பெண் தெய்வ வழிபாட்டு மரபு பெண்தெய்வ வழிபாட்டு மரபு புதிய கற்காலம் தொட்டே உலகளாவிய ரீதியல் நிலைபெற்றிருந்தமையை அறியலாம். அகழ்வாராய்வுகளில் பெண் தெய்வங்களின் உருவச்சிலைகள் கிடைக்கப்பெற்றமை தக்க சான்றுகளாகும். எகிப்தில் ‘இசிஸ்’, ‘சிபிஸ்’ போன்ற பெண் தெய்வ வழிபாடுகள், சிரியாவில் ‘அஸ்தாத்’ எனும் பெண் தெய்வ வழிபாடு போன்ற பாரம்பரியங்களும் குறிப்பிடத்தக்கவைகளாகும். “நதிக்கரை நாகரிகங்களில் நிலவிய தாய்வழிச் சமூக அமைப்பின் காரணமாகவே பெண் தெய்வ வழிபாட்டு மரபு தோன்றியிருக்கிறது” என்பர் […]