மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குக் கோறளைப்பற்றுப் பிரதேச செயலக (வாகரை) எல்லைக்குள் உள்ள புச்சாக்கேணி கிராம அலுவலர் பிரிவின் மூன்றாம் கட்டை, நான்காம் கட்டை மற்றும் கல்லரிப்பு ஆகிய பகுதிகளில் 25.02.2025 அன்று சேனைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு எதிராக நடந்த எரிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள், வன வளப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு கிடைத்த பெரும் அவமானமாகும். இந்தச் செயற்பாட்டில் 13 குடிசைகள், குடும்பங்களின் உடைமைகள், உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், நெல், பயறு […]
அரசனின் முழக்கம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில், ஜனவரி 20 ஆம் திகதியிலிருந்து, அவர் தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அவரின் அதிரடி ஆட்டம் திடீரென முளைத்த விடயம் அல்ல; அது அமெரிக்கச் சிந்தனைக் குழாமின் திட்டமிட்ட நகர்வு. அதனை நோக்கும் போது அமெரிக்காவின் புதிய அணுகுமுறையை அறியக்கூடியதாக உள்ளது. நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஒரு பெரிய உத்தியின் தொடக்கமாக இது இருக்கப்போகிறது. அமெரிக்க வெளிநாட்டு […]
1 இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் மீன்பிடித்துறை முக்கியமானது. மீன் உணவு, விலங்குப் புரதத்தின் இன்றியமையாத ஆதாரமாகும். அது உயர்தர புரதம், வைட்டமின்கள் ஏ மற்றும் டி, பொஸ்பரஸ், மெக்னீசியம், செலினியம் மற்றும் அயோடின் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இலங்கையர்கள் தங்களுக்கான விலங்குப் புரதத்தை 50% மீன்களிலிருந்து பெறுகிறார்கள். இது உலக சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம். இலங்கையின் கடல் உணவு அதன் தனித்துவமான சுவைக்காக […]
1 யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்றாகும். சில தருணங்களில் மனிதர்களை விட புத்திசாலித்தமானவையும் கூட. பிள்ளையார் வழிபாடு என்பது யானைகளின் சமூக, கலாசார விழுமியங்களின் ஒரு அடையாளம் எனலாம். யானைகள் சிக்கலான, வலுவான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. ஆசியாவில், குறிப்பாக இலங்கையில், இந்த அற்புதமான விலங்குகள் தங்கள் சுற்றுச்சூழலைப் பகிர்ந்து கொள்ளும் மக்களிடையே மரியாதையைத் தூண்டுகின்றன. யானைகளுக்கு குறிப்பிடத்தக்க கலாசார முக்கியத்துவத்தை சமூகம் அளிக்கிறது. யானைகள் இலங்கையின் சின்னங்களாக, சுற்றுலாப் பயணிகளை […]
இலங்கையின் அரசியல் உயரடுக்குகள் நலன் சார் அரசு, சகல இலங்கையரின் சமூக, பொருளாதார, கலாசார உரிமைகைளையும் உள்ளடக்கும் செயன்முறையில் ஆர்வம் கொள்வதில்லை; மாறாக, பொருளாதார வாய்ப்புகளை மட்டும் உறிஞ்சி தங்கள் நலன் சார் விடயங்களில் மட்டும் உச்ச ஆர்வம் கொள்பவையாக உள்ளன. இந்தப் போக்கின் நேரடி விளைவு சமூக, பொருளாதாரப் பின்னடைவாகவும் வங்குரோத்து நிலையாகவும் அமையும். புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார வாய்ப்புகளின் ஊற்றுகளாக மட்டுமே கருதப்படுகின்றனர். அவர்களின் அரசியல் உரிமைகள் பற்றிய […]
