Blogs - Ezhuna | எழுநா

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – நல்லூர்

11 நிமிட வாசிப்பு

சென்ற கட்டுரையில் சுண்டிக்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்தில் உள்ள விவரங்களைப் பற்றிப் பார்த்தோம். இனிப் போர்த்துக்கேயருக்கு முன் தலைநகரமாக இருந்த நல்லூரை உள்ளடக்கிய நல்லூர்க் கோவிற்பற்றைப் பற்றி ஆராயலாம். இக் கோவிற்பற்றில் நல்லூர், தின்னவேலி (திருநெல்வேலி), கொக்குவில், கோண்டாவில் ஆகிய நான்கு துணைப் பிரிவுகள் உள்ளன.  லெயுசிக்காமின் நிலப்படத்திலுள்ள நல்லூர்க் கோவிற்பற்றின் எல்லைகளைப் பார்க்கும்போது அது முழுவதும் இன்றைய நல்லூர் பிரதேசச் செயலர் பிரிவுக்குள் அடங்கியிருப்பதைக் காணமுடிகிறது. உள்ளூராட்சிப் பிரிவுகளைப் […]

மேலும் பார்க்க

­இடதுசாரி நோக்கில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் – பகுதி 1

13 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ண 2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கையின் நிறைவேற்று அதிகார முறையை ஒழித்தல் என்னும் விடயம் முக்கிய பேசுபொருளாக ஆகியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், இம் முறையை நீக்கி பாராளுமன்ற முறைக்கு (Parliamentary System) மீண்டும் திரும்புவதற்கான சாதக நிலையை உருவாக்கலாம் என நம்பப்படுகின்றது. இப் பின்புலத்தில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை பற்றிய விமர்சன நோக்கிலான ஆய்வுகளைத் தமிழ் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் […]

மேலும் பார்க்க

வட மாகாணத்தில் இடி – மின்னல் நிகழ்வுகள்

10 நிமிட வாசிப்பு

அறிமுகம்  அனர்த்தம் என்பது இயற்கை மற்றும் மானிடவியற் காரணிகளினால் தூண்டப்படுகின்றது. அது உலகின் ஒட்டுமொத்த உயிர்ச்சூழலுக்கும், குறிப்பாக மனித சமூகத்திற்கு உடல், உள, சொத்துகள் மற்றும் சுற்றுச் சூழலியல் ரீதியாக இடர்பாடுகளினை ஏற்படுத்துகின்ற அனைத்து நிகழ்வுகளினையும் குறித்து நிற்கின்றது (Amri et al., 2023). மேற்குறிப்பிட்ட  இயற்கை அனர்த்தங்களில் இடி – மின்னலும் ஒன்றாகும். அதாவது இயற்கை மற்றும் மானிடக் காரணிகளினால் தூண்டப்படுகின்ற காலநிலை மற்றும் நீர் சார்ந்த அனர்த்தங்களில் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம்: ஒரு வரலாற்றுக் குறிப்பு – பகுதி 3

19 நிமிட வாசிப்பு

பரமேஸ்வராக் கல்லூரியில் சேர் பொன். இராமநாதன் அவர்களின் நூலகத்தில் இருந்த அரிய நூல்களையும் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம் கொண்டிருந்த 30,000 வரையிலான நூல்களையும் மேலும் பருவ இதழ்கள், அரச ஆவணங்கள், சிறு பிரசுரங்கள் போன்றவற்றையும் கொண்டு யாழ் வளாகம் தன் நூலகச் சேர்க்கைகளைக் கட்டியெழுப்பத் தொடங்கியது. நூலகச் சேர்க்கையையும் தளபாட வசதியையும் படிப்படியாக வளர்த்துச் சென்று பின்னாளில் பிரதம நூலகராகப் பதவியேற்ற சி. முருகவேள் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து […]

மேலும் பார்க்க

காலனித்துவ உயரடுக்கு வர்க்கத்தின் (Elite) உருவாக்கம்

8 நிமிட வாசிப்பு

இலங்கை அரசியலிலும் சமூக வாழ்க்கையிலும் புராதன காலம் தொட்டே சாதியம் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இதற்கு இந்து மதத்தின் தெய்வீக வடிவம் வழங்கிய தாக்கமே காரணமானது. பெளத்த மதம் சாதியத்துக்கு எதிரான ஒரு சித்தாந்தமாகத்தான் உருவானது. இந்தியாவில் அம்பேத்கார் தலைமையில் சாதியத்துக்கு எதிரான வலுவான இயக்கமாக பெளத்த மதம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இலங்கையில் அரசர்களும் பின்னர் காலனியவாதிகளும் – தங்கள் வர்க்க நலனையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கு சாதியம் வலுவான ஆயுதம் […]

