மோவாதமே சேடம் வாயு மந்தம் என் றினைய வெல்லாம்காதம்போம் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)