கொக்காவிலுக்கும் மாங்குளத்திற்கும் இடைப்பட்ட பிரதான வீதிக்கு தெற்கே ஏறத்தாழ பத்துக் கிலோ மீற்றர் தொலைவில் காடுகள் சூழ்ந்துள்ள பனிக்கன்குளம் ஆற்றின் கரையோரங்களில் இருந்து கற்கால மக்கள் வேட்டையாடப் பயன்படுத்திய கற் கருவிகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பனிக்கன்குளத்தில் வாழ்ந்து வரும் திரு. கஜன், திரு. ஜெயகாந்தன் ஆகியோர் காட்டுபிரதேசத்தில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் காணப்பட்ட தானியங்கள் அரைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதெனக் கருதக்கூடிய கருங்கல்லின் புகைப்படம் ஒன்றை எமக்கு அனுப்பியிருந்தனர். இக்கருங்கலின் வடிவமைப்பும் அதன் […]
இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வெளிவந்த தமிழ் ஊடகங்கள் தூரநோக்குடன் தமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்தும் மரபுரிமைச் சின்னங்களைக் கண்டறிந்து அவற்றைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என்ற வேண்டுதலை முன்னெடுத்து வந்திருந்திருப்பதைக் காணமுடிகின்றது. அவ்வேண்டுதலில் ஒன்றை நிறைவு செய்திருக்கும் அரிய வரலாற்றுப் பணியாகவே இன்று யாழ்ப்பாண மாநகர சபையால் முன்னெடுத்துள்ள ஆரியகுளம் மீள்புனரமைப்புப் பணியைப் பார்க்கின்றோம். இது யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் இயற்கை சார்ந்த மரபுரிமைச் சின்னம் என்பதற்கு […]
18.09.2020 அன்று மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் சந்திக்கு அருகில் உள்ள வடக்கு வீதி என்ற இடத்தில் வீடு கட்டுவதற்காக குழிகள் வெட்டியபோது ஒரு குழியில் காணப்பட்ட பானையில் இருந்து 1904 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி 25.09.2020 அன்றிலிருந்து ஊடகங்களில் முக்கிய செய்தியாக காணப்பட்டது. இந்நாணயங்களை அச்சத்துடன் பார்த்த அக்கிராம மக்கள் பூதம் பாதுகாத்து வந்த இந்நாணயங்களை வீட்டில் வைத்திருப்பது ஆபத்து என கூறியதால் அவற்றால் அச்சமடைந்த நானாட்டான் பிரதேச […]
யாழ்ப்பாண நுழைவாயிலான நாவற்குழியில் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்படும் சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் ஆரம்ப நிகழ்வை ஈழத் தமிழர் வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெறப்போகும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கிறேன். இவ் அருங்காட்சியகத்தின் மூலம் எம் முன்னோர்களால் வளர்க்கப்பட்டு எம்மோடு வாழ்ந்துவரும் பாரம்பரிய மரபுரிமைச் சொத்துக்களைச் சிறிதும் பிசகாமல் அடுத்து வரும் சந்ததியினருக்கு கையளிப்பதற்கு வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றது. மூன்று தளங்களில் அமைக்கப்பட்ட இவ் அரும்பொருள் காட்சியகத்தில் வடஇலங்கை மக்களின் பூர்வீக வரலாற்று அடையாளங்கள், […]
வன்னியில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு வன்னியில் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலமையில் தொல்லியல் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்கள் திரு. கபிலன், திரு. மணிமாறன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வரும் தொல்லியல் ஆய்வின் போது வன்னியில் மரையடித்த குளத்திற்கு அருகே பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்றை அடையாளம் கண்டுள்ளனர். இக்கல்வெட்டு அப்பிரதேச […]
