பறை பற்றி பலரும் பேசும் காலம் இது. இதற்கு ஒரு வரலாற்றுப்பின்னணியும் சமூகப் பின்னணியும் உண்டு. தமிழகத்துள் 1950 களில் ஊடுருவிய பெரியார், அம்பேத்கார், மார்க்சிச சிந்தனைகளும் தொடர்ந்து வந்த அயோத்திதாசர், இரட்டைமலை ஶ்ரீநிவாசன் சிந்தனைகளும் பின்னாளில் எழுந்த தமிழ்த் தேசியச் சிந்தனைகளும், தலித்திய சிந்தனைகளும் பறை இசைப்போர் சமூகத்துக்கு ஒரு விசை வேகம் தந்தன. அத்தோடு இச்சிந்தனைகளினால் பறையைத் தம் வாழ்வாதாரமாகக் கொண்ட பறை இசைக்கும் சமூகத்தையும் தாண்டி […]