விவேகானந்தராஜா துலாஞ்சனன், Author at Ezhuna | எழுநா - Page 3 of 3

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : பாளி சிங்கள இலக்கியங்கள்

9 நிமிட வாசிப்பு | 20345 பார்வைகள்

கீழைக்கரை தொடர்பான எழுத்துச் சான்றுகளில் பௌத்த பாளி (பாலி – pāli) இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள், பிறநாட்டவரின் பயணக்குறிப்புகள், காலனித்துவ காலக் குறிப்புகள் என்பன அடங்கும். பாளிமொழி  இலக்கியங்கள் புத்த சமயத்தின் பரவலோடு, பாளி மொழியில் பல இலக்கிய முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் “வம்சக்கதை” என்ற வகையறாவைச் சேர்ந்த நூல்கள் முக்கியமானவை ஆகும். குறிப்பிட்ட புத்த சமயப் பேசுபொருளொன்றை அல்லது பலவற்றை […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகள் : கல்வெட்டுக்களும் பொறிப்புகளும்

24 நிமிட வாசிப்பு | 26832 பார்வைகள்

கீழைக்கரை தொடர்பான வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு மூன்று வகையான ஆதாரங்களை நாம் பயன்படுத்தலாம். முதலாவது பொறிப்புச் சான்றுகள், இரண்டாவது எழுத்துச் சான்றுகள், மூன்றாவது வாய்மொழி மற்றும் தொன்ம மரபுரைகள். பொறிப்புச் சான்றுகள் (Epigraphic evidences) என்பதன் மூலம் நாம் கருதுவது, கல்லிலும் செப்பு, பொன், ஐம்பொன் முதலிய உலோகங்களிலும் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, சாசனச் சான்றாதாரங்களை எழுத்துச் சான்றுகளில் பாலி இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், வடமொழி இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்தமிழ் இலக்கியங்கள், […]

மேலும் பார்க்க

கீழைக்கரையும் அதன் புவிச்சரிதவியலும் II

19 நிமிட வாசிப்பு | 25168 பார்வைகள்

கீழைக்கரையில் 21 கரச்சைக் களப்புகள் காணப்படுகின்றன (உரு. 01 & 02). உள்நாட்டு ஆறுகள் பெருகிப் பாய்வதால், இவற்றின் பெரும்பாலான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வண்டல் மண் படிந்து விட்டது. ஒப்பீட்டளவில் பெரிய கரைச்சைகளான மட்டக்களப்பு வாவி, பெரியகளப்பு, வாழைச்சேனைக் களப்பு என்பன இவ்வண்டல் மண் படிவால் இன்று பெருமளவு அகலம் குறைந்திருக்கின்றன. இலங்கைத்தீவின் கரையோரம், மட்டக்களப்பு வாவிக்குத் தெற்கே பிறைத்துண்ட வடிவில் அமைந்திருப்பதால், களப்புகளின் அளவை அதிகரிக்கும் கடுங்காற்று, பருவப்பெயர்ச்சிக் […]

மேலும் பார்க்க

கீழைக்கரையும் அதன் புவிச்சரிதவியலும் I

10 நிமிட வாசிப்பு | 19162 பார்வைகள்

கடந்த தொடரில், கீழைக்கரை என்ற நமது ஆய்வுப்பரப்பை சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணிகளின் அடிப்படையில் வரையறுத்துக்கொண்டோம். இந்துமாக்கடலின் ஓரமாக, மூதூர் கொட்டியாற்றுக்குடாவில் தொடங்கி சுமார் 250 கி.மீ கிழக்கே நகரும் கீழைக்கரை, கூமுனையில் குமுக்கனாற்றில் முடிவடைகின்றது. அதன் வடக்கில் இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கையும், தெற்கே குமுக்கனாறும் எல்லைகளாக நீடிக்கின்றன. மொனராகல் மாவட்டத்தின் `சியம்|பலாண்டுவைக்கு அருகே சிங்களத்தில் |கோவிந்தஃகெல (Gōvinda hela) என்றும் ஆங்கிலத்தில் வெ`ச்|ட்மினி`ச்|டர் அ|பே (Westminister […]

மேலும் பார்க்க

ஈழத்துக் கீழைக்கரை – ஓர் வரைவிலக்கணம்

13 நிமிட வாசிப்பு | 13078 பார்வைகள்

ஒரு வரலாறு என்பது எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதை சென்ற தொடரில் பார்த்த நாம், அதன் வழியே கீழைக்கரை வரலாற்றை எழுதத் தொடங்குவோம் என்று கூறியவாறு, போன இதழில் விடைபெற்றிருந்தோம். ஆனால் வரலாறுக்குள் நுழைவதற்கு முன்னர், நம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட “கீழைக்கரை” என்ற சொல்லை மிகச்சரியாக வரையறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தத் தொடரில் கீழைக்கரையை வரலாற்றுப் பார்வையில் ஆராயப்போகும் நாம், அப்போது தான் ஆய்வுப்பரப்புக்குள் திருத்தமாக நின்றபடி […]

மேலும் பார்க்க

ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை – ஓர் அறிமுகம்

10 நிமிட வாசிப்பு | 11206 பார்வைகள்

“மனிதன் கதைசொல்லி விலங்கு”. அன்றாடம் என்பது மனிதனுக்குக் கதைகள் இல்லாமல் நகர்வதில்லை. சோறுண்ண அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அன்னையர் நிலாச்சோறு ஊட்டும் போது ஆரம்பிக்கும் கதையிலிருந்து, இறுதிமூச்சு பிரியும் வரை, மனிதவாழ்வு கதைகளின் பெருக்கு மீது தான் அலை பாய்ந்தபடி செல்கிறது. சாதாரணமாகப் பேசுவதையே, ‘கதைத்தல்’ என்று புழங்கும் ஈழத்தமிழர் மத்தியிலோ கதைகளுக்கு என்றுமே குறைவிருந்ததில்லை. இப்போதெல்லாம் அரசியல் செயற்பாடு, அடையாள முன்னிறுத்துகை, கருத்தியல் செயற்பாடு என்றெல்லாம்  கதை வேறொரு பரிணாமம் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்