கட்டுக்கரையும் பெருங்கற்காலப் பண்பாடும் கட்டுக்கரையில் நுண்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பெருங்கற்காலப் பண்பாடு தோன்றியுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட இரு அகழ்வாய்விலும் இப்பண்பாடு பற்றிய ஆதாரங்களே அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வடஇலங்கை வரலாற்றுக்கு சிறப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றிற்குப் புதுவெளிச்ச மூட்டுவதாக உள்ளன. பெருங்கற்காலப் பண்பாடு என்பது இறந்தவர்களுக்கான ஈமச் சின்னங்கள் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதால் தோன்றிய பெயராகும். ஆதிகால மக்கள் இறந்தவர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கையில் தமது […]
இலங்கை தொடர்பாக அண்மைக் காலங்களில் வெளிவந்த வரலாற்று ஆய்வுகள், அரச வரலாற்றுப்பாட நூல்கள், தொல்லியற் கண்டுபிடிப்புக்கள் என்பன இலங்கையின் பூர்வீகமக்கள், பண்பாடு என்பவற்றின் தொடக்க காலத்தை விஜயன் வருகைக்கு முந்திய நாகரிகத்தில் இருந்து ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும் என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாக உள்ளன. பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கையின் பூர்வீக வரலாறு தீபவம்சம், மகாவம்சம் முதலான பாளி இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுவந்துள்ளன. அவ்விலக்கியங்கள் கி.மு.6ஆம் நூற்றாண்டளவில் வடஇந்தியாவில் இருந்து விஜயன் தலைமையில் […]