இலங்கையின் பூர்வீக மக்கள், அவர்களது பண்பாடு தொடர்பாகக் கூறப்பட்டு வந்த நீண்ட பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகள் சமீபகாலத் தொல்லியல் ஆய்வுகளால் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் நாகரிகயுகம் தோன்றிவிட்டதாகக் கூறும் இலங்கையின் மூத்த தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் சேனகபண்டாரநாயக இலங்கை மக்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் விஜயன் வருகைக்கு முந்திய பண்பாடுகளில் இருந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றார். இதற்கு, விஜயன் தலைமையில் வடஇந்தியக் குடியேற்றம் நடந்தாகக் […]
யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள் பற்றி ஆராய்ந்த பலரும் அவர்கள் சேது என்ற மங்கல மொழி பொறித்த நாணயங்களை மட்டுமே வெளியிட்டனர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் எமது தொல்லியல் ஆய்வின்போது கண்டுபிடித்த நாணயங்களில் இருந்து யாழ்ப்பாண மன்னர்கள் சேது மொழி பொறித்த நாணயங்களுடன் கந்தன், ஆறுமுகன் ஆகிய பெயர்கள் பொறித்த நாணயங்களையும் வெளியிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. வடஇலங்கையில் இவ்வகை நாணயங்கள் பிறராலும் கண்டுபிடிக்கப்பட்டமைக்கு அல்லது சேகரிக்கப்பட்டமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. 1982 […]
2500 ஆண்டுகால இலங்கை வரலாற்றில் வட இலங்கை சிறப்பாக யாழ்ப்பாணம் பாளி மொழியில் நாகதீப(ம்) எனவும், தமிழ் மொழியில் நாகநாடு எனவும் தனியொரு பிராந்தியமாக அடையாளப்படுத்திக் கூறும் மரபு பண்டுதொட்டுக் காணப்படுகின்றது. இதற்கு இப்பிராந்தியத்தில் தோன்றி வளர்ந்த தனித்துவமான பண்பாட்டு அம்சங்களும் ஒரு காரணம் என்பதை அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளும் உறுதிசெய்து வருகின்றன. இதை யாழ்ப்பாண நகரத்திற்கு தெற்கே கடல் நீரேரியுடன் அமைந்துள்ள ஒல்லாந்தர்காலக் கோட்டையின் உட்பகுதியில் 2012- 2017 […]
கோட்டைக்குள் மறைந்து காணப்பட்ட ஆலயங்களின் அழிபாடுகள் கோட்டை மீள் புனரமைப்பு பணிகளின் போது கிடைத்து வரும் வரலாற்றுப் பெறுமதி மிக்க ஆதாரங்களுள் 16 ஆம் நூற்றாண்டில் தற்போதைய கோட்டை கட்டப்படுவதற்கு முன்னர் வழிபாட்டிலிருந்த இந்து ஆலயங்களின் அழிபாடுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இந்தக் கோட்டையைக் கட்டுவதற்கு கோட்டைக்கு அயலில் உள்ள தீவுகளிலும், கடலிலிருந்து கொண்டுவரப்பட்ட கோறல் கற்கள் பயன்படுத்தியதை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் கோறல் கற்களுடன் எந்தவித […]
கோட்டைப் பிரதேசத்தின் பூர்வீக மக்கள் யாழ்ப்பாண நகரின் தொன்மையும் சிறப்பும் பற்றிய வரலாற்று ஆய்வில் அந்நியரான போர்த்துக்கேயர் கட்டிய கோட்டையுடன் முதன்மைப்படுத்திப் பார்க்கும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகின்றது. ஆனால் 2010 இல் இருந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்து வரும் ஆதாரங்கள் கோட்டை அமைந்த இடத்திற்குத் தொன்மையான தொடர்ச்சியான நீண்ட பாரம்பரிய வரலாறு உண்டு என்பதும், அவ்வரலாற்றுப் பின்புலம் தான் இவ்விடத்தைக் கோட்டை கட்டுவதற்குப் பொருத்தமான […]
