இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக 1974 இல் தோன்றி, 1979 இல் ஒரு தனிப் பல்கலைக்கழகமாக உயர்வுபெற்று வளரும் இந்த உயர்கல்வி நிறுவனத்துக்கு ஐம்பது வயது. அவ்வளவு நீண்ட காலமாகத் தோன்றாவிட்டாலும், யாழ்ப்பணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முதலாவது முயற்சி 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதுமட்டுமல்லாது, 19 ஆம் நூற்றாண்டில் இருந்து யாழ்ப்பாணத்துக் […]