முகப்பு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வுகள் (2023) இலங்கையின் ‘சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்’ பொருளாதார மீட்சியில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என மதிப்பிட்டுள்ளது. மதிப்புச் சங்கிலிகளுடன் (Value Chain) மீண்டும் அக்கறையுடன் ஈடுபடுவதன் மூலம், உற்பத்தி மற்றும் வணிகங்களை புத்துயிர் பெறச் செய்ய முடியும். இலங்கையில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 75% இற்கும் அதிகமான நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளன. இவை 20% இற்கும் அதிகமான ஏற்றுமதிகள், 45% […]
1 இலங்கைப் போரின் பின்னணியில், தமிழ்க் கிராமங்கள் காணாமல் போயின. சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப் பெயர்களை மாற்றின. தமிழருக்குச் சொந்தமான நிலங்கள் அபிவிருத்தி என்னும் பெயரில் பறிபோயின. நிலத்தை விட்டு விரட்டுவது என்பது ஒரு இனக்குழுவின் கலாசாரத் தளங்களை அழித்தல் ஆகும். இழைக்கப்பட்ட அட்டூழியங்களை சரியான முறையில் அடையாளப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களிடமும் தப்பிப் பிழைத்தவர்களிடமும் மன்னிப்புக் கேட்காமல், கடந்த காலத் தவறுகளின் கள நிலையை உணராமல் அபிவிருத்தி, முன்னேற்றம் ஆகிய முன்னெடுப்புகளைச் […]
‘Cey-Nor’ நிறுவனம் அந்தோணி ராஜேந்திரம் அவர்களால் கனவு கண்டு படிப்படியாக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு; 1960 களில் முளைத்து படிப்படியாக வார்க்கப்பட்டது. நோர்வேக்கும் யாழ்ப்பாணத்துக்குமான உறவின் நிமித்தமாக நோர்வே மக்களால் நிதி வழங்கப்பட்டு உருவாக்கப்பட்டது. 1960 களில், ஒரு நீடித்து நிலைக்கக்கூடிய மீன்பிடித்துறைசார் அபிவிருத்திக் கட்டமைப்புக்கு, எமது முன்னோர்கள் முயன்றார்கள் என்பதுக்கு Cey-Nor ஒரு எடுத்துக்காட்டு. 1983 களில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாகப் பிடிக்கப்பட்ட மீனின் அளவு 50,000 மெற்றிக் […]
டெங்கு நோயின் உலகளாவிய பரவல் சமீபத்திய தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. ஆனால் அதன் பொருளாதாரத் தாக்கங்கள் பற்றிய விரிவான கவனம் குறைவு. அது பற்றிய தகவல்கள், ஆதாரம் சார்ந்த கொள்கைகள் மற்றும் ஆய்வுகள் அரிது. எவ்வாறாயினும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், டெங்குவின் பொருளாதாரச் சுமை மீதான கவனத்தை ஈர்க்கும் முகமாக இவ் ஆரம்ப விசாரணை முன்வைக்கப்படுகிறது. ஆழமான விசாரணைக்கான ஒரு ஒரு பாதையின் ஆரம்பமாக […]
பின்புலம் அரசியல் பொருளாதாரப் பகுப்பாய்வு (Political Economy Analysis) என்பது ஒரு சூழ்நிலையில் உண்மையில் என்ன நடக்கிறது, உடனடிப் பிரச்சினையின் மேற்பரப்பிற்குப் பின்னால் என்ன இருக்கிறது, போட்டியிடும் ஆர்வங்கள் உள்ளதா என்பனவற்றைக் கண்டறியும் முயற்சியாகும். அரசியல் பொருளாதாரப் பகுப்பாய்வு, ஒரு சமூகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரச் செயல்முறைகளின் தொடர்புகளை ஆராய்கிறது. இது சமூகத்திலுள்ள குழுக்களின் அதிகாரத்தைப் புரிந்துகொள்வதை உள்ளடக்குகிறது; அவர்கள் வைத்திருக்கும் நலன்கள் மற்றும் அவர்களை உந்துவிக்கும் ஊக்கங்கள், குறிப்பிட்ட […]