Blogs - Ezhuna | எழுநா

இலங்கையில் நூலகவியற் கல்வி – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

ஒரு நாட்டின் பண்பட்ட சமுதாயத்தினை உருவாக்குவதற்குக் கல்வி நிறுவனங்கள் எந்த அளவுக்கு உதவுகின்றனவோ, அதே போன்ற பங்களிப்பினையே நூலகங்களும் ஆற்றி வருகின்றன. சிறு வயது முதல் மாணவர்களுக்கு அறிவுத் துறையில் ஆர்வத்தையும் அறிவையும் ஊட்ட அக்கறை எடுக்கும் ஓர் ஆசிரியனைப் போலவே நூலகமும் தான் சார்ந்த சமூகத்தினுள்ளே சேவையாற்ற வேண்டியுள்ளது. ஆசிரியருக்கு எதைப் போதிப்பது என்றதொரு வரையறை உண்டு. ஆனால் நூலகங்களின் வழங்கல் எல்லையற்றது. சுதந்திரமானதும் விரிவானதுமான தேடலுக்கு ஒருவரை […]

மேலும் பார்க்க

பராந்தகனின் ஈழத்து வெற்றியும் உரக நாணயமும்

19 நிமிட வாசிப்பு

இலங்கையிலும், தமிழகத்திலும் கிடைத்த நாணயங்களில் ‘ஸ்ரீலங்கவீர’, ‘உரக’ என்ற பெயர்பொறித்த பொன், செப்பு நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவற்றை முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையில் அடைந்த வெற்றிக்காக இலங்கையிலேயே வெளியிட்டான் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு கூறுவதற்குப் பல காரணங்கள் காட்டப்படுகின்றன. இந்நாணயங்களில் பெரும்பாலானவை இலங்கையில், குறிப்பாக வடஇலங்கையிலும் தமிழ்நாட்டில் சோழமண்டத்திலுமே கிடைத்துள்ளன. பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் வெற்றி கொண்டதற்காக செப்பு நாணயங்களை வெளியிட்ட இராஜராஜ சோழன் இலங்கை வெற்றிக்காக […]

மேலும் பார்க்க

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் இனத்துவ அரசியலும் ஜனநாயகச் செயல்முறையும் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : நவரட்ண பண்டார பேராசிரியர் A.M நவரட்ண பண்டார அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் மூத்த பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் 1990 கள் முதல் இன்றுவரை இலங்கையில் இன ஐக்கியம், சமூகநீதி, ஜனநாயகம் என்பவற்றுக்காக தமது புலமைத்துறை ஆய்வுகள் மூலம் பங்களிப்புச் செய்து வருபவர். ‘Ethnic Politics and the Democratic Process in Post – Independence Sri Lanka’ என்னும் […]

மேலும் பார்க்க

இரு வேறு சிந்தனைப் போக்குகள் – கூத்துக் கலையின் ஊற்றுக் கண்கள்

18 நிமிட வாசிப்பு

மனித மூளையும் அறிவு வளர்ச்சியும் பிரபஞ்சத்திற்கும் மனித இருப்புக்குமான தொடர்புகளை, இவற்றின் உற்பத்திகள், மூலங்கள் அல்லது தொடக்கப்புள்ளிகளை, விலங்கு உலகில் வாழ்ந்த காலத்திலேயே மனித சமூகம் தேடத் தொடங்கி விட்டது. இந்தத் தேடலே விலங்கு உலகிலிருந்து இந்த மனிதக் கூட்டத்தைப் பிரித்து, மனித உலகிற்குக் கொண்டுவந்தது. அதற்கு அடிப்படையாக இருந்தது, விலங்கு மூளையிலிருந்து மாறுபட்டிருந்த மனித மூளையாகும்.  இந்த மூளை எவ்வாறு வளர்ந்தது? மனிதர், புற உலகின்மீது தமது உழைப்பினால் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – உடுவில்

9 நிமிட வாசிப்பு

கோப்பாய்க் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலிருந்து அறியக்கூடிய தகவல்களைப் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் உடுவில் கோவிற்பற்றுத் தொடர்பான விடயங்களை ஆராயலாம். இக்கோவிற்பற்றில் தாவடி, இணுவில், உடுவில், சங்குவேலி, சுன்னாகம் ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன. (படம்-1) ஒல்லாந்தர்கால உடுவிற் கோவிற்பற்று முழுவதும் இன்றைய வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் பகுதியாக அமைந்துள்ளது. எல்லைகள் உடுவில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு கோவிற்பற்று. இதற்குக் கடலேரி அல்லது கடல் […]

