தியாகராஜா சுதர்மன், Author at Ezhuna | எழுநா

தியாகராஜா சுதர்மன்

யாழ்ப்பாணத்து பழங்களும் பனைசார் உணவுகளும்

28 நிமிட வாசிப்பு | 18954 பார்வைகள்

உணவில் யாழ்ப்பாணத்து பழங்கள் எமது நாட்டு தட்பவெப்பநிலைக்கு பழவகைகள் இன்றியமையாததாக இருக்கின்றன. குறிப்பாக பல்வேறு பருவ காலநிலைகளைக் கொண்ட எமது நாட்டில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காலநிலைக்கும்,  காலநிலை மாறுபாட்டால் ஏற்படக்கூடிய உபாதைகளுக்கும் ஏற்ப பழவகைகள் பருவ காலங்களில் இயற்கையாகவும் விவசாயத்தின் மூலமாகவும் கிடைக்கின்றன. கூடுதலாக வெப்பகாலங்களில் பழங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. மாம்பழம், பலாப்பழம், விளாம்பழம், அன்னமுன்னாப்பழம், சீதாப்பபழம், ஈச்சம்பழம், வத்தகப்பழம், வெள்ளரிப்பழம், இலந்தைப்பழம், வில்வம்பழம், நாவற்பழம், பனம்பழம், நாரைத்தோடை, கொய்யாப்பழம், […]

மேலும் பார்க்க

யாழ். பாரம்பரிய சமையலில் சுவையூட்டிகள்

19 நிமிட வாசிப்பு | 13611 பார்வைகள்

பொதுவாக முழுமையான சுவை எனப்படுவது, நாக்கினால் உணரப்படும் சுவை, மூக்கினால் உணர்ந்து கொள்ளும் மணம், கண்ணினால் காணும் வடிவம் என்பவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாடாகும். இவ்வாறான சுவைகளுக்கு, பொதுவாக தாவரப்பொருட்களில் உள்ள தாவர இரசாயனங்களே (Phytochemicals) காரணமாகின்றன. ஏறத்தாழ 25000 தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நன்மைதரக்கூடிய இரசாயனங்களும் உள்ளன. நச்சுப்பொருட்களும் உள்ளன. இவற்றின் அடிப்படையில் உடலுக்கு நன்மை தரக்கூடிய, நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடிய தாவர இரசாயனங்களை அதிகமாகக் கொண்டிருக்கக் கூடியனவும், விரும்பக்கூடிய […]

மேலும் பார்க்க

ஈழத்துக் கடலுணவுகளும் சாதக பாதகங்களும்

6 நிமிட வாசிப்பு | 9139 பார்வைகள்

இறைச்சி வகைகளுடன் ஒப்பிடும்போது பொதுவாகக் கடல் உணவுகளே சிறந்த ஆரோக்கியமிக்க உணவு வகைகளாகக் கருதப்படுகின்றன. கடல் உணவுகளானது இதய நோய்கள், வாதநோய்கள், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, அதியுடற் பருமன் போன்றவற்றின் தாக்கங்களைக் குறைக்கின்றன. இதற்கு காரணம் கடல் உணவுகளில், நிரம்பிய கொழுப்புக்கள் (Saturated fat) குறைவு. அதேவேளை இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒமேகா 3 (Omega 3) கொழுப்பமிலங்கள் உட்பட, நிரம்பாத கொழுப்புக்களையும் (Unsaturated fatty acids) கொண்டவை. […]

மேலும் பார்க்க

அசைவ உணவுகளின் சாதகங்களும் பாதகங்களும்

10 நிமிட வாசிப்பு | 7020 பார்வைகள்

பன்றி “ஊர்ப்பன்றி நிணநெய் யுண்ணி லுறுந்திரி தோசம் புண்ணேதீர்க்கருங் கரப்பன் வெட்டை தினவொடு மற்று முண்டாம்ஈர்த்ததிடும் வரட்சி மூல மிளைப்பும்போ மதுர மாகும்கார்க்காட்டுப் பன்றி தன்னின் கடுநிணங் கரப்பன் வாயு” – பக்.86, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி ஊர்ப்பன்றி இறைச்சி மற்றும் அதன் கொழுப்பு என்பனவறைத் தொடர்ந்து உண்டுவந்தால், திரிதோசங்களும் தோசமடையும். இதனால் பலவிதமான தொற்றா நோய்களும் ஏற்படும். எளிதில் தீர்க்கமுடியாத புண்ணுடன் கூடிய கரப்பன் என்னும் தோல் நோயானது,  […]

மேலும் பார்க்க

அசைவ உணவுகள்

14 நிமிட வாசிப்பு | 15158 பார்வைகள்

அசைவ உணவுகள் எனும்போது மிருகங்கள், பறவைகள் அவற்றின் முட்டைகள், கடல் உயிரினங்கள் போன்றன உள்ளடங்குகின்றன. சைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது பல நன்மை, தீமைகள் இருப்பினும் உணவில் உள்ள சத்துக்களின் செறிவு அசைவ உணவில் அதிகம்  கிடைப்பது மறுக்கமுடியாத ஒன்றாகும். சைவ உணவுப்பழக்கம், அசைவ உணவுப்பழக்கம் என்பது அவரவர் நம்பிக்கைகளுக்குள்ளும் விருப்புக்களுக்குள்ளும் அடங்கிவிடுகின்றன.  மனித சமூகத்திடம் அசைவ உணவுகளை உண்பது காலம் காலமாக இருந்துவருகின்ற ஓர் உணவுப் பழக்கமாகும். இறைச்சி வகைகள் […]

