ஒரு கால்நடை வைத்தியராக இலங்கையின் கறவை மாடுகளின் நலன் தொடர்பாக அவதானித்தவை மற்றும் நடைமுறைகளை இந்தக் கட்டுரையில் ஆராயப் போகிறேன். உலகளாவிய ரீதியில் கறவை மாடுகள் மற்றும் ஏனைய விலங்குகளின் நலன் தொடர்பாக நவீன எண்ணக்கருக்களுடன் கூடிய சட்டங்கள் உள்ளதுடன் அந்தச் சட்டங்கள் மிக மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இலங்கையில் 1907 இல் பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சட்டமான ‘Prevention of cruelty to animals ordinance’ (1907) நடைமுறையில் […]
இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வருபவர்கள். தங்களது மத அடையாளமான இஸ்லாமும், மொழி அடையாளமான தமிழும் இணைந்த ஒரு தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை நிறுவி தங்களை ஒரு தனி இனமாக நிறுவிக் கொண்டவர்கள். இதனால் இலங்கை வரலாற்றில், அவர்கள் பின்பற்றி வரும் இஸ்லாம் பாரம்பரியத் தன்மைகளோடு இலங்கை – இந்திய மண்ணோடும், பிற பண்பாடுகளோடும் ஊடாட்டம் கொண்ட மதமாகவும் இருந்து வருகிறது. தனது மொழி அடையாளமான […]
I தென்னாபிரிக்காவில் காந்தியும் பீஜி, மொறிசியஸ் முதலான நாடுகளில் மணிலாலும் புலம்பெயர்ந்த இந்தியரின் விடுதலைக்கான போராட்டங்களைத் தலைமைதாங்கி முன்னெடுத்ததுபோல இலங்கையில் இந்தியத் தொழிலாளரின் மீட்சிக்கான போராட்டங்களை கோ. நடேசய்யர் முன்னெடுத்துள்ளார். தஞ்சாவூரின் தென் ஆற்காட்டில் வளவனூர் கிராமத்தில் ஜனவரி 14, 1887 அன்று பிறந்த அவர் 1920 ஆம் ஆண்டு முதல் மரணிக்கும் வரை (நவம்பர் 07, 1947) இலங்கையில் வாழ்ந்துள்ளார். பத்திரிகை ஆசிரியர், சட்ட நிரூபண சபை – […]
மனவடுக்களின் காலம் ‘Prisoner #1056’ என்கின்ற இந்தச் சுயசரிதை நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலாவது பகுதி, ரோய் ரத்தினவேல் என்பவர் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள் பற்றியது. இரண்டாவது பகுதி கனடாவில் அவர் பெறுகின்ற அனுபவங்கள் குறித்தது. இலங்கையில் பிறந்த ரோய் ரத்தினவேல் போரின் நிமித்தம் அனுபவித்தவை மிகுந்த துயரமானவை. ரோய் கொழும்பில் பிறந்தாலும், நாட்டு நிலைமைகளால் அவரது தாயாரோடும், தமையனோடும் பருத்தித்துறைக்கு அனுப்பப்படுகின்றார். தகப்பன் மட்டும் […]
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் நகரைக் கடந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வீதியில் உள்ள ஈச்சிலம்பத்தைச் சந்தியில் பிரதேச செயலகம் காணப்படுகிறது. இச்சந்தியில் இருந்து கிழக்குப் பக்கமாகச் செல்லும் வீதியில் ஈச்சிலம்பத்தையைக் கடந்து செல்லும்போது சுமார் 3 கி.மீ தூரத்தில் உப்பாறு எனும் ஆறு ஓடுகிறது. இவ்விடத்தில் கல்லடி ஆற்றுத் துறையடி அமைந்துள்ளது. சுமார் 100 மீற்றர் அகலமான இவ்வாற்றை படகு மூலம் கடந்து கிழக்குப் பக்கமாக மேலும் ஒரு கி.மீ […]
