தென்னாசியாவில் பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழ்ந்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இலங்கையின் வரலாறும் பண்பாடு இலங்கைக்கே உரிய தனிப் போக்குடன் வளரவும் உதவியுள்ளது. இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக இடங்களாகவே கருதப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் தமிழ் மக்களே அதிகமாக அன்று தொட்டு இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் கூட்டமானது தமக்கென ஒரு பாரம்பரியப் பிரதேசம், மதம், கலை, மொழி, சமூகக் கட்டமைப்பு, கலாசாரம், […]
தென்னாசியாவிலேயே தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்றுப் பாரம்பரியங்கள் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது. இந்நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர். அன்று தொட்டு இன்றுவரை பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழுகின்ற நாடாக இலங்கை காணப்படுகின்றது. இங்கு பல்லினப் பண்பாட்டை வெளிப்படுத்தும் உச்ச காலப் பகுதியாக பொலநறுவை இராசதானி யுகம் விளங்கியது. இப்பொலநறுவை இராசதானியானது இலங்கையினுடைய இராசதானி வரலாற்றில், அனுராதபுரம் சோழர்களினால் கைப்பற்றப்பட்ட பின்னர், அவர்களால் […]