மேலும் பார்க்க

இலங்கையில் அரிசி அரசியலும் அதனை எதிர்கொள்வதில் கூட்டுறவுத் துறையின் வகிபாகமும் 

14 நிமிட வாசிப்பு

ஆசியாவில் அரிசி உற்பத்தி ஆசியாவில் உள்ள அரசாங்கங்கள் அதிக அரிசியை உற்பத்தி செய்வதற்கும், உலகச் சந்தையின் உறுதியற்ற தன்மையிலிருந்து தங்கள் அரிசி உற்பத்தித் துறைகளை, அதன் வணிகக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் அரசியல் முயற்சிகள் செய்கின்றன. ஆசியாவில் அரிசியே ஆட்சி செய்கிறது எனலாம். அது தினசரிக் கலோரிகளில் 30 – 76 சதவீதத்தை மக்களுக்கு வழங்குகிறது. மேற்கு நாட்டின் எந்தவொரு உணவும் கிழக்கு நாட்டின் அரிசி உணவின் ஆதிக்கத்தை ஒத்திருக்க முடியாது. […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றுதல் : திட்டங்களும் பரிந்துரைகளும்

14 நிமிட வாசிப்பு

தமிழில் : த. சிவதாசன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகத்தை நான் விமர்சிப்பதற்கு முன் அதற்கு எனது வாழ்த்தைத் தெரிவிக்க வேண்டும். எனது ‘ஜூன் 2018 லங்கா பிஸினெஸ் ஒன்லைன்’ கட்டுரையில் சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகத்தின் வரைபடத்தில் வடமாகாணம் வெறுமனே வறண்ட பிரதேசமாகவே காட்டப்படுகிறது எனவும், யாழ்ப்பாண விமான நிலையத்தைத் தவிர வேறெந்தச் சுற்றுலாத்தலங்களும் அங்கில்லை என்பது போலக் காட்டப்பட்டிருக்கிறது எனவும் விமர்சித்திருந்தேன். ஆனால் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்ட […]

மேலும் பார்க்க

வடக்கு மாகாணத்தின் காலநிலை தொடர்பான பரிந்துரைகள்

10 நிமிட வாசிப்பு

இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் காலநிலை தொடர்பான ஆய்வுகளுக்காக துல்லியமான காலநிலைத் தரவுகளைப் பெறுவது பிரதான பிரச்சினையாக இருக்கின்றது. 1985 இற்கு முன்னர் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் வானிலை மூலக்கூறுகளை அவதானித்து அளவிடும் பல வானிலை மற்றும் மழை அளவீட்டு நிலையங்கள் இருந்தன. ஆனால் முப்பது வருட உள்நாட்டு மோதல் காரணமாக அவற்றில் பல இன்று செயற்படவில்லை. 13 மழைவீழ்ச்சி நிலையங்கள் மட்டுமே வட பிராந்தியத்தின் 1992 முதல் 2022 வரையிலான […]

மேலும் பார்க்க

ஆங்கிலக் கல்வியும் நவீன நிர்வாக முறையும் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம் 

21 நிமிட வாசிப்பு
November 30, 2024 | பி. ஏ. காதர்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் இலங்கையில் நவீன சமூகம் உருவானது. அது பெருந்தோட்டத்தின் தோற்றத்தோடு ஆரம்பமானது. ஆனால் ஆரம்பத்தில் ஆளும் வெள்ளையர்களுக்கும் ஆளப்படும் இலங்கையர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருந்தது. அதற்குப் பலகாரணங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று மொழி, கலாசார இடைவெளி; இரண்டாவது அப்போது பிரித்தானியாவில் மேலோங்கியிருந்த ‘வெள்ளையரே உயர்ந்த இனம், அவர்களே ஆளப்பிறந்தவர்கள்’ என்ற இனவாதக் கருத்தின் தாக்கம்; மூன்றாவது கண்டிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த சிங்களவர்களை – அங்கு வெடித்த […]

மேலும் பார்க்க

எக்ஸ்பிரஸ் பேர்ள் : பேரிடரின் சிறுதுளி

24 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் 2021 மே மாதம் இலங்கையின் கடற்பரப்பில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரியும் காட்சியைத் தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் ஒளிபரப்பிய போது நாம் எல்லோரும் திகிலுடன் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். குறித்த கப்பலில் இருந்தவர்கள் உயிராபத்தின்றி மீட்கப்பட்டார்கள் என்ற செய்தி ஆறுதலைத் தந்தாலும் கப்பல் ஏன் தீப்பிடித்து எரிகிறது, அக்கப்பல் எவ்வகையான பொருட்களைத் தாங்கியிருந்தது போன்ற வினாக்களுக்கான பதில் உடனடியாக எமக்குக் கிடைக்கவில்லை. இலங்கைத் துறைமுகத்தை தனது பயண […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்