உலக அரங்கில் சமூக மாற்றச் செல்நெறி வர்க்கப் போராட்டங்கள் வாயிலாக மட்டும் நடந்தேறி வரவில்லை; வர்க்கப் பிளவுறாத காரணத்தால் புராதனப் பொதுவுடமைப் பண்புகளைத் தம்மகத்தே கொண்டு இயங்கி வந்த ஆசிய உற்பத்தி முறைமைக்கு உரிய எமது வாழ்வியலில் இன்னொரு வகையிலான சமூக அமைப்பு மாற்றப் போக்கு இடம்பெற்று வந்துள்ளது என்பதனைக் குறித்து இந்தத் தொடரில் பேசி வருகிறோம். முழுச் சமூக சக்திகள் மேலாதிக்கம் பெற்றதன் வாயிலாக ஏனைய முழுச் சமூக […]
10 ஆம் நூற்றாண்டில் இராசநாட்டில் இருந்த அனுராதபுரச் சிங்கள அரசு இலங்கை சோழ அரசின் ஆட்சியின் கீழ் வந்துவிடுகின்றது. அக்கால ஆசியாவின் ஆதிக்க சக்திகளாக விளங்கிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய வணிக கணங்களும் அனுராதபுர அரச வம்சத்தினரிடையே காணப்பட்ட ஆட்சிப் போட்டியும் சோழர் இலங்கையுள் நுழைவதற்கு சாதகமாக விளங்கின. மெல்ல மெல்ல இவ்வாதிக்கமானது முழு இராச நாட்டிலும், அக்கால இலங்கைத் தலைநகர் அனுராதபுரத்திலும் கிளர்ச்சிகள், அரசியல் கலவரங்களின் வழியே அதிகாரத்தைக் […]
அம்பாறை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் பொத்துவில் நகரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 18 கி.மீ தூரத்தில் பானமை என்னும் ஊர் காணப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் மக்கள் வாழும் கடைசி ஊர் எனும் பெருமை பெற்ற ஊர் பானமையாகும். வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவில் ஆரம்பமாகும் கிழக்குக் கரையோர கடற்பாதை கொக்கிளாய், புல்மோட்டை, திருகோணமலை, மூதூர், வாகரை, மட்டக்களப்பு, கல்முனை, திருக்கோயில், பொத்துவில் ஊடாக 380 கி.மீ தூரத்தில் உள்ள பானமையுடன் முடிவடைகிறது. […]
அறிமுகம் மனிதர் சமூக விலங்காக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இயற்கையுடனிணைந்த வாழ்வில் தன் தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டேயிருப்பது மனிதரியல்பாகும். இயற்கையை வெல்ல முடியாத தருணங்களில் எல்லாம் மனிதர் ‘இயல்பிறந்த’ ஆற்றலாக அதனைக் கருதி அச்சத்துடன் வழிபட, விசுவசிக்க, இறைஞ்சி நிற்கத் தலைப்பட்டனர். தான் நினைத்தது சித்திக்கச் சித்திக்க, மேலும் விசுவசிக்கவும் இறைஞ்சவும் நம்பிக்கை கொள்ளவும், தன் பகுத்தறிவைப் புறந்தள்ளி, அளவற்ற பக்தி கொள்ளவும் தலைப்பட்டனர். அது வயது, […]
தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று மரபு கொண்ட ஒரு நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் பரவியபோது கூடவே அம் மத வரலாற்றைப் பேணும் மரபும் அறிமுகமாகியது. இவ்வரலாற்று மரபை அடிப்படையாகக் கொண்டு தீபவம்ஸ (கி.பி 4 ஆம் நூற்றாண்டு), (மகாவம்ஸ கி.பி 6 ஆம் நூற்றாண்டு), சூளவம்ஸ முதலான பாளி நூல்கள் எழுந்தன. இவை பௌத்த விகாரைகளில் வைத்து எழுதப்பட்டதினால் அம் […]
ஆங்கில மூலம் : V.K. நாணயக்கார அரசறிவியல் கலைக்களஞ்சியம் என்னும் இப்புதிய தொடரின் முதலாவது கட்டுரையாக பாராளுமன்ற அரசாங்க முறையும் ஜனாதிபதி அரசாங்க முறையும் என்னும் இக்கட்டுரை அமைகிறது. இவ்விரு அரசு முறைகளையும் ஒப்பீட்டு முறையில் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் 7 திறவுச் சொற்களுக்கான (Key Words) விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இத்திறவுச் சொற்களின் தேர்வுக்கு V.K. நாணயக்கார அவர்கள் எழுதிய ‘In Search of a New […]
இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகவியல் துறையின் வளர்ச்சிப் போக்கில் முக்கியமானதொரு காலகட்டமாக எழுபதுகளின் நடுப்பகுதி கருதப்படுகின்றது. அக்காலகட்டம் வரையில் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ளூராட்சி சேவையில் நூலக சேவகர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு கல்வித்தரம் அக்கறையுடன் எதிர்பார்க்கப்படவில்லை. பெருமளவில் கிராமசபை, நகரசபை சிற்றூழியர்களாக இருந்தவர்கள் பதவி உயர்வு கண்டு அவர்களது நிரந்தரப் பணிக்கு மேலதிகமாக தத்தமது கிராம நூலகங்களை பராமரிக்கும் நூலக சேவகர்களாக நியமனம் பெற்றார்கள். கிராமசபை நிர்வாக ஊழியர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் நூலகத்தையும் […]
ஈழத்து மரபு வழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி – வடமோடி சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி, கரகம், காவடி என அது பன்முகப்பட்டது. இவற்றில் சில அழிந்து விட்டன. சில கால ஓட்டத்தோடு நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்டு வந்த பண்பாட்டுக் கலப்புகளும் அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளும் இம் […]
தமிழில் : த. சிவதாசன் இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ‘சுற்றுலாத் தளங்கள்’ என்ற வரைபடத்தின் படி, வடமாகாணத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு சுற்றுலாக் கவர்ச்சியாக யாழ். விமான நிலையம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இவ்வரைபடம் யாழ். விமான நிலையத்தையாவது காட்டுகிறதே என நாம் பூரிப்படைய வேண்டும். விமான நிலையத்தைத் தவிர வடமாகாணத்தின் அனைத்துப் பகுதிகளுமே வறண்ட பிரயோசனமற்ற பிரதேசங்களெனவே இப்படம் காட்டுகிறது. வடக்கில் […]
ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ் றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்கள் எழுதிய ‘Comparing Federal Systems’ என்னும் நூல் 12 நாடுகளின் சமஷ்டி முறைகளை ஒப்பிட்டு ஆராயும் நூலாகும். இந்நூலை கனடாவின் ‘Queen’s University’ வெளியிட்டுள்ளது. இந்நூலின் 2 ஆவது அத்தியாயம் ஒப்பீட்டு ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சமஷ்டி முறைகளின் சிறப்புக் கூறுகளை ஒப்பீட்டு முறையில் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வத்தியாயத்தில் றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்கள் கூறியிருக்கும் கருத்துகளைத் […]