ஒல்லாந்தர் யாழ்ப்பாண இராச்சியத்தைப் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய பின்னர் தமது தலைமையிடத்தை யாழ்ப்பாண நகரத்திலிருந்து வேறிடத்துக்கு மாற்றுவது தொடர்பில் ஆலோசனைகள் இடம்பெற்றதாகத் தெரிகின்றது. இதனால் முதற் சில ஆண்டுகள் போர்த்துக்கேயருடைய கோட்டையையே ஒல்லாந்தர் பயன்படுத்திவந்தனர். மிக அவசரமான திருந்த வேலைகளையும், பாதுகாப்புக்கு அவசியமான குறைந்தளவு மேம்பாடுகளையுமே செய்யலாம் என்ற உத்தரவும் மேலிடத்தில் இருந்து வழங்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் யாழ்ப்பாண நகரத்திலும், அரசாங்கத்தின் முன் முயற்சியோடு எந்த வேலைகளும் இடம்பெற்றிருக்காது என்று கருதலாம். […]
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் தொடக்க காலம் தொடர்பான யாழ்ப்பாணத்து வரலாறு பற்றியும், அக்காலத்துச் சமூக நிலை பற்றியும் பதிவு செய்த முக்கியமான ஒரு ஆளுமை ஒல்லாந்தப் பாதிரியார் பிலிப்பஸ் பல்தேயஸ் ஆவார். “கிழக்கிந்தியாவின் பெயர் பெற்ற மலபார், கோரமண்டல் கரையோரப் பகுதிகளினதும், இலங்கைத் தீவினதும் உண்மையானதும், துல்லியமானதுமான விபரங்கள்” என்பது ஒல்லாந்த மொழியில் அவர் எழுதிய நூலின் தலைப்பின் தமிழாக்கம். பல்தேயஸ் பாதிரியார் யாழ்ப்பாணத்திலேயே எட்டு ஆண்டு காலம் வாழ்ந்தவர். […]
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஆண்டபோது பண்ணைப் பகுதியில் ஒரு கோட்டையைக் கட்டியிருந்தனர். இது நான்கு மூலைகளிலும் கொத்தளங்களைக் கொண்ட நாற்பக்க வடிவம் கொண்டது. இதன் சுவர்களும் பலம் வாய்ந்தவையாக இருந்தன. சுவருக்கு வெளியே கோட்டையைச் சுற்றி நீரில்லாத அகழி இருந்தது. இது, கிழக்கத்திய நாடுகளில் ஒல்லாந்தரின் தலைமையிடமாக விளங்கிய பத்தேவியாவில் (இன்றைய ஜக்கார்த்தா) இருந்த கோட்டையை விடப் பெரியது என பல்டேயஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். எனினும், அக்காலத்தில், நவீனமாக […]
ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கோட்டையை 1658 யூன் மாதத்தில் கைப்பற்றிச் சில வாரங்களில், இந்தப் படை நடவடிக்கையில் பங்குகொண்ட பெரும்பாலான ஒல்லாந்தப் படையினர் நாகபட்டினத்தைக் கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டனர். யாழ்ப்பாணக் கோட்டையின் பாதுகாப்புக்குக் குறைந்த அளவு படையினரே இருந்தனர். முன்னைய அரசில் பணிபுரிந்த போர்த்துக்கேயர் சிலரும் ஒல்லாந்தருக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பணியாற்றினர். 1658 ஆம் ஆண்டு செப்டெம்பரில் இவர்களில் ஒரு பகுதியினரும், உள்ளூரைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து […]
1940 களில் இருந்தே இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சியில் இருந்த நகரங்கள் படிப்படியாக ஒல்லாந்தரிடம் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டன. 1956 ஆம் ஆண்டில் கொழும்பும் வீழ்ச்சியடைந்த பின்னர், ஒல்லாந்தரின் கவனம் யாழ்ப்பாணத்தின் மீது திரும்பியது. இதற்கிடையில், கொழும்பிலிருந்து வெளியேறிய போர்த்துக்கேயப் படை வீரர்களில் ஒரு பகுதியினர், போர்த்துக்கேயரின் ஆட்சி நிலவிய கடைசி நகரமான யாழ்ப்பாணத்துக்கு வந்துசேர்ந்தனர். இவர்களில் ஒருவர், யோன் ரிபெய்ரோ. இவர் பின்னர் இலங்கை குறித்து, இலங்கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல் […]