மேலும் பார்க்க

உள்ளிருந்து உணர்தலும் சமகால நெருக்கடிகளும்: மட்டக்களப்பு மாவட்டத்தின் கூட்டுறவுக் கால்நடைப் பண்ணையாளர்களின் அனுபவங்கள்

10 நிமிட வாசிப்பு

1977 இல் திறந்த பொருளாதாரம் அறிமுகமான போது பலர் ‘சந்தைப் பொருளாதாரம்’ தான் இலங்கையின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வழி எனக் கருதியதுண்டு. அப்போதைய நெருக்கடியில் அதற்கான ஒரு தேவை இருந்தது. திறந்த பொருளாதாரம் நன்மைகளைக் கொண்டு வந்தாலும் அது பல அதிர்வுகளையும் தந்தது. கூட்டுறவுத் துறை அதனால் மிகவும் நசுக்கப்பட்டது. அரசு கூட்டுறவுத் துறையை ஒரு விளிம்பு நிலைக்கு கொண்டுவந்தது. திறந்த பொருளாதார சுனாமி கூட்டுறவின் கட்டமைப்புகளை சிதைத்தது. ஆனால், இந்தியாவில், […]

மேலும் பார்க்க

சமஷ்டிகளும் சமஷ்டி அரசியல் முறைகளும்

9 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ் ‘சமஷ்டி அரசியல் முறைகளை ஒப்பீடு செய்தல்’ (COMPARING FEDERAL SYSTEMS) என்னும் ஆய்வு நூலினை றொனால்ட் எல். வாட்ஸ் என்னும் அறிஞர் எழுதியுள்ளார். இந்நூலினைக் கனடாவின் ‘Queen’s University’ வெளியிட்டது. இதன் முதற்பதிப்பு 1997 இலும் இரண்டாம் பதிப்பு 1999 ஆம் ஆண்டிலும் வெளியாயின. இந்நூலில் 6 முதல் 14 வரையுள்ள பக்கங்களில் ‘சமஷ்டி குறித்த சொற்களின் வரைவிலக்கணங்களும் சமஷ்டித் தத்துவங்களும்’ (DEFINITION […]

மேலும் பார்க்க

கறவை மாடுகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தல் : இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களை முன்வைத்து

11 நிமிட வாசிப்பு

இலங்கையில் மொத்தமாக உள்ள 1.6 மில்லியன் கறவை மாடுகளில் 405,001 மாடுகள் வடக்கிலும்; 542,805 மாடுகள் கிழக்கிலும் உள்ளன. நாட்டில் மொத்தமாக உள்ள 476,050 எருமை மாடுகளில் 24,164 எருமைகள் வடக்கிலும்; 234,782 எருமைகள் கிழக்கிலும் உள்ளன (கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள புள்ளிவிபரம் – 2022). பெரும்பான்மையான மாடுகள் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற போதும் அவற்றின் உற்பத்தித் திறன் குறைவாகவே காணப்படுகிறது (நாட்டில் மொத்தமாக வருடம் […]

மேலும் பார்க்க

சம்பூர் அனல்மின் நிலையம்: மக்கள் போராடிய பொழுதுகள்

25 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் இலங்கையில் மக்களுக்கும் சூழலுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. ஆனால் அவற்றில் வெற்றியடைந்த போராட்டங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. குறிப்பாக 1978 இல் நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் தோற்றமும் ஜனநாயக விழுமியங்களின் நலிவும் கருத்துரிமைக்குச் சவால் விடுத்தன. 1989-90 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி அடக்கப்பட்ட விதம் இலங்கையெங்கும் கருத்துரிமைகள் குறித்த பாரிய அச்சத்தை விதைத்தது. உள்நாட்டுப் போரின் […]

மேலும் பார்க்க

இனப்படுகொலையை அங்கீகரித்தலின் அரசியல் 

26 நிமிட வாசிப்பு
September 26, 2024 | எழில் ராஜன்

முன்னுரை 1990 களில் மேற்குலகச் சிந்தனைப் பரப்பில் அங்கீகரித்தலின் அரசியல் பற்றிய சிந்தனையின் மீள்வாசிப்பை அறிமுகப்படுத்துகின்ற செல்நெறியை ரெய்லர் (1992), ஹோனரத் (1992), (f) பிறசேர் (1995 – 1997) போன்றோர் முன்னெடுத்திருந்தனர். இவர்களின் கருத்தியல் கட்டமைப்பு ரீதியான பங்களிப்பு மறுக்கப்பட முடியாதது. பின் – காலனித்துவ அரசியல் வரலாற்று வெளியில் சிறு குழுமங்கள், இனங்கள் தாராளவாத சனநாயக பண்பாட்டு நாகரிக முறைமைக்குள் உள்ளீர்க்கப்பட்டு தமது தனித்துவ அடையாளங்களை இழந்து […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்