மேலும் பார்க்க

பாலும், பால்சார்ந்த உணவுகளும்

10 நிமிட வாசிப்பு | 15665 பார்வைகள்

நமது உணவுப் பாரம்பரியத்தில் சைவ உணவு, அசைவ உணவு என்ற வகைப்பாட்டுக்குள் சைவ உணவுப் பழக்கவழக்கங்களுள் பாலும் பால்சார்ந்த உணவுகளும் அடங்குகின்றன. மேலைத்தேய உணவு வகைப்பாடுகளுள் பாலினை தாவர உணவுகளுடன் சேர்த்து உண்ணுபவர்களை லக்ரோ வெஜிரேறியன் (Lacto vegetarians) என்பார்கள். மேலைத்தேயத்தவர்கள் தனியே தாவர உணவுகளை உண்பவர்களுக்கு (Pure vegetarians)  சில ஊட்டச்சத்து குறைபாடுகள் வரும் என குறிப்பிட்டுள்ளார்கள். உதாரணமாக உடலுக்குத் தேவையான ஆனால் மனித உடலினால் தொகுக்க முடியாத, […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய மரக்கறி வகைகளில் காய்கறிகள், கிழங்குகள் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு | 19227 பார்வைகள்

வாழைப்பூ – காய் – தண்டு “வாழையின் பூவி னாலே வளர்பெரும் பாடு போங்காய்சூழுறு மரிய மூலப் பிரமேகந் தொலைக்கு மித்தண்டாழுறு மலக்கட் டெல்லா மகற்றுமென் றுரைத்தார் முன்னேதாழ்விலாப் பொதிகை மேய தபோதனர் கோமான் றானே” – பக்.76, அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி வாழைப்பூவினால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்பெருக்கு  குறையும். வாழைக்காய்க்கு மூல நோய்கள், நீரிழிவு என்பன கட்டுப்படும். (ஏனைய நீரிழிவுக்குரிய பத்தியம் காக்கப்பட வேண்டும்). வாழைத்தண்டினால் மலக்கட்டு […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய மரக்கறி வகைகளில் காய்கறிகள், கிழங்குகள் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு | 35425 பார்வைகள்

முள்ளங்கி இலை, கிழங்கு “முள்ளங்கி யிலைக்கு வாயு முதிர்ந்திடும் வலிகுன் மம்போம்எள்ளலி லிதன்கி ழங்கிற் கேகுமே மூல மேகம்விள்ளுறு சேட காச மிகுகுன்ம மிருமல் வாந்திதள்ளிடு மிதனின் கொட்டை சார்கொள்ளிக் கரப்ப னீக்கும்” – பக். 68, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி. முள்ளங்கி இலைக்கு வாதம் அதிகரிக்கும், வலிகுன்மம் (வலியுடன் கூடிய வயிற்றுப்புண்) மாறும். முள்ளங்கிக் கிழங்குக்கு, மூல நோய், மேக (சிறுநீரக நோய்கள், பாலியல் நோய்கள், நீரிழிவு போன்ற […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய உணவில் கீரை, இலைவகைகள் – பகுதி 2

12 நிமிட வாசிப்பு | 15782 பார்வைகள்

வல்லாரை  (யோசனைவல்லி) உடலைத் தேற்றக்கூடியது, உடலை வன்மையாக வைத்திருக்கக்கூடியது. சிறந்த ஞாபகசக்தியைத் தரக்கூடியதுடன் மனநலத்தைக்காக்கும் குணம் கொண்டது. வல்லாரை துவர்ப்பு, கைப்பு, இனிப்பு சுவைகளைக் கொண்டது. சித்தமருத்துவ தத்துவங்களின் படி பித்த தோசத்தை சமப்படுத்தக் கூடியது. மதுமேக நோயில் சிறந்த பலனைத் தரக்கூடியது. “வல்லாரை யிலையை யுண்ண மடிந்திடும் பயித்தி யங்கள்அல்லாத கறைக்கி ராணி யனலுடன் பெரிப்பு மேகம்பொல்லாத மற்று நோய்கள் போமென நந்திக் கந்நாள்எல்லார்க்கு முதல்வ னாய விறைபர்ந் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய உணவில் கீரை, இலைவகைகள் – பகுதி 1

17 நிமிட வாசிப்பு | 25636 பார்வைகள்

இங்கு குறிப்பிடப்படும் தாவர உணவு வகைகளின் குணங்கள் அவற்றின் தனியான குணங்களாகும். இவற்றினை நாம் உணவாக்கிக் கொள்ளும்போது அவற்றின் குணங்களில் மாற்றங்கள் ஏற்படக் கூடியவாறே எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்கள் அமைந்துள்ளன. உணவுப்பொருட்கள் எல்லாவற்றுக்குமே இவை பொருந்தும். உணவுப் பொருட்களில் உள்ள நற்குணங்களை அதிகரிக்கவும், ஒவ்வாத குணங்களை இல்லாமல் செய்வதற்கு அல்லது குறைப்பதற்கும் ஏற்றவாறே நமது பாரம்பரிய உணவுத் தயாரிப்பு முறைகள் அமைந்துள்ளன. ஏற்கனவே குறிப்பட்டதுபோல் திரிதோச சமதிரவியங்கள் உணவு வகைகளில் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்