இலங்கையின் வரலாறு தொடர்பில், போர்த்துக்கேயப் பாதிரியாரான பெர்ணாவோ டி குவைரோஸ், “இலங்கை மீதான உலகியல், ஆன்மீக வெற்றி” (Temporal and Spiritual Conquest of Ceylon) என்னும் நூல் மிகவும் முக்கியமானது. இலங்கை வரலாற்றைப் பொறுத்த அளவில், மகாவம்சத்துக்கு அடுத்ததாகப் பெறுமதி வாய்ந்த நூலாக இதைக் கருதலாம் என இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான எஸ். ஜி. பெரேரா குறிப்பிட்டுள்ளார். போர்த்துக்கேய மொழியில் எழுதப்பட்ட இந்நூல், 1930 ஆம் ஆண்டு […]
யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆட்சி போர்த்துக்கேயரின் கையில் இருந்த 38 ஆண்டுகாலத்தில் கத்தோலிக்க மதத்துக்கு மட்டுமே அனுமதி இருந்தது. அதற்கு அரசாங்க ஆதரவும் இருந்தது. அப்போதைய யாழ்ப்பாண நகரில் பல கத்தோலிக்கத் தேவாலயங்கள் இருந்தன. இவற்றுள் ஒன்றைத் தவிர ஏனையவை 1621 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவானவை. அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் மதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மூன்று கிறித்தவ சபைகளைச் சேர்ந்தோரும் நகரத்தில் குரு மடங்களையும், தேவாலயங்களையும் நிறுவியிருந்தனர். இவர்களுள் யாழ்ப்பாணம் […]
1618 – 1622 காலப் பகுதியில் இலங்கையில் இருந்த போர்த்துக்கேயப் பகுதிகளுக்கான ஆளுனராகப் பதவி வகித்தவன் கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோஞ்ஞா (Constantino de Sá de Noronha) என்பவன். இலங்கையில் போர்த்துக்கேயரின் நலன்களை விரிவாக்குவதில் இவன் தீவிரமாக இருந்தான். இவனது திட்டங்களின் ஒரு பகுதியாக யாழ்ப்பாண இராச்சியத்துக்கு அனுப்பப்பட்டவனே பிலிப் டி ஒலிவேரா. யாழ்ப்பாண அரசனிடமிருந்து வரவேண்டியவற்றை அறவிடுவதற்காக என்ற போர்வையில் வந்தாலும், யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றுவதற்கும் […]
போர்த்துக்கேயர் 1619 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாண இராச்சியத்தைத் தமது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்றும், அதன் பின்னரே யாழ்ப்பாண நகரம் உருவானது என்றும் முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன். இன்றைய கட்டுரையில் காணும் விடயங்கள் யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றுக்குள் அடங்கவில்லை. எனினும், யாழ்ப்பாண நகரம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த போர்த்துக்கேயச் செல்வாக்குப் படிப்படியாக அதிகரித்தது தொடர்பான விபரங்களை இது விளக்குகின்றது. போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முன்னர் […]
யாழ்ப்பாண இராச்சியத்தினதும், பிற்காலத்தில் இலங்கையின் வடபகுதியினதும் தலைநகரமாக யாழ்ப்பாண நகரத்தை இன்று குறிப்பிடும்போது, அதற்கு முன்னர் இப்பகுதியில் தலைமையிடமாக இருந்த நகரங்களைப் பற்றியும், யாழ்ப்பாண நகரம் தலைமையிடமாக ஆன வரன்முறை பற்றியும் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். கதிரமலை (கந்தரோடை) கி. மு 5 ஆம் நூற்றாண்டிலிருந்தே யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் குடியேற்றங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 1918 இலும் பின்னர் 1970 ஆம் ஆண்டிலும் கந்தரோடைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் […]