தமிழ்நாட்டினதும் இலங்கையினதும் எழுத்தறிவின் தொடக்கம் குறித்து ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இரு பிராந்தியங்களிலும் புழக்கத்தில் இருந்துள்ள காலத்தால் பழைய எழுத்தாகப் பிராமி கொள்ளப்படுகின்றது. இந்திய உபகண்டச் சூழலில் பெரும்பாலான மொழிகளின் வரிவடிவங்களுக்கான தாய் வடிவமாகப் பிராமி விளங்கியுள்ளது. தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளின் வரிவடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே வளர்ச்சியடைந்துள்ளன. பிராமி எழுத்துகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே முதன்முதல் வாசித்தறியப்பட்டன. ஜேம்ஸ் பிரின்ஸப் 1837 ஆம் ஆண்டு அசோகரின் பாறைக் […]
மலையகத் தமிழர் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தை முக்கியமான நிலைமாறுகட்ட காலமெனலாம். அக்காலத்திலேயே இலங்கைவாழ் இந்தியருக்கு முதன்முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின்போது ஒரு நியமன உறுப்பினர் இந்தியர் சார்பாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின்னர் 1924 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின் போது இந்தியர் சார்பாக இரண்டு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். அத்தேர்தலின் போது நடைமுறைக்கு வந்த மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை இலங்கைவாழ் இந்தியருக்கும் வழங்கப்பட்டது. […]