இந்தியப் பெருங்கடலில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு இலங்கையின் கடற்படைத் துறைமுகங்கள் இருந்ததற்கான சான்றுகள் பண்டைய காலத்திலிருந்தே காணப்படுகின்றன. இந்தியப் பெருங்கடலில் பருவமழைக் காற்றின் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு இலங்கைத் துறைமுகம் ஒரு சிறந்த மையமாக இருந்து வந்துள்ளதுடன் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் இலங்கையின் துறைமுங்கள் ஒரு மையப்புள்ளியாகவும் இருந்து வந்துள்ளதை இலக்கிய ஆதாரங்கள், வெளிநாட்டார் பதிவுகள், கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் எடுத்துக் கூறுகின்றன. வட […]
கற்காலத்தின் (நியோலிதிக் காலம்) இறுதிக் காலகட்டங்களில் மனிதன் முதலில் மட்பாண்டங்களை உருவாக்கத் தொடங்கினான். வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையிலிருந்து விடுபட்டு, உணவு உற்பத்தி செய்யும் பொருளாதார மாற்றத்தின் போது மட்பாண்டத்தின் தேவை எழுந்தது. தானிய உற்பத்திக்கு தானியங்களைச் சேமித்து வைப்பதற்கும், தண்ணீர் சுமந்து செல்வதற்கும், உணவு சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் மட்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டன. பிசுபிசுப்பான ஈரக் களிமண்ணை எரித்தால், அது கடினமாகவும், உடையக்கூடியதாகவும் மாறும் என்பதைக் கண்டறிந்தனர். மேலும் பரிசோதனையில், களிமண்ணை […]
இஸ்லாம் தோன்றுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பிருந்தே அரேபியர் சிறந்த வணிகர்களாக ஆசியாக் கண்டம் முழுவதும் பிரபல்யம் பெற்றிருந்தனர். ஆயினும், அரேபியர்களுக்கு முன்பிருந்தே பாரசீகர்கள் சீனாவுடனும் தூர கிழக்கு நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இத்தகைய வர்த்தகத்தின் ஒரு முக்கிய தலமாக இலங்கை விளங்கியது. கிபி. 5 ஆம் நூற்றாண்டில் அனுராதபுர மன்னனோடு பாரசீகத்தின் சாசானியச் சக்கரவர்த்திகள் இராஜதந்திர ரீதியான உறவுகளைக் கொண்டிருந்தனர் (இமாம், 1944, 1965:13). பட்டுத் துணிகளை ஏற்றிவந்த சீனக் […]