அறிமுகம் ஒரு பிரதேசத்தின் எதிர்கால காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகள் இன்று உலகளாவிய ரீதியில் முதன்மை பெற்ற விடயங்களாக மாறி வருகின்றன. எதிர்கால காலநிலை மாற்றம் பற்றிய விடயங்களை அறிந்து கொள்வதன் ஊடாக காலநிலை மாற்றத்தை குறைப்பதற்கான அல்லது இயைபாக்குவதற்கான செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்க முடியும் என்ற அடிப்படையில், எதிர்காலக் காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகளை பல்வேறு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன (Hamadamin & Khwarahm, 2023). காலநிலை மாற்றத்திற்கு […]
ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பின்வீதியில், அமைதியான சூழலில் கம்பீரமாகக் காட்சிதந்த ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனம், கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களால் 1964 இல் மறைந்துவிட்ட அவரது அன்பு மனைவி அமரர். ஈவ்லின் விஜயரட்ன இரத்தினம் அம்மையார் அவர்களின் ஞாபகார்த்தமாக 1981 இல் கட்டப்பட்டது. கட்டடக் கலைஞர் வி.எஸ். துரைராஜா அவர்களின் ‘துரைராஜா அசோஷியேட்ஸ்’ நிறுவனத்தின் (கொழும்பு) வடிவமைப்பில் இரண்டு மாடிக் […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் வெலிவிற்ற கிராமத்தில் சமூக நிலைமாற்றம் (Social Transformation) நிகழ்ந்தது. அந்நிலை மாற்றம் கண்டிப் பிராந்தியம் முழுமைக்கும் பொதுவானதாக இருந்தது என ரியுடர் சில்வா அவர்கள் குறிப்பிடுகிறார். இச்சமூக நிலைமாற்றம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, கருத்தியல் என அனைத்துக் கூறுகளையும் தழுவியதாக இருந்ததெனவும் அவர் கூறுகின்றார். வெலிவிற்றவின் பொருளாதார நிலைமாற்றத்தை எடுத்துக் கொண்டால் அது: அ) வெலிவிற்றவின் […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா ஜோரஜ்.ஈ.டி. சில்வாவின் எழுச்சி கண்டிப் பிராந்தியத்தின் அரசியலில் ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவின் பிரவேசம் பற்றிக் குறிப்பிட்டோம். இப்பகுதியில் அவரின் எழுச்சியைப் பற்றி பேராசிரியர் ரியுடர் சில்வா அவர்கள் கூறியிருப்பனவற்றைத் தழுவி விளக்கிக் கூறுவோம். ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா (1879-1951) 1879 ஆம் ஆண்டு பிறந்தவர். 1951 ஆம் ஆண்டில் அவர் காலமானார். 1931-1947 காலத்தில் டொனமூர் அரசியல் யாப்பின் படி அமைக்கப்பட்ட சட்ட […]
அனுராதபுரத்தை ஆறாம் அக்கபோதி மன்னன் ஆண்டு வந்த காலத்தில் (722 – 734) சுவையான ஒரு சம்பவம் இடம்பெற்றது. அவன் தன் மகள் சங்காதேவி என்பவளை அக்கபோதி என்ற பெயர் கொண்ட இன்னொரு இளவரசனுக்கு மணமுடித்து வைத்திருந்தான். ஏனோ அவர்கள் இருவருக்கும் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை. கணவன் – மனைவிச் சண்டையில் ஒருநாள் அவன் அவளை கடுமையாக அடித்துவிட சங்காதேவி தன் தந்தையிடம் சென்று முறையிட்டிருக்கிறாள். தந்தை அக்கபோதி, அவளை கொஞ்சக் […]
அனுராதபுரம் புனித நகரில் உள்ள இசுருமுனிய விகாரையின் தெற்குப் பக்கத்தில் சுமார் 600 மீற்றர் தூரத்தில் வெஸ்ஸகிரிய கற்குகைகள் மற்றும் கட்டிட இடிபாடுகளைக் கொண்ட வளாகம் அமைந்துள்ளது. சுமார் 500 மீற்றர் நீளம் கொண்ட இவ்வளாகத்தின் மத்தியில் உள்ள நீண்ட பாறைத் தொடரில் 10 இற்கும் மேற்பட்ட கற்குகைகளும், இங்கிருந்து சற்று தூரத்தில் இன்னும் சில கற்குகைகளும் உள்ளன. இங்கு மொத்தமாக 24 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றைத் […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா ஆய்வு வினாவும் ஆய்வுப் புதிரும் “கண்டியின் சிங்களச் சமூகத்தில் சாதிக்கும் ஜனநாயகப்படுத்தலுக்கும் (Caste and Democratisation) இடையிலான உறவை ஆராய்வதே இக்கட்டுரையில் நான் ஆராயவிருக்கும் பிரதான ஆய்வுப் பிரச்சினையாகும் (The Key Research Question – பக். 450)” மேற்கூறியவாறு தாம் ஆராயவிருக்கும் ஆய்வுப் பிரச்சினை யாது என்பதைப் பேராசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையின் முற்பகுதியில் தெரிவிக்கின்றார். இவ்வாறு தமது […]
தமிழரும் சோனகரும் : ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் தமிழர்களதும், சோனகரதும் குடியிருப்புப் பகுதிகள் பெரும்பாலும் ஒரே தன்மையானதாகவே இருக்கும். அவை மணல் பாதைகளில் ஒரு தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டுப் பகுதியும் சுற்றுச்சுவர்களால் அல்லது வலிமையான கம்பி வேலிகளால் பாதுகாக்கப்பட்டு, செம்பருத்திச் செடிகள், தென்னை, பாக்கு மற்றும் மா போன்ற மரங்கள் செழிப்பாக நடப்படுகிறது. சாதாரணத் தமிழ் வீடுகள், கிழக்கே கவனமாகப் பெருக்கப்பட்ட மணல் முற்றத்தை நோக்கிய பாரம்பரியத் தரைத் திட்டத்தைப் […]
“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுஉண்டாகச் செய்வான் வினை”-திருக்குறள் (758)- மு. கருணாநிதி விளக்கம் : தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது. பகிர்வுப் பொருளாதாரம் என்பது பொருட்கள், வளங்கள் போன்றன தனிநபர்கள், குழுக்களால் ஒரு கூட்டு வழியில் பகிர்ந்து கொள்ளப்படுவது. எமது மூதாதையர் பல காரணங்களுக்காக, […]
1 1949 இல் குரியன், குஜராத்தில் உள்ள ஆனந் நகருக்கு வந்தபோது அவருக்கு வயது 28. அப்போது அவர் அங்குள்ள விவசாயிகளை நம்பவைத்தார்; அவர்கள் உற்பத்தி செய்யும் பால் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது, அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவர்களின் பாலில் உரிமை கோர அதிகாரம் இல்லை என கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வழிகாட்டினார். வியாபாரிகள் மற்றும் முகவர்களால் உள்ளூர்ப் பால் பண்ணையாளர்கள் சுரண்டப்படுவதற்கு பதிலாக, அமுல் டிசம்பர் 19, 1946 […]