அறிமுகம் மனிதகுலம் ஏனைய உயிரினங்களில் இருந்து வேறுபட்டு தனி அடையாளங்களோடு – பகுத்தறிதலோடு இயங்கத் தொடங்கிய இனக்குழுமக் காலந்தொட்டு வீரம் – போர் என்பன தவிர்க்க முடியாதவையாகி விட்டன. தனக்காக மட்டுமன்றி இனக் குழுவுக்காகப் போராடுதலும் இன்றியமையாததாயிற்று. தமக்காகப் போராடி உயிர்நீத்த தலைவனை அல்லது வீரனை அவ்வவ் இனக்குழு மக்கள் போற்றினர். இனக்குழுவின் பகையை வெல்லல், வேட்டை, குழுவின் தேவைகளை நிறைவேற்றல், பகை விலங்குகளைக் கொல்லுதல் – வெல்லுதல் என […]
ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ண இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை அறிமுகம் செய்யப்பட்டு 46 ஆண்டுகள் கடந்து விட்டன. இந் நீண்டகால எல்லையுள் இம்முறையின் கீழ் நடந்தேறிய அனைத்து ஜனநாயக விரோதச் (Un – Democratic) செயற்பாடுகளையும் மூன்று கருத்தியல்களின் (Ideologies) துணையுடன் புரிந்து கொள்ள முடியும் எனக் கருதுகின்றோம். முதலாவதான பெரும்பான்மைவாதம் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஒடுக்கு முறைக்கான அரசியல் நிறுவனங்களை (Political Institutions) கட்டமைத்து அவற்றைப் […]
மிக நீண்டநெடிய காலச் சுழற்சியுடன் இயங்கியவாறுள்ள இந்தப் பூமிப் பந்தின் மிகக் குறுகிய இலட்சம் வருடங்களுக்கான வாழ்வைப் பெற்ற ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் மனிதர்களான நாம் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பூமிப் பந்தின் அனைத்துத் திசைகளிலும் பரந்து வியாபித்து ஆட்சி செலுத்தும் சக்தியாக ஆகியிருந்தோம். மிகச் சில நூற்றாண்டுகளில் தோற்றம்பெற்று விருத்தியடைந்த மூலதனம் பூவுலக நாடுகள் அனைத்தையும் ஒரு கிராமம் போல ஒருங்கிணைத்துக் கொண்டது. மூலதன விருத்தியின் நல்ல […]
அறிமுகம் இலங்கைத் தமிழரின் பாரம்பரியத் தாயகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஆதிக்குடிகள், அவர்களின் மொழி, பண்பாடு என்பன பொறுத்து வரலாற்று ஆசிரியர்களிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இற்றைக்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் இங்கு தொன்மையான தமிழர் நாகரிகமும், சுதந்திர தமிழரசும் ஆதியில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உறுதியான தொல்லியல் ஆதாரங்கள் அற்ற நிலையில் இலக்கியச் சான்றுகளை மட்டும் வைத்து இக்கருத்து கூறப்பட்டதினால் பிற்கால […]
“உன்னைக் கொல்லாமல் விடுவது எதுவோ, அதுவே உன்னை மேலும் பலப்படுத்தும்” என்றொரு பிரபலமான சொல்வழக்கு 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜேர்மன் தத்துவ ஞானி பிறெட்றிக் நீட்சேயினால் முதலில் பாவிக்கப்பட்டது என்பார்கள். இக்கூற்று கொஞ்சம் மிகை நாடகப் பாணியானதும் பெரும்பாலும் உண்மையற்றதுமெனக் கருதப்பட்டாலும் யாழ் ஜீக் சலஞ் (Yarl Geek Challenge – YGC) இற்கு இது மிகவும் பொருத்தமானது. YGC ஒரு போட்டி நிகழ்வு. எனக்குப் பிடித்தமான அதற்கு, […]